உள்ளடக்கத்துக்குச் செல்

நிறைகுடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூசை அறையில் வைக்கப்பட்ட நிறைகுடம்

நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும். தமிழரின் மங்கலப் பொருட்களுள் ஒன்றாக இது அமைகின்றது. நிறைவான குடம் எனும் பாெருளில் நிறைகுடம் எனப்படுகின்றது. முழுமையாக நீர் நிறைந்த கலசத்தில் மாவிலைகளைச் சொருகி அதன்மேல் முடி நன்கு சீவப்பட்ட தேங்காய் வைக்கப்படும். இதனோடு குத்துவிளக்கு, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்களும் வைக்கப்பட்டு இவை யாவும் அரிசி அல்லது நெல் பரவிய வாழை இலையின் மேல் வைக்கப்படும்.

பொதுவாகத் தமிழர்களின் வீடுகள், மங்கல நிகழ்வுகள், கோயில் விழாக்கள் என அனைத்திலும் நிறைகுடம் வைத்தல் முக்கிய அம்சமாக விளங்குகின்றது. செய்கின்ற காரியங்கள் முழுமையாய் நிறைவுபெறும் எனும் நம்பிக்கையில் நிறைகுடம் வைக்கப்படுவதாகும். தற்போது கிறித்தவர்களும் தமது வழிபாட்டுத் தலங்களின் திருவிழாக் காலங்களில் நிறைகுடம் வைப்பதைக் காணலாம்.

பழமொழிகள்

[தொகு]
  1. நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

பன்னீர்ச் செம்பு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பயனுள்ள பழமொழிகள்". பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறைகுடம்&oldid=1731094" இலிருந்து மீள்விக்கப்பட்டது