நாத்லாங் கியாங் கோயில்
நாத்லாங் கியாங் கோயில் | |
---|---|
நாத்லாங் கியாங் கோயில். தொல்லியல் சிறப்பு மிக்க இக்கோயில் வளாகத்தில் ஒரு காலத்தில் மிகப் பெரிய கட்டட அமைப்புகளும், காணத்தக்க பொருட்களும் இருந்தன, ஆனால் இப்போது அதெல்லாம் இல்லாமல் போய்விட்டன, மேலும் மைய சதுர கோயில் மட்டுமே எஞ்சியுள்ளது. | |
அமைவிடம் | |
நாடு: | மியான்மர் |
மாநிலம்: | மண்தாலே பிரதேசம் |
அமைவு: | பாகன் |
ஆள்கூறுகள்: | 21°10′08″N 94°51′46″E / 21.168965°N 94.862738°E |
கோயில் தகவல்கள் |
நத்லாங் கியாங் கோயில் (Nathlaung Kyaung Temple, சமக்கிருதம்: नात्ह्लैङ क्यौङ, Burmese: နတ်လှောင်ကျောင်း }}; மொ. 'shrine confining the spirits') என்பது விஷ்ணுவுக்காக கட்டபட்ட ஒரு இந்து கோயில் ஆகும். இந்தக் கோயில் பர்மாவின், பாகனின் பழைய நகர மதில் சுவர்களுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது (ஆயத்தொலைவுகள்: 21.168965° N, 94.862738° E).[1]
நாத்லாங் கியாங் கோயில் தட்பியின்யு கோயிலுக்கு மேற்கே உள்ளது, இது பாகனில் எஞ்சியிருக்கும் ஒரே இந்துக் கோயிலாகும். நாத்லாங் கியாங் கோயில் பாகனில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது 11 ஆம் நூற்றாண்டில், அனவ்ரதா மன்னரின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. சில வரலாற்றாசிரியர்கள் இந்த கோயில் 10 ஆம் நூற்றாண்டில், நியாங்-யு சாவ்ராஹான் (தாங்துகி என்றும் அழைக்கப்படுகின்றனர்) ஆட்சியின் போது கட்டப்பட்டதாக நம்புகின்றனர். இந்த கோயில் முதலில் 11 ஆம் நூற்றாண்டின், பர்மிய இந்துக்களுக்காக கட்டபட்டது. இதில் வணிகர்களும், மன்னரின் சேவையில் இருந்த பிராமணர்கள் உள்ளிட்டவர்கள் இருந்தனர். மூலக் கோயிலின் பல கட்டமைப்புகள் அழிந்துவிட்டன, இருப்பினும் பிரதான மண்டபம் உள்ளது. முதலில், இந்த கோயிலில் விஷ்ணுவின் அவதாரச் சிலைகள் இருந்தன; இருப்பினும், இன்று, ஏழு மட்டுமே எஞ்சியுள்ளன. செங்கல்லால் கட்டப்பட்ட கோவில், நிலநடுக்கத்தால் சேதமடைந்து, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்துவருகிறது.
செங்குத்தான உயரமான விதானத்துடன், சதுர வடிவிவில் இக் கோயில் கட்டபட்டுள்ளது. கி.பி 10 ஆம் நூற்றாண்டில் பாகனுக்கு (பேகன்) அழைத்து வரப்பட்ட இந்திய கைவினைஞர்களால் இதுவும் பிற கோயில்களும் கட்டப்பட்டிருக்கலாம். பாகனில் உள்ள மிகப் பழமையான கோயிலான, இதன் பாணி தொடர்ந்து வந்த பல புத்த கட்டிடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.[2]
மேலும் காண்க
[தொகு]- தாட்பின்னியு கோயில் - நத்லாங் கியாங் கோயிலுக்கு கிழக்கே
- ஆனந்தா கோவில் - நத்லாங் கியாங் கோவிலிலிருந்து 0.4 மைல்
- புபய பகோடா - நத்லாங் கியாங் கோயில் இருந்து 0.6 மைல்
- தம்மையாங்கி கோயில் - நத்லாங் கியாங் கோவிலிலிருந்து 0.8 மைல்
- தென்கிழக்கு ஆசியாவில் இந்து சமயம்
- இந்துக் கோவில்
காட்சியகம்
[தொகு]-
நத்லாங் கியாங் கோயில்
-
நுழைவாயிலில் இந்து கடவுள்களின் உருவங்கள்
-
நாதலாங் கியாங் கோயிலில் உள்ள ஏழு விஷ்ணு சிலைகளில் ஒன்று. இங்கு முதலில் விஷ்ணுவுக்கு 10 சிலைகள் இருந்தன; மூன்று அகற்றப்பட்டன, ஒன்று பெர்லின் டாஹ்லெம் அருங்காட்சியகத்தில் உள்ளது.
-
பர்மிய மொழியில் எழுதப்பட்ட நத்லாங் கியாங் கோவிலில் உள்ள கல்கல்வெட்டு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pierre Pichard (1994), Inventory of Monuments at Pagan, vol. 6, Monuments [numbered] 1440-1736, Kiscadale EFEO UNESCO, Paris, see Monument 1600
- ↑ Paul Strachan (1990), Pagan: Art & Architecture of Old Burma, 2nd edition, Kiscadale Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1870838856
வெளி இணைப்புகள்
[தொகு]- Nathlaung Kyaung Temple (built c. 931), with images and text by Robert Fiala of Concordia University, Nebraska, USA
- Pictorial Guide to Pagan. Rangoon: Ministry of Culture. 1975 [1955].
- Location map of Nat Hlaung Kyaung Temple Go Historic Maps