நாரமல்லி சிவபிரசாத்
நாரமல்லி சிவப்பிரசாத் | |
---|---|
தொகுதி | சித்தூர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பொட்டிபள்ளி | 11 சூலை 1951
இறப்பு | 21 செப்டம்பர் 2019 சென்னை | (அகவை 68)
நாரமல்லி சிவப்பிரசாத் (Naramalli Sivaprasad)(11 சூலை 1951 - 21 செப்டம்பர் 2019) [1] என்பவர் இந்திய திரைப்பட நடிகராக இருந்து, தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல்வாதியாக ஆனவர் ஆவார். 2009 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் ஆந்திராவின் சித்தூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] ஆந்திர மாநிலத்தை பிளவுபடுத்துவதை எதிர்த்து இவர் பல வேடங்களில் பல நூதன போராட்டங்களில் ஈடுபட்டார் .[3] மாநிலப் பிளவுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் இவரும் ஒருவர்.[4] ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி பி. ஆர். அம்பேத்கர் போல வேடமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார் .[5][6][7]
வாழ்க்கை
[தொகு]சிவபிரசாத் ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்துள்ள பொட்டிபள்ளி சிற்றூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்தப் பின்னர் திருப்பதி எஸ். வி. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். சிறுவயதில் இருந்து நாடகங்களில் நடித்துவந்த இவர் பிறகு தெலுங்குத் திரைப்படங்களில் எதிர் நாயகனாகவும், குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார்.
பின்னர் தெலுகு தேசம் கட்சியில் இணைந்து 1999 இல் சித்தூர் மாவட்டம் சத்யவேடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஆனார். இதையடுத்து 1999 முதல் 2001 வரை ஆந்திர மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2009, 2014 இல் சித்தூர் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 இல் இதே தொகுதியில் மக்களவைக்கு போட்டியிட்டு தோல்வியுற்றார்.[8] ஆந்திர மாநிலத்தை பிளவுபடுத்துவதை எதிர்த்தும், சிறப்பு அந்தஸ்த்து கோரியும் நடத்தப்பட்ட பல போராட்டங்களில் இவர் பல வேடங்களில் கலந்து கொண்டார்.
திரைப்பட வரலாறு
[தொகு]- சை ஆட்டா
- தூசுகெள்தா (2013)
- அய்யாரே (2012)
- பில்லா ஜமீன்தார் (2011)
- தகிட தகிட (2010)
- பிரம்மலோகம் டூ யமலோகம் வியா பூலோகம் (2010)
- மஸ்கா (2009)
- துரோணா (2009)
- குபேருலு (2008)
- பாலாதூர் (2008)
- ஆட்டாடிஸ்தா (2008)
- ஒக்க மகாடு (2008)
- துளசி (2007)
- கீதகீதலு (2006)
- லட்சுமி (2006)
- டேஞ்சர் (2005)
- ஜெய் சிரஞ்சீவா (2005)
- பாலு ஏபிசிடிஇஎஃப்ஜி (2005)
- ஏம் போய்லோ ஏம் போய்லடோ
- ஆதிலட்சுமி
- யமகோலா மல்லி மொதலயிந்தி
- சுபாஸ் சந்திரபோஸ்
- சத்யபாமா
- ஆதிவரம் ஆடவால்லக்கு செலவு
- மாஸ்டர் காப்புரம் (1990)
- யமுடிக்கு முகுடு (1988)
- கைதி (1983)
இயக்குநராக
[தொகு]- பிரேம தபசு
- டோசீ ராஜா ஸ்வீட்டி ரோஜா
- இல்லாலு
- கொக்கரக்கோ
குறிப்புகள்
[தொகு]- ↑ ---report NARAMALLI SIVA PRASAD report
- ↑ "ECI Winners List Andhra Pradesh". Archived from the original on 2009-06-27. Retrieved 2019-09-23.
- ↑ name="thehindu" Staff, Reporter. "chittoor-mp-at-it-again". thehindu.com. Kasturi and Sons. Retrieved 27 June 2016.
- ↑ D, C. "11 'unruly' Seemandhra MPs suspended". deccanchronicle.com. Venkatrami Reddy. Archived from the original on 3 அக்டோபர் 2016. Retrieved 27 June 2016.
- ↑ CV, Raju. "ప్రత్యేకహోదాపై టీడీపీ ఎంపీ శివప్రసాద్ వినూత్న నిరసన". hmtvlive.com. HMTV. Archived from the original on 16 செப்டம்பர் 2016. Retrieved 27 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "From tantrik to Krishna, Naramalli Siva Prasad's unique style of protest". Business Standard. 6 March 2018. Retrieved 3 May 2018.
- ↑ "TDP MP turns 'Vishvamitra' to demand special status for Andhra". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 March 2018. Retrieved 3 May 2018.
- ↑ என். மகேஷ்குமார் (செப்டம்பர் 22 2019). "தொலுக்கு தேசம் முன்னாள் எ.்பி. காலமானார் நாடாளுமன்றம் முன் பல்வேறு வேடங்களில் போராட்டம் நடத்தியவர்". இந்து தமிழ்: 12.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-03. Retrieved 2019-09-23.