உள்ளடக்கத்துக்குச் செல்

நினா இலினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நினா இலினா
Ніна Олександрівна Ільїна Edit on Wikidata
பிறப்பு30 ஆகத்து 1951 (அகவை 73)
படித்த இடங்கள்
  • Gerasimov Institute of Cinematography
விருதுகள்Medal "For Distinguished Labour", Merited Artist of Ukraine

நினா ஒலெக்ஸாண்ட்ரிவ்னா இலினா (Nina Oleksandrivna Ilyina, உக்ரைனியன்: Ніна Олександрівна Ільїна; பிறப்பு 30 ஆகத்து 1951) என்பவர் ஒரு உக்ரேனிய திரைப்பட நடிகை ஆவார். உக்ரைன் குடியரசு தலைவரால் வழங்கப்படும் உக்ரைனின் தகுதி வாய்ந்த கலைஞர் (2000) என்ற விருதைப் பெற்றவர். இவர் உக்ரைனில் "ஸ்டோஜரி" என்ற பெயரில் நடக்கும் திரைப்பட நடிகர்களின் சர்வதேச விழாவின் தலைவராகவும், தேசிய உக்ரேனிய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் நடிப்பு கல்வி நிறுவனத்தின் ("Guild of Cinematographers.") பொது இயக்குனராகவும் இருந்துள்ளார்.

துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

நினா இலினா 1951 ஆகத்து 30 உக்ரைன் சோவியத் சோசலிச குடியரசின் கீவ் நகரில் பிறந்தார். 1968 ஆம் ஆண்டில், இவர் கீவ்வில் உள்ள இடைநிலைப் பள்ளி எண் 108 இல் பள்ளிப் படிப்பை முடித்தார். 1958 முதல் 1968 வரை, இலினா ஸ்டுடியோ ஆப் தி ஆர்டிஸ்டிக் வேல்ட் ஆப் கிவி பேலஸ் ஆப் பயனியர்ஸ் என்ற கல்வி நிறுவனத்தில் படித்தார். பின்னர் இவர் மாஸ்கோவில் உள்ள ஆல் யூனியன் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் சினிமோட்டகிராபி நடிப்பு கல்வி நிறுவனத்தில் நாடகம் மற்றும் திரைப்பட நடிப்பு ஆகியவற்றை பயின்றார் (1968-1972).[1] அங்கு, சோவியத் ஒன்றியத்தின் மக்கள் கலைஞரான வோலோடிமிர் பெலோகுரோவ் தலைமையில் உக்ரைனின் கலாச்சார அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உக்ரேனியப் பயிற்சிப் பட்டறையை இலினா முடித்தார்.[2] இவ்வாறு இவர் பட்டையப் படிப்பை முடித்தார்.

தொழில்

[தொகு]

1972 முதல் 2006 வரை, இலினா கியேவில் உள்ள டோவ்சென்கோ பிலிம் ஸ்டுடியோவில் நடிகையாக பணியாற்றினார்.[1] 1977 முதல், இவர் தேசிய உக்ரேனிய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்துவருகிறார். 1989 முதல் 1999 வரை, இலினா உக்ரைனின் திரைப்பட தொழில்முறை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

1995 ஆம் ஆண்டில், 1995, 1997, 1999, 2003, மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கியேவில் நடைபெறும் "ஸ்டோஜரி" என்ற திரைப்பட நடிகர்களின் சர்வதேச விழாவை இவர் நிறுவினார். இலினா விழாவின் தலைவர், பொது இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். 1999 முதல், இவர் தேசிய உக்ரேனிய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (கீவ்) நடிப்பு கல்வி நிறுவனத்தின் பொது இயக்குநராக இருந்து வருகிறார்.[2]

2017 ஆம் ஆண்டில், இலினா உக்ரேனிய திரைப்பட அகாதமியின் பொது அமைப்பில் உறுப்பினரானார். மேலும் பெண் தொழில்முனைவோர் சர்வதேச தூதரகத்தின் தூதராக ஆனார். 2018 முதல் 2021 வரை, இவர் "கீவ் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில்" கல்வி மற்றும் அறிவியல் நாடகக் கலை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.[3] 2021 முதல், இலினா கீவ் பன்னாட்டு பல்கலைக்கழகத்தின் நாடக மற்றும் இசைக் கலைகளின் கல்வி மற்றும் அறிவியல் நிறுவனத்தின் கலை நிகழ்ச்சித் துறையில் பேராசிரியராக இருந்து வருகிறார்.

2008 இல், இலினா கீவ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் நாடகக் கலைத் துறையின் இணை பேராசிரியரானார். 2009 முதல் 2012 வரை, இவர் கீவ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் நாடக பீடத்தின் துறைத் தலைவராக இருந்தார்.[3] 2010 முதல் 2018 வரை, இலினா கீவ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சி, திரைப்படம், நாடகக் கல்வி மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருந்தார். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், "நாளை உயரும் நட்சத்திரங்கள்." என்ற பெயரில் நடந்த திரைப்பட மற்றும் நாடக படைப்பாற்றலுக்கான அனைத்து உக்ரேனிய இளைஞர் விழாவிற்கு தலைமை தாங்கி இயக்கினார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ільїна Ніна Олександрівна.
  2. 2.0 2.1 "ІЛЬЇНА НІНА ОЛЕКСАНДРІВНА". who-is-who.ua. பார்க்கப்பட்ட நாள் 2023-11-12.
  3. 3.0 3.1 "Ніна Ільїна". kinoafisha.ua. Archived from the original on 9 April 2018. பார்க்கப்பட்ட நாள் 12 November 2023.
  4. "Перший Всеукраїнський молодіжний фестиваль кінотеатральної творчості "Зірки, що зійдуть завтра"". 27 April 2016. Archived from the original on 9 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2023-11-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினா_இலினா&oldid=3912824" இலிருந்து மீள்விக்கப்பட்டது