நிசான் வேலுப்பிள்ளை
![]() 2023 இல் நிசான் | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | நிஷான் வேலுப்பிள்ளை | ||
பிறந்த நாள் | 7 மே 2001 | ||
பிறந்த இடம் | மெல்பேர்ண், ஆத்திரேலியா | ||
உயரம் | 181 செமீ[1] | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்கள வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | மெல்பேர்ண் விக்டரி | ||
எண் | 17 | ||
இளநிலை வாழ்வழி | |||
எண்டவர் யுனைட்டட் | |||
கிளென் எய்ரா காற்பந்துக் கழகம் | |||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2019–2022 | மெல்பேர்ண் விக்டரி இளையோர் | 17 | (6) |
2021– | மெல்பேர்ண் விக்டரி | 81 | (8) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2023–2024 | ஆத்திரேலிய 23-இற்குட்பட்டோர் | 14 | (5) |
2024– | ஆத்திரேலிய அணி | 1 | (1) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 26 மே 2024 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 21 ஏப்பிரல் 2024 அன்று சேகரிக்கப்பட்டது. |
நிசான் வேலுப்பிள்ளை (Nishan Velupillay, பிறப்பு: 7 மே 2001) ஓர் ஆத்திரேலியத் தொழில்-சார் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலியத் தேசியக் காற்பந்தாட்ட அணியிலும், மெல்பேர்ண் விக்டரி கழகத்திலும் நடுக்களத்தில் விளையாடி வருகிறார்.[2]
தொடக்க வாழ்க்கை
[தொகு]நிசான் வேலுப்பிள்ளை ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரில் இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவர். மல்கிரேவ் மசினோட் கல்லூரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார்.[3]
காற்பந்தாட்ட வாழ்க்கை
[தொகு]நிசான் கிளென் எய்ரா காற்பந்தாட்டக் கழகத்தில் இளையோர் அகாதமியில் தனது காற்பந்தாட்டப் பயிற்சியைப் பெற்றார்.[4]
நிசான் 2019 இல் மெல்போர்ன் விக்டரி காற்பந்து அணியுடன் தனது முதல் தொழில்முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 2021 மே 19 அன்று சிட்னிக்கு எதிரான 0-2 தோல்வியில் மாற்று வீரராக முதன் முதலில் களமிறங்கினார். 2021 திசம்பர் 11 அன்று, தனது முதல் தொழில்முறை இலக்கை அடிலெய்டு யுனைடெட் அணிக்கு எதிராக விளையாடி, 2-1 என்ற கணக்கில் வென்றார்.[5]
பன்னாட்டு காற்பந்தாட்டம்
[தொகு]2024 அக்டோபரில், சீனா, சப்பான் அணிகளுக்கு எதிரான 2026 பீஃபா உலகக்கோப்பை காற்பந்து தகுதிப் போட்டிகளுக்கு ஆத்திரேலியத் தேசிய அணியில் விளையாட நிசான் அழைக்கப்பட்டார். 2024 அக்டோபர் 10 அன்று, நிசான் 83வது நிமிடத்தில் மிட்செல் டியூக்கிற்குப் பதிலாக முதல் தடவையாக விளையாடத் தொடங்கினார். 7 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு இலக்கை அடித்து சீனாவை 3-1 என்ற கணக்கில் வென்றார்.[6]
சிறப்புகள்
[தொகு]- மெல்பேர்ண் விக்டரி
- 2021 ஆத்திரேலியக் கிண்ணம்
- ஆண்டில் சிறந்த இளம் வீரர்: 2021–22[7]
பன்னாட்டு இலக்குகள்
[தொகு]இல. | நாள் | அரங்கு | எதிராளி | ஆட்ட எண்ணிக்கை | முடிவு | போட்டி |
---|---|---|---|---|---|---|
1. | 10 அக்டோபர் 2024 | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட், ஆத்திரேலியா | ![]() |
3–1 | 3–1 | 2026 பீஃபா உலகக்கோப்பை தகுதி-காண் போட்டி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nishan Velupillay". Melbourne Victory. Retrieved 1 April 2024.
- ↑ "Nishan Velupillay". 20 November 2019.
- ↑ "Nishan Velupillay Melbourne Victory videos, transfer history and stats - SofaScore". www.sofascore.com. Retrieved 2022-06-26.
- ↑ "23 under 23: The best young players to look out for this A-League Men's season" (in en-AU). ABC News. 2021-11-18. https://www.abc.net.au/news/2021-11-19/a-league-men-players-to-watch/100609542.
- ↑ "Australia - N. Velupillay - Profile with news, career statistics and history - Soccerway". my.soccerway.com. Retrieved 2022-06-26.
- ↑ WATCH: Debutant Nishan Velupillay put the icing on Socceroos' first win of qualifying stage, The Roar, 10 அக்டோபர் 2024
- ↑ "News - Jake Brimmer Takes Out Victory Medal". 3 June 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- நிசான் வேலுப்பிள்ளை at Soccerway