உள்ளடக்கத்துக்குச் செல்

நாகலிங்கம் (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகலிங்கம்
நாகலிங்க மரத்தின் பூக்கள்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கூ. கியானென்சிஸ்
இருசொற் பெயரீடு
கூரூபிட்டா கியானென்சிஸ்
Aubl

நாகலிங்கம் (Couroupita guianensis) தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.[1]

விவரணை

[தொகு]

இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.[2] இலங்கையின் சில பகுதிகளிலும் நாகலிங்க மரங்கள் காணப்படுகின்றன. சிங்கள மொழியில் இது சல் (සල්) என அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் பழம் முற்றி பழுக்க 1 வருடம் முதல் 18 மாதம் வரை கூட ஆகலாம்.

பயன்கள்

[தொகு]

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும்.[சான்று தேவை] இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொறி, சிரங்கு, படர் தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.[3]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mitré, M. 1998. Couroupita guianensis. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. Downloaded on 30 May 2013.
  2. Prance, G. T. & S. A. Mori. Couroupita guianensis Aubl. New York Botanical Garden. 2013.
  3. Al-Dhabi, N. A., et al. (2012). Antimicrobial, antimycobacterial and antibiofilm properties of Couroupita guianensis Aubl. fruit extract. BMC Complementary and Alternative Medicine 12 242–50.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகலிங்கம்_(மரம்)&oldid=3669067" இலிருந்து மீள்விக்கப்பட்டது