நரேந்திரசேனன்
நரேந்திரசேனன் | |
---|---|
ஆட்சிக்காலம் | சுமார் 455 - 480 பொ.ச. |
முன்னையவர் | இரண்டாம் பிரவரசேனன் |
பின்னையவர் | இரண்டாம் பிரிதிவிசேனன் |
துணைவர் | அஜ்ஜிதபட்டாரிகா |
அரசமரபு | வாகாடகப் பேரரசு |
நரேந்திரசேன (Narendrasena) ( ஆட்சி சுமார் 455 – 480 பொ.ச. [1] ) வாகாட வம்சத்தின் நந்திவர்தன-பிரவரபுர கிளையின் ஆட்சியாளர் ஆவார். இவர் தனது தந்தை இரண்டாம் பிரவரசேனருக்குப் பிறகு அரியனை ஏறினார்.
வரலாறு
[தொகு]நரேந்திரசேனன், இரண்டாம் பிரவரசேனனின் தலைமை ராணியாக இருந்த அஜ்னகபட்டாரிகாவிற்கு பிறந்திருக்கலாம். மேலும், இவர் பிரவரசேனனின் 16வது ஆட்சியாண்டின் சாசனத்தில் "நரிந்தராஜாவின்" (நரேந்திரசேனனைக் குறிக்கலாம்) தாயாகக் குறிப்பிடப்படுகிறார். [2] இவரது தந்தையின் ஆட்சியின் போது, நரேந்திரசேனன் "குந்தள மன்னனின்" மகள் என்று விவரிக்கப்பட்ட அஜ்ஜிதபட்டாரிகா என்ற இளவரசியை மணந்தார். இந்த "குந்தள மன்னன்" யார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் அடிக்கடி கதம்ப மன்னன் ககுஸ்தவர்மனுடன் அடையாளம் காணப்படுகிறார். அவர் தனது மகள்களை பல முக்கிய அரச குடும்பங்களில் திருமணம் செய்ததாகவும் அறியப்படுகிறது. [3] [4] [5]
ஆட்சி
[தொகு]இரண்டாம் பிரவரசேனனின் மரணத்தைத் தொடர்ந்து வாரிசுப் போராட்டம் நடந்திருக்கலாம். அதிலிருந்து நரேந்திரசேனன் வெற்றி பெற்றார். [6] வாகாடகப் பதிவுகள், இவர் சில வெளிப்படுத்தப்படாத பேரழிவைச் சந்தித்த பின்னர் "தனது குடும்பத்தின் செல்வத்தை மீண்டும் பெற்றிருக்க வேண்டும்" என்று கூறுகிறது, பல வரலாற்றாசிரியர்கள் இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு இந்த வாரிசுப் போரைக் குறிப்பிடுவதாக விளக்கியுள்ளனர். எவ்வாறாயினும், ஏ.எஸ் .அல்டேகர், அதற்குப் பதிலாக, பஸ்தார் பிராந்தியத்தின் நள மன்னன் பவதத்தவர்மன் வாகாடகா இராச்சியத்தின் மீது படையெடுத்ததைக் குறிப்பிடுகிறார். இவர் விதர்பாவில் ஆழமாக ஊடுருவி, முந்தைய வகாடகா தலைநகரான நந்திவர்தனத்தை ஆக்கிரமித்ததாக அறியப்படுகிறது. [7] பவதத்தவர்மன் இறந்த சிறிது காலத்திலேயே நரேந்திரசேனன் தனது இராச்சியத்திலிருந்து நளன்களை வெற்றிகரமாக விரட்டியடித்தார் என்று அல்டேகர் கருதுகிறார்.
நரேந்திரசேனனின் மகனும் வாரிசுமான இரண்டாம் பிருதிவிசேனனின் கல்வெட்டுகள், நரேந்திரசேனனின் அதிகாரம் தெற்கு கோசலம், மேகலா மற்றும் மாளவ ஆட்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்துகிறது. [3] [8] பல வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றை வெற்று பெருமை அல்லது மிகைப்படுத்தல் என்று கருதுகின்றனர், ஆனால் நரேந்திரசேனன் உண்மையில் வாகாடகா செல்வாக்கு மண்டலத்தை பெரிதும் விரிவுபடுத்தியிருக்கலாம். குப்தப் பேரரசு, அப்போது வட இந்தியாவில் மேலாதிக்க சக்தியாக இருந்தது. அப்போது படையெடுத்த ஹூனப் படைகளுடன் போரில் சிக்கியது. இது வாகாடகாக்களை மத்திய இந்தியாவிற்கு விரிவுபடுத்தியது. [9] நளர்களுக்கு எதிரான போரை நரேந்திரசேனன் தொடர்ந்ததன் விளைவாக வாகாடகா அதிகாரம் மேலும் நீட்டிக்கப்பட்டது. குறிப்பாக இன்றைய சத்தீசுகரைச் சுற்றியுள்ள பகுதிகளில். பவதத்தவர்மனின் சகோதரரும் வாரிசுமான இசுகந்தவர்மன், தனது குடும்பத்தின் செல்வத்தை மீட்டெடுத்து, தனது தலைநகரை மீண்டும் குடியமர்த்த வேண்டியிருந்ததால், நரேந்திரசேனன் நளன்களின் தாயகத்தின் மீது படையெடுத்து அவர்களின் தலைநகரைக் கைப்பற்றியிருக்கலாம். [7]
சான்றுகள்
[தொகு]- ↑ Vakatakas: Sources and History.
- ↑ Bakker, Hans (1997). The Vakatakas: An Essay in Hindu Iconology. Groningen: Egbert Forsten. p. 24. ISBN 9069801000.
- ↑ 3.0 3.1 D.C. Sircar (1997). The Classical Age. Bharatiya Vidya Bhavan. p. 184.
- ↑ A.S. Altekar (2007). The Vakataka-Gupta Age. Motilal Banarsi Dass. p. 106. ISBN 9788120800434.
- ↑ Sastri, K.A. Nilakanta (1961). A History of South India from Prehistoric Times to the Fall of Vijayanagar. Oxford University Press. p. 109.
- ↑ Singh, Upinder (2016). A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century. Pearson India Education Services. p. 484. ISBN 9788131716779.
- ↑ 7.0 7.1 A.S. Altekar (2007). The Vakataka-Gupta Age. Motilal Banarsi Dass. ISBN 9788120800434.
- ↑ Bakker (1997), p. 29
- ↑ "Vakataka dynasty | Indian history | Britannica". Britannica. Britannica. Retrieved 26 January 2021.