உள்ளடக்கத்துக்குச் செல்

நீல் கமல் பூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீல்கமல் பூரி (Neel Kamal Puri பிறப்பு: பிப்ரவரி 14, 1956) ஓர் இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் கல்லூரி ஆசிரியர் ஆவார். [1] பஞ்சாபின் லூதியானாவில் பிறந்த இவர், பாட்டியாலா சமஸ்தானத்தில் வளர்ந்தார்,யாதவிந்திரா பொதுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் 30 பெண்களில் இவரும் ஒருவராவார். அதற்கு முன்பாக ஆண்கள் மட்டுமே பள்ளியில் பயின்றனர். 1979 முதல், பாட்டியாலா மற்றும் சண்டிகரில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றினார்.தற்போது சண்டிகரில் உள்ள பெண்களுக்கான அரசு கல்லூரியில் இலக்கியம் மற்றும் ஊடகப் படிப்புகளைக் கற்பித்து வருகிறார்.[சான்று தேவை]

புத்தகங்கள்

[தொகு]

பென்குயின் இந்தியாவால் வெளியிடப்பட்ட பாட்டியாலா குவார்டெட் [2] மற்றும் ரூபா பதிப்பகத்தால் வெளியிட்ட ரிமம்பெர் டூ ஃபர்கெட் ஆகிய புதினங்களை எழுதியுள்ளார்.[3] புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங், தி பாட்டியாலா குவார்டெட்டை ஒரு பஞ்சாபி எழுதிய ஆங்கிலப் புனைகதையின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக விவரித்தார்.[4] இவர் பிறந்த மற்றும் வளர்ந்த நகரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதைகளுக்குப் பிறகு, நீலகமல் பூரி தேகா கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் அடுத்ததாக பணியாற்றுகிறார்.[5]

சான்றுகள்

[தொகு]
  1. "Neel Kamal Puri". Penguin Books India. Retrieved 2013-12-03.
  2. "Patiala Quartet". Penguin Books India. 2006-01-01. Retrieved 2013-12-03.
  3. "Neel Kamal Puri". Rupa Publications. Archived from the original on 16 ஆகத்து 2013. Retrieved 3 திசம்பர் 2013.
  4. "The Tribune - Magazine section - Saturday Extra". Tribuneindia.com. 2006-01-14. Retrieved 2013-12-03.
  5. "Punjab's victory over history : Simply Punjabi - India Today". Indiatoday.intoday.in. 2013-02-21. Retrieved 2013-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_கமல்_பூரி&oldid=3823712" இலிருந்து மீள்விக்கப்பட்டது