நவாப் சிங் சவுகான்
நவாப் சிங் சவுகான் Nawab Singh Chauhan | |
---|---|
ஆறாவது மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | அலிகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இயவான் விச்சித்துபூர், அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசம் | 16 திசம்பர் 1909
இறப்பு | 4 ஏப்ரல் 1981 அலிகர் | (அகவை 71)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | இராச்சு குமார் சிங் சவுகான் சுரேந்திர சிங் சவுகான் யோகேந்திர சிங் சவுகான் |
வாழிடம் | அலிகர் |
நவாப் சிங் சவுகான் (Nawab Singh Chauhan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1909 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] அலிகார் தொகுதியில் இருந்து 6ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்ரினார்.[2][3] "கஞ்ச்" என்ற புனைப்பெயரை பயன்படுத்தி கவிதைகள் எழுதினார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
சவுகான் இயவான் வச்சித்பூர் கிராமத்தில் பிறந்தார். அலிகார் மாவட்டம் இயவான் சிக்கந்தர்பூரில் வசித்து வந்தார். தாக்கூர் புல்வந்த் சிங் தந்தை என்றும் அரிபியாரி தேவி மனைவியென்றும் அறியப்படுகிறார். சவுகான் இடைநிலை கல்வி வரை படித்தார். 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் காலமானார்.[4]
பதவிகள்[தொகு]
சவுகான் வகித்த குறிப்பிடத்தக்க பதவிகள்:
- தலைவர், சில்லா பரிசத்து, அலிகார்
- தலைவர், அகில இந்திய, இரயில்வே அஞ்சல் சேவை
- உறுப்பினர், அகில இந்திய விவசாயிகள் குழு (பாரத் கிரிசக்கு சமாச்சு)
- உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் (மூன்று ஆண்டுகள்)
- மாநிலங்களவை உறுப்பினர் (11 ஆண்டுகள்)
நினைவகம்[தொகு]
அலிகார் மாவட்டத்தில் உள்ள காசிம்பூர் பவர் ஔசு காலனியில் உள்ள நவாப் சிங் சவுகான் கிராமோதயா கல்லூரி இவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Members Bioprofile". 164.100.47.132. Archived from the original on 16 April 2014. பார்க்கப்பட்ட நாள் 27 October 2011.
- ↑ "Archived copy". Archived from the original on 7 February 2006. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Brass, Paul R. (1985). Caste, Faction, and Party in Indian Politics: Election studies. Chanakya Publications. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7001-010-4.
- ↑ Lok Sabha debates. Lok Sabha Secretariat. 1981. p. 10.