உள்ளடக்கத்துக்குச் செல்

நீலகிரி டேனியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகிரி டேனியோ
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்ரினிடே
பேரினம்:
தேவாரியோ
இனம்:
தே. நீல்கெரியென்சிசு
இருசொற் பெயரீடு
தேவாரியோ நீல்கெரியென்சிசு
(டே, 1867)
வேறு பெயர்கள்

டேனியோ நீல்கெரியென்சிசு (டே, 1867)
பாராடேனியோ நீல்கெரியென்சிசு டே, 1867

நீலகிரி டேனியோ அல்லது கௌளி எனப்படும் தேவாரியோ நீல்கெரியென்சிசு (Devario nilgherriensis) இந்தியாவில் காணப்படும் ஒரு நன்னீர் மீன் ஆகும். இது ஓர் அகணிய உயிரி. இதன் உடல் நீளம் சுமார் 10 செ.மீ. வரை வளரக்கூடியது.[2][3]

வகைப்பாட்டியல்

[தொகு]

மீனியல் வகைப்பாடியலாளர் டே 1867இல் நீலகிரி மலைகளிலிருந்து இதனை விவரித்தார்.[4] ஆனால் டே, இதனை பரடேனியோ பேரினத்தின் கீழ் வகைப்படுத்தினார். பின்னர் 1878-இல் டே, இந்தச் சிற்றினத்தை டேனியோ பேரினத்தில் வைத்தார். "தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய சைப்ரினிட் இனத்தின் டானியோ ஹாமில்டன்" என்ற முனைவர் பட்ட ஆய்வின் முடிவில் 2001இல். பாங் குல்லண்டர் டேனியோ நீல்கெரியென்சிசு என்பதிலிருந்து தேவாரியோ நீல்கெரியென்சிசு என வகைப்படுத்தினார்.[5]

பரவல்

[தொகு]

தேவாரியோ நீல்கெரியென்சிசு தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி. இது தமிழகத்தின் நீலகிரி மலைகளில் உள்ள ஊட்டி ஏரி மற்றும் பைக்காரா, பனிச்சரிவு மற்றும் கைட்டி நீரோடைகளில் பதிவாகியுள்ளது. கேரளாவின் வயநாட்டிலிருந்தும் மத்தியப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திலிருந்தும் இந்தச் சிற்றினம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Manimekalan, A. (2011). "Devario neilgherriensis". The IUCN Red List of Threatened Species (IUCN) 2011: e.T172435A6891702. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172435A6891702.en. http://www.iucnredlist.org/details/172435/0. பார்த்த நாள்: 15 January 2018. 
  2. S. S. Mishra, Laishram Kosygin, P. T. Rajan and K. C. Gopi, Zoological Survey of India in Venkataraman, K., Chattopadhyay, A. and Subramanian, K.A. (editors). 2013. Endemic Animals of India(vertebrates): 1–235+26 Plates.
  3. Froese, R. and D. Pauly. Editors. 2013. FishBase. World Wide Web electronic publication.; http://www.fishbase.org/Country/CountrySpeciesSummary.php?c_code=356&id=24388, version (12/2013).
  4. Day, Proc. Zool. Soc. London, 1867: 296 (type locality: Ootacamund Lake, Pykara, Avelanche and Kaity streams, Neilgherry Hills, India)
  5. Kullander, Fang. (2001). Phylogeny and species diversity of the South and Southeast Asian Cyprinid genus Danio hamilton (Teleostei, Cyprinidae) /. Thesis (doctoral)--Stockholm University
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_டேனியோ&oldid=4120833" இலிருந்து மீள்விக்கப்பட்டது