நற்கு வனவிலங்கு சரணாலயம்
நற்கு வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
நற்கு வனவிலங்கு சரணாலயம் உல் ஆற்றிலிருந்து | |
அமைவிடம் | மண்டி மாவட்டம் இமாச்சலப் பிரதேசம் |
அண்மைய நகரம் | மண்டி |
பரப்பளவு | 132.3731 km2 (51.1095 sq mi) |
நற்கு வனவிலங்கு சரணாலயம் (Nargu Wildlife Sanctuary) என்பது இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உல் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது சரணாலயமாக 1999-ல் அறிவிக்கப்பட்டது. இச்சரணாலயம் 132.37 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. சரணாலயத்தின் சரிவுகளில் ஆல்பைன் காடுகள் காணப்படுகின்றன. இச்சரணாலயம் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் தாயகமாக உள்ளது.[1]
நிலவியல்
[தொகு]சுமார் 278 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த சரணாலயம் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 23-ல் இமாச்சலப்பிரதேச அரசால் அறிவிக்கப்பட்டது. 29 நவம்பர் 2013 அன்று, எல்லைகளை வரையறை செய்ததன் காரணமாக, பரப்பளவு 132.3731 km2 (51.1095 sq mi) ஆகக் குறைக்கப்பட்டது. இச்சரணாலயம் வடக்கு32°06′49″N 76°56′35″E / 32.11361°N 76.94306°E, கிழக்கு31°52′54″N 77°04′50″E / 31.88167°N 77.08056°E, தெற்கு31°48′42″N 77°02′41″E / 31.81167°N 77.04472°E, மேற்கு32°01′39″N 76°51′31″E / 32.02750°N 76.85861°E புவிசார் ஒருங்கிணைப்புகளுக்குள் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் குல்லு மாவட்டத்தின் குல்லு வனப் பிரிவின் கீழ் வருகிறது. இருப்பினும் இதன் சில பகுதிகள் மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2]
அணுகல்
[தொகு]- விமான நிலையம்:- புந்தார் (குல்லு)
- தொடருந்து நிலையம்: ஜோகிந்தர்நகர் (40 கி. மீ. தொலைவில்)
- சாலை:- சரணாலயம் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nargu Wildlife Sanctuary". WildTrails Recent Sightings | The One-Stop Destination for all your Wildlife Travels (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
- ↑ Forest Department, Principal Secretary (Forests) (29 Nov 2013). "Notification No. FFE-B-F(6)-16/1999-Nargu" (PDF). Government of Himachal Pradesh. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021.