நெசவுத் தொழிற்துறை
நெசவுத் தொழிற்துறை (Textile industry) அல்லது நெசவுத்தொழில் என்பது நேசவுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்தல், மூலப்பொருட்களை பதப்படுத்துதல், பதப்படுத்திய மூலப்பொருட்களை நூல்களாக நூற்றல், நூற்ற நூல்களை துணிகளாக நெசவு செய்தல், வண்ணம் தோய்த்தல், வண்ணம் தோய்த்த துணிகளை ஆயத்த ஆடைகளாக மாற்றுதல் ஆகிய பணிகளை உள்ளடக்கியதாகும். நெசவுத் தொழிலின் வரலாறு மனித இனம் நாடோடிகளாக திரிந்த காலம் முதல், உணவுகளுக்காக வேட்டையாடியாடுதல், குழுக்களாக பிரிந்து சண்டாயிடுதல் போன்ற நாகரீகம் வளராத காலத்ததிலிருந்தே தொடங்கியது. ஆடைகளுக்கான தேவையும் தேடலும் காலந்தோறும் அதிகரித்து வந்திருக்கிறது.[1]
ஆடைகளுக்கானத் தேவை
[தொகு]வெப்பம், குளிர், மழை, பனி, தூசி மற்றும் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் போன்ற சூழல் காரணிகளிலிருந்து பாதுகாக்க நமக்கு ஆடை அவசியம் ஆகிறது.[2]
இயற்கை இழைகள்
[தொகு]இயற்கை இழைகளானது விலங்குத்தோல்களிலிருந்தும், உரோமங்களிலிருந்தும், தாவரங்களிலிருந்து கிடக்கக்கூடிய பருத்தி, பட்டு, சணல் மற்றும் நார் போன்றவைகளிலிருந்து தயாரிக்கப்படுக்கின்றன.[3]
நாடுகள் வாரியாக நெசவுத் தொழில்
[தொகு]இந்தியா
[தொகு]இந்திய துணைக்கண்டத்தில் ஆடைகள் பயன்பாடு குறித்த ஆரம்பக்காலச் சான்றுகள் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே (கிமு 2600-1900) மேம்பாட்டுக் காணப்படுகின்றன.[4]
பெரிய பிரித்தானியா
[தொகு]பெரிய பிரித்தானியாவில் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் நடுநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் காணப்பட்ட பெரிய செம்மறி ஆட்டு உரோமங்களிலான கம்பளி ஆடைகள் உற்பத்தியாகின.
பாக்கித்தான்
[தொகு]5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிந்து சமவெளி நாகரிகத்தில். மக்கள் கைகளால் பின்னிய ஆடைகளை பயன்படுத்தினார்கள் என்று வரலாற்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.[5] நெசவுத்தொழில் பாக்கித்தானில் மிகப்பெரிய உற்பத்தித் தொழிலாகும். சுமார் 25 மில்லியன் மக்கள் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். 1947ல் பாக்கித்தானில் 6 நூற்பு தொழிற்சாலைகள் இருந்தன. 1985ஆம் ஆண்டடிற்குப் பிறகு 85% இலிருந்து 50% குறைகக்கப்பட்ட சுங்கக் குறைப்பின் காரணமாகவும், பின்னர் 1988இல் 20% ஆக குறைக்கப்பட்ட காரணத்தாலும், நூற்பு மற்றும் நெசவு தொழிற்சாலைகளின் புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதின் விளைவாகவும் நூற்புத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைகள் உயர்ந்தது.[6]
வங்காளதேசம்
[தொகு]வங்கதேசத்தில் நெசவு மற்றும் கைவினைப்பொருட்களின் உற்பத்தி சுமார் பதினான்காம் அல்லது பதினைந்தாம் நூற்றாண்டில் சிறந்து இருந்தன என்று வரலாற்று ஆய்வுகள் குறிக்கின்றன.[7]
எத்தியோப்பியா
[தொகு]நெசவுத் தொழிலானது எத்தியோப்பியாவின் பண்டைய நகரமான அக்சும் நகரத்தோடு தொடர்புடையது ஆகும். இங்கு அதிநவீன தறிகள் மற்றும் திறமையான கைவினைத்திறன் வேலைபாடுகளை உடைய ஆடைகளின் உற்பத்திகள் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நான்காம் நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றாண்டிற்கும் இருந்த அக்சும் பேரரசு காலங்களிலேயே நெசவுத்தொழில் செழித்து இருந்தது.[8]
ஐரோப்பிய ஒன்றியம்
[தொகு]ஐரோப்பாவில் புகழ்பெற்ற தாபெஸ்ட்ரி (Tapestry) என்னும் நேசவுக்கலையானது 14 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செழித்து வளரந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[9]
காத்தலோனியா
[தொகு]காத்தலோனியாவின் நெசவுத் தொழிலானது 1283 மற்றும் 1313க்கு இடையில் முதன்முதலில் முக்கியத்துவத்தை அடைந்தது. மேலும் இங்கு நெசவுத் தொழிலானது நீண்ட காலமாக முதன்மையான தொழிலாக இருந்தது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Das, Anushka (2023-02-28), "History of the Indian Textile Industr", IIAD (in ஆங்கிலம்), retrieved 2024-09-28
- ↑ ""Why do We need Clothes"". Unacademy.com.
- ↑ "10 Different Types of Natural Fabrics". www.sahnifabrics.com. 2023-08-16. Retrieved 2024-09-29.
- ↑ "HISTORY OF CLOTHING IN ANCIENT INDIA". indianculture.gov.in. Retrieved 2024-09-28.
- ↑ Das, Anushka (2023-02-28), "History of the Indian Textile Industry", IIAD (in ஆங்கிலம்), retrieved 2024-09-29
- ↑ Das, Anushka (2023-02-28), "History of the Indian Textile Industr", IIAD (in ஆங்கிலம்), retrieved 2024-09-28
- ↑ Kiron Islam, Mazharul (2020-12-12), "Historical Background of Textile Industry in Bangladesh", textile learner (in ஆங்கிலம்)
- ↑ "A Brief History of Weaving in Ethiopia", albiongould.com (in ஆங்கிலம்), 2024-04-17, retrieved 2024-09-29
- ↑ "tapestry". www.britannica.com. Retrieved 2024-09-29.
- ↑ "Catalonia".
- Cotton: Origin, History, Technology, and Production By C. Wayne Smith, Joe Tom Cothren. Page viii. வெளியீடு 1997 ஜான் வைலி அண்ட் சன்ஸ் Technology & Industrial Arts. 864 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471180459.