நல்லம்பள்ளி
Appearance
நல்லம்பள்ளி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 636807 |
நல்லம்பள்ளி (Nallampalli) என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும்.[1][2]
அமைவிடம்[தொகு]
நல்லம்பள்ளி சேலத்திலிருந்து 55 கிமீ தொலைவிலும், மாவட்ட தலைநகரமான தர்மபுரியிலிருந்து 9 கிமீ தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7லில் அமைந்துள்ளது. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 32 பஞ்சாயத்து கிராமங்கள் அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1613 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7079 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3523 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3556 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 72.7 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-09-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-09-02.
- ↑ http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Nallampalli/Nallampalli