உள்ளடக்கத்துக்குச் செல்

நவாப் அப்துல் சப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவாப்
அப்துல் சப்பார்
பிறப்பு(1837-10-24)24 அக்டோபர் 1837
பர்கதி கிராமம், கிழக்கு வர்த்தமான் மாவட்டம், வங்காள மாகாணம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி
இறப்பு30 சனவரி 1918(1918-01-30) (அகவை 80)
குடியுரிமைபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
படித்த கல்வி நிறுவனங்கள்மாநிலக் கல்லூரி
பணிஅரசு அதிகாரி
அமைப்பு(கள்)மத்திய தேசிய முகமதிய சங்கம்,
முகமதிய இலக்கிய சங்கம்
சொந்த ஊர்காசியாரா கிராமம், கிழக்கு வர்த்தமான் மாவட்டம், வங்காள மாகாணம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி
பெற்றோர்கான் பகதூர் குலாம் அசுகர் (தந்தை)
பிள்ளைகள்கான் பகதூர் அப்துல் மோமன் (மகன்)
விருதுகள்கான் பகதூர், இந்தியப் பேரரசின் ஒழுங்கு, நவாப்

நவாப் அப்துல் ஜபார் (Nawab Abdul Jabbar) (24 அக்டோபர் 1837 - 30 சனவரி 1918) ஒரு பிரித்தானிய இந்திய அதிகாரத்துவமும், சமூக சேவகருமாவார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அப்துல் சப்பார் 1837 அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு வர்தமான் மாவட்டத்தின் பர்கதி கிராமத்தில் அமைந்துள்ள தனது தாய்வழி தாத்தாவின் வீட்டில் பிறந்தார். இவரது குடும்ப வீடு கிழக்கு வர்தமானின் காசியாரா என்ற கிராமத்தில் இருந்தது. இவரது தந்தை கான் பகதூர் கோலம் அசுகர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நீதித்துறையில் தலைமை சதர் அமீனாக இருந்தார். அப்துல் சப்பார் வர்தமான் ராஜ் பள்ளியில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இங்கே இவர் இராம்தானு லகரி என்பவரின் மாணவர். பின்னர் இளங்கலை வகுப்பில் மாநிலக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். 1857 இல் தந்தை இறந்த பிறகு இவர் கல்வியை விட்டுவிட்டார். [1]

தொழில்

[தொகு]

தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் துணை நீதிபதியாக சேர்ந்தார். 1889 மற்றும் 1894 க்கு இடையில் இவர் கொல்கத்தாவில் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 1884, 1886 மற்றும் 1893 ஆம் ஆண்டுகளில் வங்காள சட்டமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஓய்வுக்குப் பிறகு இவர் போபால் இராச்சியத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டு 1897 முதல் 1902 வரை பணியாற்றினார். அங்கு சமூக நலப் பணிகளில் இவர் செய்த பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டார். [1]

தென்னாப்பிரிக்காவில் காந்தியின் இனவெறி எதிர்ப்பு இயக்கத்தை ஆதரிக்க சுரேந்திரநாத் பானர்ஜி கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அப்துல் சப்பார் தலைவரக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு, அகில இந்திய முஸ்லீம் லீக் ஆகிய இரண்டும் இவரது வாழ்நாளில் நிறுவப்பட்டது, ஆனால் இவர் ஒருபோதும் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. [1]

முஸ்லிம் சமுதாயத்தில் பங்களிப்பு

[தொகு]

இந்திய முஸ்லிம்களின் முதல் அமைப்பான மத்திய தேசிய முகமதிய சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். முகமதிய இலக்கிய சங்கத்தின் உறுப்பினராகவும், 1900 இல் சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு நவாப் அப்துல் லத்தீப்புடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அப்துல் சப்பார் முஸ்லிம்களிடையே மேற்கத்திய கல்வியை வளர்க்க ஆர்வமாக இருந்தார். முஸ்லீம் தர்ம போரிச்சாய் (முஸ்லீம் மதம் அறிமுகம்) என்ற தலைப்பில் வங்காள மொழியில் ஒரு புத்தகத்தை எழுதினார். இவர் பெண்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டவில்லை. இவர் தனது இரண்டு உருது புத்தகங்களில் பெண் கல்வி குறித்த தனது கருத்தை முன்வைத்தார். [1]

கொல்கத்தாவில், முஸ்லிம் மாணவர்களுக்காக 1896 இல் டெய்லர் விடுதி கட்டப்பட்டது. அதன் ஆரோக்கியமற்ற சூழல் மற்றும் போதுமான வசதிகள் இல்லாததால் 1908 ஆம் ஆண்டில் புதிய விடுதிகளை நிறுவ இவர் இயக்கத்தைத் தொடங்கினார். இறுதியில் முஸ்லிம் மாணவர்களுக்காக பேக்கர் விடுதி நிறுவப்பட்டது. [1]

மரியாதை

[தொகு]

அப்துல் சப்பாருக்கு 1895 இல் கான் பகதூர் மற்றும் இந்தியப் பேரர்சின் ஒழுங்கு என்ற கௌரவம் வழங்கப்பட்டது. பின்னர் இவர் நவாப் பட்டத்தையும் பெற்றார். [1]

இறப்பு

[தொகு]

30 சனவரி 1918 இல் அப்துல் சப்பார் இறந்தார். [1]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாப்_அப்துல்_சப்பார்&oldid=3091877" இலிருந்து மீள்விக்கப்பட்டது