நீடூர்
Appearance
நீடூர் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். இது மயிலாடுதுறையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 5017 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 2,434 ஆண்கள், 2,583 பெண்கள் ஆவார்கள். நீடூர் மக்களின் சராசரி கல்வியறிவு 80.73% ஆகும். நீடூர் மக்கள்தொகையில் 16.05% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மனிதர்கள்
[தொகு]நீடூர் சி.அ. அப்துல்காதர் துனிஷ்யா வெற்றிக்காக மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள பிரபலமான மணிக்கூண்டை 1943ஆம் ஆண்டு நிறுவினார்.[1]
இடங்கள்
[தொகு]இங்குள்ள "ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா" என்னும் அரபிப் பாடசாலை 1912ஆம் ஆண்டு அப்துல் கரீம் அவர்களால் நிறுவப்பட்டது.[2]