நீலு புலே
நீலு பாவ் புலே | |
---|---|
ஆரம்பகால திரைப்படத்தில் நீலு புலே | |
பிறப்பு | நீலகண்ட கிருஷ்ணாஜி புலே 4 April 1930 புனே, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 13 ஜூலை 2009 புனே, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | நீலு பாவ் |
பணி | மேடை மற்றும் திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1968–2009 |
வாழ்க்கைத் துணை | இரஜினி (தி. 1975) [1] |
பிள்ளைகள் | 3 |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது (1991) |
நீலு புலே (Nilu Phule; 4 ஏப்ரல் 1930 - 13 ஜூலை 2009) மராத்தித் திரைப்படத்துறை மற்றும் மராத்தி நாடகங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட ஓர் இந்திய நடிகர் ஆவார். நீலு புலே தனது திரைப்பட வாழ்க்கையில் சுமார் 250 மராத்தி மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] இவர் திரைப்படங்களில் முக்கிய எதிர்மறை பாத்திரங்களிலேயே மிகவும் அதிகளவில் நடித்தார். மேலும் புனேவைச் சேர்ந்த விடுதலை இயக்க வீரரும் ஆவார்.
சமூக சேவகரான புலே இராட்டிரிய சேவா தளம் என்ற சமூக அமைப்புடன் தொடர்புடையவர்.[3] இவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து 1991இல் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]புலே 1930 ஆம் ஆண்டில் புனேவில் ஒரு இந்துக் குடும்பத்தில் நீலகண்ட கிருஷ்ணாஜி புலே என்ற பெயரில் பிறந்தார்.
புலே 17 வயதில் புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் தோட்டக்காரராக பணியில் சேர்ந்தார். இப்பணியில் இவருக்கு மாதத்திற்கு 80 ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதில் 10 ரூபாயை தான் செயல்பட்ட இராட்டிரிய சேவா தளம் அமைப்புக்கு நன்கொடை அளித்தார்.[4] தோட்டக்கலை வாழ்க்கையைத் தொடர விரும்பினார். ஆனால் நிதி உதவி இல்லாததால், நாற்றுமேடை பணிகளைத் தொடங்க முடியவில்லை.[5] இந்த நேரத்தில், தனது 20 வயதில், நீலு இரவீந்திரநாத் தாகூரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். மேலும் உத்யான் என்ற நாடகத்தையும் எழுதினார். 1957 இந்தியப் பொதுத் தேர்தலின் போது எத்யா கபாலச்சே கம் நகி என்ற நாடகத்திற்கு இசையமைத்து நல்ல பெயரைப் பெற்றார்.[5]
நடிப்பு வாழ்க்கை
[தொகு]நீலு புலே மராத்தி நாட்டுப்புற நிகழ்ச்சிகளுடன் தனது நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். கதா அகலேச்சா கண்டியாச்சி என்பது இவரது முதல் தொழில்முறை நாடகம் ஆகும். இது 2000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தது. இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு 1968 ஆம் ஆண்டில் அனந்த் மானே தனது முதல் திரைப்படமான ஏக் காவ் பாரா பனகாடி படத்தில் நடிக்க இவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார்.
நீலு பெரும்பாலும் எதிர்மறை பாத்திரங்களிலேயே நடித்தார். சாம்னா என்ற திரைப்படத்தில் ஜமீன்தார் மற்றும் சர்க்கரை தொழிலதிபரான இந்துராவ் தோண்டே பாட்டீல் என்ற வேடத்திலும், மகேஷ் பட்டின் சாரன்ஷ் படத்தில் அதிகார வெறி கொண்ட அரசியல்வாதியாகவும் மற்றும் ஜாபர் படேலின் சின்ஹாசன் படத்தில் அரசியல் பத்திரிகையாளராகவும் இவரது குறிப்பிடத்தக்க திரைப்பட வேடங்களில் அடங்கும்.[6]
1983 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படமான கூலி படத்தில் 'நாது மாமா' என்ற கதாபாத்திரத்தில் இவர் அமிதாப் பச்சனுடன் பணியாற்றினார்.
மே 2013 இல், அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸின் இந்திய பதிப்பான போர்ப்ஸ் இந்தியா, இந்தியத் திரைப்படத்தின் 25 சிறந்த நடிகர்களின் பட்டியலில் சாம்னா படத்தில் இந்துராவ் தோண்டே பாட்டீலாக புலே நடித்த நடிப்பும் அடங்கியிருந்து.[7]
இறப்பு
[தொகு]நீலு புலே 13 ஜூலை 2009 அன்று, தனது 79 வயதில், உணவுக்குழாய் புற்றுநோயால் இறந்தார். இவரது மனைவி இரஜனி புலே 2011 இல் இறந்தார். இவர்களுக்கு கார்க்கி புலே தட்டே என்ற ஒரு மகள் உள்ளார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gargi Phule Thatte fondly remembers Nilu Phule and Rajani Phule on their 43rd wedding anniversary". Times of India.
- ↑ "Marathi actor Nilu Phule passes away". தி இந்து (Chennai, India). 13 July 2009 இம் மூலத்தில் இருந்து 17 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090717101941/http://www.hindu.com/2009/07/14/stories/2009071461161800.htm.
- ↑ "Nilu Phule was a gardener before an actor". Rediff.com. 14 July 2009 இம் மூலத்தில் இருந்து 17 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090717170455/http://movies.rediff.com/report/2009/jul/14/nilu-phule-was-gardner-before-he-became-actor.htm.
- ↑ Dubey, Bharati; Pronoti Datta (14 July 2009). "Veteran actor Nilu Phule makes his final exit". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 24 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024064542/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-14/mumbai/28197613_1_nilu-phule-saaransh-anupam-kher.
- ↑ 5.0 5.1 Contractor, Huned. "The man behind the villain". The Times Of India இம் மூலத்தில் இருந்து 13 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121113123411/http://timesofindia.indiatimes.com/pune-times/The-man-behind-the-villain/articleshow/302761540.cms.
- ↑ "Veteran actor Nilu Phule makes his final exit" இம் மூலத்தில் இருந்து 24 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024064542/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-14/mumbai/28197613_1_nilu-phule-saaransh-anupam-kher.Dubey, Bharati; Pronoti Datta (14 July 2009).
- ↑ "25 Greatest Acting Performances of Indian Cinema | Forbes India". Forbes India (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 9 September 2017. பார்க்கப்பட்ட நாள் 9 September 2017.
- ↑ "Marathi actor Nilu Phule passes away". தி இந்து (Chennai, India). 13 July 2009 இம் மூலத்தில் இருந்து 17 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090717101941/http://www.hindu.com/2009/07/14/stories/2009071461161800.htm.