நிக்கோபார் சிறிய ஆந்தை
Appearance
நிகோபார் சிறிய ஆந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை | ஸ்டிரிங்கிபார்மிசு |
குடும்பம்: | ஸிடிரிங்கிடே |
பேரினம்: | ஓட்டசு |
சிற்றினம்: | ஓ. அலியசு
|
இருசொற் பெயரீடு | |
ஓட்டசு அலியசு ராசுமுசுசென், 1998 |
நிக்கோபார் சிறிய ஆந்தை (Nicobar scops owl)(ஓட்டசு அலியசு) என்பது ஸ்ட்ரிகிடே குடும்பத்தில் ஆந்தை இனமாகும். இது இந்தியாவின்நிக்கோபார் தீவுகளில், குறிப்பாகப் பெரிய நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணக்கூடியது. ஆனால் இதனைச் சிறிய நிக்கோபார் தீவிலும் காணலாம்.[1]
நிகோபார் சிறிய ஆந்தியின் இயற்வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இதனுடைய காப்பு நிலை நிச்சயமற்றதாக உள்ளது. ஆனால் இது அரிதானது அல்லது ஆபத்தானது என்று கருதப்படுகிறது.[1] இதனை முதலில் பமீலா சி. ராஸ்முசனால் 1998இல்[2] விவரித்தார். இந்த இனம் குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இவை சிலந்தி, வண்டு மற்றும் தரைவாழ் பல்லிகளை உணவாக உட்கொள்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 பன்னாட்டு பறவை வாழ்க்கை (2019). "Otus alius". IUCN Red List of Threatened Species. 2019: e.T22728447A152511952. Retrieved 14 August 2020.
- ↑ Rasmussen, Pamela. (1998).