நாரதன் (திரைப்படம்)
நாரதன் | |
---|---|
இயக்கம் | நாகா வெங்கடேஷ் |
தயாரிப்பு | சஜித் வி. நம்பியார் |
இசை | மணிசர்மா |
நடிப்பு | நகுல் பிரேம்ஜி அமரன் நிகிஷா படேல் சோனு ராதாரவி நிழல்கள் ரவி மீரா கிருஷ்ணன் கவிதா எம். எஸ். பாஸ்கர் மதுமிதா சீனிவாசன் சுப்பு பஞ்சு |
ஒளிப்பதிவு | சஞ்சய் லோக்நாத் |
படத்தொகுப்பு | ஷைஜித் குமரன் |
கலையகம் | வெற்றிவேல் பிலிம் இன்டர்நேஷனல் தி பிரின்சிபல் இந்தியா, காஸ் மூவிஸ் |
வெளியீடு | ஏப்ரல் 01, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாரதன் 2016 ஆம் ஆண்டு நகுல், நிகிஷா படேல் மற்றும் பிரேம்ஜி அமரன் நடிப்பில், நாகா வெங்கடேஷ் இயக்கத்தில், மணிசர்மா இசையில், சஞ்சித் வி. நம்பியார் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3]. இப்படம் 2016 ஏப்ரல் 1 இல் வெளியானது[4].
நடிகர்கள்
[தொகு]- நகுல் - விஷ்ணு
- பிரேம்ஜி அமரன் - நாரதன்
- நிகேசா படேல் - மாயா / சுவேதா
- சோனு - சவும்யா
- நிழல்கள் ரவி - விஷ்ணுவின் தந்தை
- மீரா கிருஷ்ணன் - விஷ்ணுவின் தாய்
- ராதாரவி - அன்பழகன்
- எம். எஸ். பாஸ்கர் - பாஸ்கர்
- அஷ்வின் ராஜா - பழம்
- கவிதா - கமலா
- ஜாங்கிரி மதுமிதா - ஸ்வப்னா
- சீனிவாசன்
- சுப்பு பஞ்சு
- மயில்சாமி
- பாண்டு
- சேத்தன்
- நேகா மேனன்
- சிசர் மனோகர்
- கூல் சுரேஷ்
- விஷ்வகுமார்
- ராணி
- ஸ்ரீலட்சுமி
- பேபி ரேகா
- அஷ்மிதா
தயாரிப்பு
[தொகு]2013 ஏப்ரலில் தமிழக கவர்னர் ரோசய்யா முன்னிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது[5][6].
முதலில் நாரதன் என்ற முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்[7]. பின் அவருக்குப் பதில் பிரேம்ஜி அமரன் நடிக்கப் படமாக்கப்பட்டது.
நாரதன் திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜெயா தொலைக்காட்சி பெற்றுள்ளது.
“எப்படி மனுசுக்குள் வந்தாய்” பட நாயகன் விஷ்வா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சலீம் படத்தில் “மஸ்காரா” பாட்டுக்கு நடனமாடிய அஷ்மிதா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். படத்தின் இறுதியில், நகுல் ரவுடிகளுடன் மோதும் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி, பின்னி மில்லில் 10 நாட்கள் படமாக்கப்பட்டது. நகுல் மற்றும் ஸ்ருதி பாடும் ஒரு டூயட் பாடல் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது[8][9][10].
நாரதன் படப்பிடிப்புப் படங்கள்[11]
படத்தின் இசை வெளியீட்டு விழா 2015 மே 15 இல் நடந்தது[12]. விழாவில் படத்தின் நாயகன் நகுல் கலந்துகொள்ளவில்லை[13].
இசை
[தொகு]படத்தின் இசையமைப்பாளர் மணிசர்மா.
வ.எண் | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | மை நேம் இஸ் சந்திரிகா | சுசித்ரா, செந்தில்தாஸ் |
2 | மாயக்காரா | கார்த்திக், என். எஸ். கே. ரம்யா |
3 | தடா தடா | முகேஷ், கானா செல்வம் |
4 | சாரல் வீசும் | ஹரிசரண், ரீட்டா |
விமர்சனம்
[தொகு]சினிரைட்டர்ஸ். காம் : மொத்தத்தில் நாரதன் முழுமைப்படாத கலகக்காரன்[14].
தினமலர்: நாரதர் கலகம் நன்மையில் முடியவில்லை[15].
விகடன்: நல்ல படமாவோ, குறைந்தபட்சம் நல்ல நாடகமாகவோ ஆகியிருக்க வேண்டிய கதை[16].
தமிழ்.சமயம்.காம் : தனக்காக காத்திருக்கும் பெண்ணை விட்டு தான் கண்ட பெண்ணின் பின் சுற்றும் நாயகனின் கதையே கரு![17]
மாலைமலர்: திறமை வாய்ந்த நடிகர்களை வைத்துக் கொண்டு அவர்களை கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார்[18].
சூடான சினிமா செய்திகள்: இந்த நாரதன் செயல் கொஞ்சம் கஷ்டத்திற்கே[19].
தமிழ் சினி டாக்: அருமையான இரண்டுவித திரைக்கதை சுவாரஸ்யங்கள் படத்தில் இருந்தும் எதை முன் வைத்து படத்தை கொண்டு போவது என்கிற குழப்பத்தில் இரண்டுக்கும் சரிசமமான அளவுக்கு பங்கு கொடுத்ததினால் படம் முழுமையாகவில்லை[20].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நாரதன்".
- ↑ "நாரதன் திரைப்படத் தகவல் தொகுப்பு".
- ↑ "நாரதன்".
- ↑ "ஏப்ரல் 1 வெளியீடு".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஆளுநர் ரோசய்யா தலைமையில் பூஜையுடன் துவக்கம்".
- ↑ "நாரதன் படப்பிடிப்பு துவக்கம் - படங்கள்".
- ↑ "சந்தானம்".
- ↑ "நாரதன் தகவல்கள்".
- ↑ "நாரதன் தகவல்கள்".
- ↑ "நாரதன் தகவல்கள்".
- ↑ "நாரதன் படப்பிடிப்பு படங்கள்".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "நாரதன் இசை வெளியீட்டு விழா".
- ↑ "நாரதன் இசை வெளியீடு". Archived from the original on 2019-04-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
- ↑ "நாரதன் விமர்சனம்".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "நாரதன் விமர்சனம்".
- ↑ "நாரதன் விமர்சனம்".
- ↑ "நாரதன் விமர்சனம்".
- ↑ "நாரதன் விமர்சனம்".
- ↑ "நாரதன் விமர்சனம்".
- ↑ "நாரதன் விமர்சனம்".