நா. கோவிந்தசாமி

நா. கோவிந்தசாமி (Naa.Govindasamy, ஏப்ரல் 18, 1946 – மே 26, 1999, அகவை 52) சிங்கப்பூரைச் சேர்ந்த கணினி அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். முதன் முதலில் தமிழை இணையத்தில் ஏற்றி வைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.[1]"1995ம் ஆண்டு அக்டோபர் 27 இல் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் (en:Ong Teng Cheong) துவக்கி வைத்த Journeys: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளத்தில் (Poem Web) தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது." [2][3]
இணையப் பங்களிப்பு
[தொகு]நா. கோவிந்தசாமி தமிழ்நெட், தமிழ்ஃபிக்சு போன்ற கணினி எழுத்துருக்கள் பயன்படுத்தும் சிங்கப்பூர் 16 பிட் ஒருங்குறித் திட்டத்தை மேம்பாட்டுக்காக உழைத்தார் இவரது சிங்கப்பூர் தமிழ் வெப் என்பது உலகளாவிய வலையில் வெளிவந்த உலகின் முதலாவது தமிழ் இணையப் பக்கம் ஆகும்.[4] 1999 பெப்ரவரியில் நடைபெற்ற தமிழ்நெட்99 இணைய மாநாட்டில் Towards a Total Internet Solution for the Tamil Language through Singapore Research என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது.[5]
“ | 1997ஆம் ஆண்டு இன்று இணைய மாநாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த தமிழ்நெட்97 மாநாட்டை பெரும் முயற்சி எடுத்து சிங்கப்பூரில் நடத்தினார். அந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளில் தமிழ் தொடர்பான பணிகளை ஆரவாரமின்றிச் செய்து வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களையெல்லாம் அழைத்துப் பங்கேற்கச் செய்தார். ஆங்காங்கே பல பிரிவுகளாக பலரும் செய்து வந்த பணிகளைப் பற்றி ஒருவருக்கொருவர் ஓரிடத்தில் கலந்துரையாடக் காரணமாக இருந்தார். அதன் விளைவாக உலகில் பல பகுதிகளில் பல்வேறு பணிகளுக்குக் கணினி வழித் தமிழைப் பயன்படுத்தி வந்தவர்களிடையே ஒரு ஒருங்கிணைவும், சமூக உணர்வும் ஏற்பட்டன.[5]
இவரின் மறைவிற்கு பிறகு 2000 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைப்பெற்ற மூன்றாம் தமிழ் இணைய மாநாட்டில் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தொடங்கப்பட்டது, இம்மன்றம் ஆண்டுத் தோறும் தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது [6] |
” |
இலக்கியப் பங்களிப்பு
[தொகு]கோவிந்தசாமி 1965 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள் எழுதி வந்தவர். 1990-ல் வேள்வி என்ற புதினத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.[7][8] 1991 இல் உள்ளொளியைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பும் [9] 1977ஆம் ஆண்டில் இலக்கியக் களம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். இவ்வமைப்பு மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை 1981-ல் வெளியிட்டது.[5] மேலும் 1992 இல் சிங்கப்பூர்த் தமிழ் சிறுகதைகள் எனும் நூலைத் தொகுத்து வெளியிட்டார்.[10][11]
1989-ல் மொரிசியசில் நடந்த ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டில் கணினிக்கு ஒரு புதிய விசைப்பலகை - சிங்கப்பூர் கல்விக் கழக அனுபவம் என்ற ஆய்வு கட்டுரையையும் முதல் தமிழ்ச் சிறுகதை என்ற ஆய்வு கட்டுரையையும் படித்தார், இக்கட்டுரைகள் இம்மாநாட்டு மலரில் சேர்க்கப்பட்டுள்ளது.[12]
1994 ஆகத்து 5, 6 ஆகிய நாட்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழும் கணிப்பொறியும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கணியன் விசைப்பலகை என்ற கட்டுரையைப் படித்தார்.[13]
பங்காற்றிய நூல்கள்
[தொகு]நா. கோவிந்தசாமி கீழ்க்கன்ட நூல்களுக்கு இணையாசிரியராக (Co Editor) பணியாற்றியுள்ளார் [10][11]
- 1990 The Fiction of Singapore
- 1995 Journeys: Words, Home and Nation Anthology of Singapore Poetry
நா.கோவிந்தசாமி பற்றி நூல்களும் ஆய்வுகளும்
[தொகு]- 2004 நா.கோவிந்தசாமியின் கல்வியியல் ஆய்வுகள் - முனைவர் சீதாலட்சுமி[14]
- 2010 நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி (வாழ்க்கை வரலாறு) [10] [15][16]
பெற்ற விருதுகள்
[தொகு]நா.கோவிந்தசாமி கீழ்க்காணும் விருதுகளைப் பெற்றுள்ளார்
- 1967 இல் தமிழர் திருநாளில் சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் நடத்திய சிங்கப்பூர் மலேசிய சிறுகதை போட்டியில் தனது காட்டாற்றின் கரையினிலே என்னும் சிறுகதைக்கு முதற்பரிசு பெற்றார் [10]
- 1992 இல் தேடி சிறுகதைக்கு சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம் (National Book Development Council) விருது வழங்கியது [11]
- 1994 இல் தென்கிழக்காசிய எழுத்து (en:S.E.A. Write Award) விருதைப் பெற்றார் [17]
- 1998 இல் ஏழாவது இந்தியப் பண்பாட்டு விழாவின் புதுமை விருதினை (7th Indian Cultural Festival Innovation Award) தமிழ் வெப் திட்டத்தினை உருவாக்கியதற்காக தனது குழுவினரான டேன் டின் வீ (en:Tan Tin Wee) மற்றும் லியாங் காக் யாங் (Leong Kok Yong) ஆகியோரோடு இணைந்து பெற்று கொண்டார் [18]
வகித்த பொறுப்புகள்
[தொகு]நா.கோவிந்தசாமி சிங்கப்பூ்ர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் கீழ்க்காணும் பொறுப்புகளை வகித்துள்ளார்[11]
- 1977-1979 செயலாளர்
- 1981-1987 செயலவை உறுப்பினர்
- 1987-1991 செயலாளர்
- 1991-1992 துணைத் தலைவர்
TamNet Pte Ltd
[தொகு]நா.கோவிந்தசாமி 1996 இல் TamNet Pte Ltd என அறியப்பட்ட Tamil Network Publishing House Pte Ltd என்ற நிறுவனத்தை தொடங்கினார்.[19] இவரின் மறைவிற்கு பிறகு அவரது மனைவி உஷாவால் இந்நிறுவனம் மேலாண்மை செய்யப்பட்டது [20] இந்நிறுவனம் Kanian UV,கணியன் 2000 போன்ற தமிழ் எழுத்துரு மென்பொருட்களையும் செந்தமிழ் தமிழ்ச்சுடர் போன்ற சிறுவருகளுக்கான எழுத்துரு மென்பொருட்களையும் வெளியிட்டது [21] மேலும் தமிழ் தட்டச்சு வகுப்புகள் மற்றும் அனைத்து தகவல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியது[22]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-11. Retrieved 2007-03-11.
- ↑ https://web.archive.org/web/20020212073207/http://www.irdu.nus.edu.sg/tamilweb/about.html
- ↑ http://uttamam.org/papers/97_07.pdf
- ↑ https://web.archive.org/web/19990203214158/http://www1.irdu.nus.sg/tamilweb/
- ↑ 5.0 5.1 5.2 "One Hundred Tamils of the 20th Century Naa Govindaswamy". tamilnation.org. Retrieved 4 சூன் 2014.
- ↑ https://www.infitt.org/about-us/
- ↑ "வேள்வி /நா. கோவிந்தசாமி. Vēḷvi /Nā. Kōvintacāmi. – National Library". www.nlb.gov.sg.
- ↑ நா.கோவிந்தசாமி (1990). வேள்வி. Orchid Publishing House,. p. 81. ISBN 9789810029777. OCLC 298458765.
{{cite book}}
: Check date values in:|date=
(help)CS1 maint: extra punctuation (link) - ↑ "தேடி (நா.கோவிந்தசாமியின் புனைக்கதைகள்) -National Library". www.nlb.gov.sg.
- ↑ 10.0 10.1 10.2 10.3 சுந்தரி பாலசுப்பிரமணியம். "Infopedia". NLB - eresources. National Library Board - Singapore.
- ↑ 11.0 11.1 11.2 11.3 நா.ஆண்டியப்பன் (அக்டோபர் 2019). சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள் 200 (pdf). சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம். pp. 97–98. ISBN 978-981-14-3192-0.
- ↑ ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர்.pdf (PDF). உலகத் தமிழாராய்ச்சி மன்றம். p. 181-192 ,221-224.
- ↑ தமிழும் கணிப்பொறியும் - கருத்தரங்கு.pdf (PDF). அண்ணா பல்கலைக்கழகம். pp. 33–43.
- ↑ முனைவர் சீதாலட்சுமி (2004). நா.கோவிந்தசாமியின் கல்வியியல் ஆய்வுகள். தமிழ்க் கலை அச்சகம். p. 107. ISBN 9789810512958. OCLC 226130295.
- ↑ ;நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம். p. 196. ISBN 9789810858025. OCLC 646110788.
- ↑ "நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி". விருபா - தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு. Retrieved 12-11-2021.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://www.bookcouncil.sg/awards/s-e-a-write-award
- ↑ "Dr Tan Tin Wee's Home Page". Archived from the original on 2021-11-30. Retrieved 30-11-2021.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) (ஆங்கில மொழியில்) - ↑ "TamNet Pte Ltd". web.archive.org. Archived from the original on 2006-08-20. Retrieved 2021-07-30. (ஆங்கில மொழியில்)
- ↑ ":: Profile ::". web.archive.org. 20 August 2006. Archived from the original on 20 ஆகஸ்ட் 2006. Retrieved 13 மார்ச் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) (ஆங்கில மொழியில்) - ↑ "TamNet இன் தயாரிப்புகள்". web.archive.org. Archived from the original on 2006-08-20. Retrieved 2021-07-30. (ஆங்கில மொழியில்)
- ↑ "TamNet இன் சேவைகள்". web.archive.org. Archived from the original on 2006-08-20. Retrieved 2021-07-30. (ஆங்கில மொழியில்)
வெளி இணைப்புகள்
[தொகு]- நா.கோவிந்தசாமியால் முதன்முதல் வலையேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் வலைப்பக்கங்கள் (இணைய ஆவண காப்பகத்திலிருந்து)
- நா. கோவிந்தசாமியால் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் இணையத்தளம் (இணைய ஆவண காப்பகத்திலிருந்து)
- சிங்கப்பூர் தமிழ் வெப் இணையத்தளம்
- தமிழ் வெப் இணையத்தள அறிமுக விழா (இணையச் சுவடிக் கூடத்திலிருந்து)
- நா.கோவிந்தசாமி மறைவின் 20ம் ஆண்டு நினைவு மலர்
- நா.கோவிந்தசாமி பற்றிய யூடியூப் காணொலி (ஆங்கில மொழியில்)
- ஜோஷித் கூறும் நா.கோவிந்தசாமி பற்றிய யூடியூப் காணொலி