உள்ளடக்கத்துக்குச் செல்

நீராதிபத்தியம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் மாட் விக்டோரியா பார்லோ எழுதிய, Blue covenant என்ற நூலை நீராதிபத்தியம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா.சுரேஷ் . எதிர் வெளியீடு இந்நூலை வெளியிட்டுள்ளனர்.

நடப்பு உலகில் அனைத்துத் துறைகளையும் மிரட்டும் ஏகாதிபத்திய நாடுகளும், அவர்களின் நிறுவனங்களும் நீரையும் விட்டுவைக்கவில்லை என்பதை விளக்கும் வகையில் தலைப்பு, நீர்+ ஏகாதிபத்தியம்=நீராதிபத்தியம் என்ற சமன்பாட்டுடன் வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் தண்ணீரைச் சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் புத்தகம் முழுவதும் காணக் கிடைக்கின்றன. நீர்வளத்தை வேட்டையாடிவிட்டு, அடுத்தது கழிவுநீரைச் சுத்திகரிப்பதிலும் லாப வேட்டை நடத்துகின்றனர் என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது.[1]

இந்த புவியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவைகள் எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் செய்ய வேண்டியது என்ன, என்று ஒரு பரந்த வெளியில் இருந்து இந்த புத்தகத்தை வழங்கியுள்ளார் பார்லோ. தண்ணீரைக் காப்பாற்ற சர்வதேச அளவில் அனைவரையும் பொறுப்பேற்கச் செய்கின்ற, ஐ.நா மட்டத்தில் நிறைவேற்றத்தக்க ஒரு சர்வதேச உடன்படிக்கையை பார்லோ கோருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நீராதிபத்தியம்". Archived from the original on 2015-06-14. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராதிபத்தியம்_(நூல்)&oldid=3560886" இலிருந்து மீள்விக்கப்பட்டது