நூர்சகான் முர்சித்
நூர்சகான் முர்சித் | |
---|---|
பிறப்பு | தராநகர், முர்சிதாபாத், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா | 22 மே 1924
இறப்பு | 1 செப்டம்பர் 2003 | (அகவை 79)
தேசியம் | வங்கதேசத்தவர் |
பணி | அரசியல்வாதி, சமூக ஆர்வலர் |
வாழ்க்கைத் துணை | கான் சர்வார் முர்சித் (தி. 1948, her death) |
நூர்சகான் முர்சித் என்கிற நூர்சகான் பேக் (Nurjahan Murshid; 22 மே 1924 - 1 செப்டம்பர் 2003) வங்காளதேசத்து பத்திரிகையாளரும், ஆசிரியரும், வங்காளதேச அரசங்கத்தின் அமைச்சரும், சமூக ஆர்வலரும் ஆவார்.[1] ஒன்றிய முன்னனி கட்சி சார்பில் 1954 இல் கிழக்கு வங்கத்தின் மாகாண சட்டமன்றத்திற்கு நேரடியாக தேர்ல்ல இவர் அரசியலைவிட்டு வெளியேறினார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]முர்சித் 22 மே 1924 அன்று முர்சிதாபாத்தின் தாராநகரில் நூர்சகான் பேக்காக பிறந்தார். இவர் 1948இல் வங்காளதேசத்தின் கல்வியாளரும், இராசதந்திரியும், அறிஞருமான கான் சர்வர் முர்சித் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தன.[2]
கல்வி
[தொகு]ஜனாப் அயூப் உசைன் பேக் - பீபி கதிமுன்னெசா ஆகியோரின் ஏழு மகள்களில் நான்காவது பெண்ணாக பிறந்தார். இவரது தந்தை, பிரிட்டிசு காவல் துறையில் முர்சிதாபாத்தில் காவல்துறைத் தலைவராக இருந்தார். இவரது தந்தைவழி மாமா பேராசிரியர் உசாமின் கீழும், கிழக்கு வங்கத்தின் பாரிசலில் உள்ள பிஎம் கல்லூரியின் முதல்வராக இருந்த உத்தீன் பேக்கிடமும் தனது ஆரம்ப பள்ளிப் படிப்பைப் பெற்றார். கொல்கத்தாவின் விக்டோரியா நிறுவனத்தில் முதல் வகுப்பில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]
வேலை
[தொகு]இவர், அனைத்திந்திய வானொலியின் ஒளிபரப்பாளராக இருந்தார். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முதல் முஸ்லிம் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு பாக்கித்தானில் தொடர்ந்து ஊடகங்களில் பணியாற்றினார். வானொலி பாக்கித்தானுக்காக ஒலிபரப்பில் ஈடுபட்டார். மேலும், ஷம்சுல் ஹுதா, லைலா அர்ஜுமந்த் பானு, லைலா சமத் மற்றும் கமல் லோஹானி போன்ற நபர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு நிரல் தயாரிப்பாளராக உயர்ந்தார். இவர் பாரிசலில் உள்ள சையதுன்னேசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல்வராக ஆனார். பின்னர் குவாம்ருன்னெசா பள்ளி, விகருன்னிசா நூன் பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி போன்ற டாக்காவில் பல்வேறு நிறுவனங்களில் கற்பித்தார்.[3]
அரசியல்
[தொகு]ஒன்றிய முன்னனி கட்சி சார்பில் 1954 இல் கிழக்கு வங்கத்தின் மாகாண சட்டமன்றத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பெண்களில் இவரும் ஒருவர். நாடுகடத்தப்பட்ட முஜிப்நகர் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட துணைவராக, இவர் வங்காளதேச விடுதலைப் போருக்கு ஆதரவை உயர்த்துவதற்காக, இந்திய அரசிடமிருந்து வங்காளதேசத்தை அங்கீகரிக்க முயன்றார். பாக்கித்தானிய இராணுவ ஆட்சியாளர்களிடம் ஆஜராகாததால் இவருக்கு 14 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சுதந்திர வங்காளதேசத்தில், இவர் சேக் முஜிபுர் ரகுமானின் அமைச்சரவையில் 1972 இல் சுகாதார மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சேக் முஜிபுர் ரகுமான் படுகொலையை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய வங்கதேச பிரதமர் தாஜுதீன் அகமது உட்பட நான்கு முக்கிய அமைச்சர்கள் சிறையில் கொல்லப்பட்ட பிறகும் வங்காளதேசத்தின் முன்னாள் செயல் தலைவர் சையத் நஸ்ருல் இஸ்லாம், 1975இல் நாடுகடத்தப்பட்ட பிறகும் இவர் அரசியலை விட்டு வெளியேறினார்.[3]
ஊடகம்
[தொகு]1985ஆம் ஆண்டில், இவர் ஏகால் என்ற பங்களா இதழை வெளியிட்டு அதன் ஆசிரியரானார். பின்னர் ஈதேஸ் ஏகால் என மறுபெயரிடப்பட்டது. இது பெண்களின் பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல், வன்முறை, பிரதிநிதித்துவம், ஊழல் மற்றும் ஜனநாயக பற்றாக்குறை உள்ளிட்ட வங்கதேசம் எதிர்கொண்ட பல்வேறு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளையும் ஆராய்ந்தது.
இறப்பு
[தொகு]2002 ஆம் ஆண்டில் முர்சித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, செப்டம்பர் 1, 2003 அன்று டாக்காவில் இறந்தார்.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ Hossain, Md Mukbil (2012). "Murshid, Nurjahan". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ Amin, Sonia (2 September 2010). "Noorjehan Murshid". The Daily Star. https://www.thedailystar.net/news-detail-153198.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Murshid, Tazeen. "Noor Jehan Murshid, or a power woman". The Daily Star. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=247867.