உள்ளடக்கத்துக்குச் செல்

நரசிம்ம ஜரனி

ஆள்கூறுகள்: 17°54′11″N 77°32′38″E / 17.9031°N 77.5439°E / 17.9031; 77.5439
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரசிம்ம ஜரனி
கர்நாடகத்தின் பீதரில் உள்ள நரசிம்ம ஜரனி குகைக் கோயில்
நரசிம்ம ஜரனி is located in கருநாடகம்
நரசிம்ம ஜரனி
கருநாடகத்தில் அமைவிடம்
நரசிம்ம ஜரனி is located in இந்தியா
நரசிம்ம ஜரனி
நரசிம்ம ஜரனி (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:பிதர் மாவட்டம்
அமைவு:மல்காபூர் சாலை, தேசிய நெடுஞ்சாலை 161B, மங்கள்பேட்டை, பகல்வாடா, பிதர் - 585401
ஏற்றம்:627 m (2,057 அடி)
ஆள்கூறுகள்:17°54′11″N 77°32′38″E / 17.9031°N 77.5439°E / 17.9031; 77.5439
கோயில் தகவல்கள்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:ஸ்ரீ நரசிம்ம ஜரனி சமஸ்தான்

நரசிம்ம ஜரனி (Narasimha Jharni) ( கன்னடம்: ನರಸಿಂಹ ಝರನಿ) என்பது கர்நாடக மாநிலம் பீதர் அருகே உள்ள ஒரு குகைக் கோயிலாகும். இது நரசிம்மருக்கு அமைக்கப்பட்ட கோயிலாகும். இந்த தொன்மையான கோயில் நகரிலிருந்து சுமார் 4.8 கிமீ தொலைவில் உள்ளது. இது 300 மீட்டர் நீண்ட குகையில் அமைந்துள்ளது[1] இது மனிச்சூலா மலைத்தொடரின் கீழ் உள்ளது.[2]

கர்நாடகத்தின் பீதரில் உள்ள நரசிம்ம ஜரனி குகைக் கோயில்

கோயில் அமைப்பு

[தொகு]

குகைக்கோயிலானது ஒரு நீண்ட சுரங்கம் போன்ற குகையில் அமைந்துள்ளது. இக்குகைச் சுரங்கமானது பல நூறு அடிகள் நீண்டு உள்ளது. மேலும் குகைச் சுரங்கத்தில் நான்கு அடி உயரத்திலிருந்து ஐந்து அடி உயரம் வரை தண்ணீர் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் மார்புவரை உள்ள இந்த நீரில் நடந்துதான் செல்லவேண்டும். இது அதிசயமான கட்டடக்கலையைக் கொண்டதாக உள்ளது. இந்த அதிச சுரங்கப்பாதையின் முடிவில் அமைந்துள்ள குகைச் சுவரில் நரசிம்மரின் உருவத்தைக் காணலாம்.[3] குகையின் விதானமானது எந்தவித கட்டுமானமுமின்றி குகையின் இறுதிவரை தொடர்கிறது இதுவரை இதனால் யாராலும் பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.[1] மக்கள் கோவிந்தா கோவிந்தா மற்றும் நரசிம்மா ஹரி ஹரி ஆகிய உச்சாடங்களை பக்தியுடன் கூறிக்கொண்டு செல்கின்றனர். குகைக் கோவிலின் முடிவில் இரண்டு தெய்வங்கள் உள்ளன அவை - நரசிம்மர் மற்றும் (ஜலாசுரன் வழிபட்ட சிவ லிங்கம் ஆகும். குகையின் முடிவில் உள்ள இந்த இடத்தில் ஏறக்குறைய எட்டு பேர் நின்று தரிசிக்க இயலுமளவுக்கே சிறியதாக இடம் உள்ளது. தரிசனத்துக்கு சென்றவர்கள் திரும்பும்வரை மற்ற பக்தர்கள் குகை வழியில் உள்ள நீரில் நின்றபடி காத்திருக்க வேண்டும்.[2] தண்ணீர் ஊற்றானது தொடர்ந்து பாய்கிறது. மக்கள் தொடர்ந்து அதில் நடக்கின்றதால், நீர் தெளிவாக இல்லை. பக்தர்கள் தங்கள் குழந்தைகளை நீரில் மூழ்காமல் பாதுகாக்க தங்கள் தோளில் சுமந்து கோயிலுக்குள் செல்கின்றனர். இந்த நீரில் சல்பர் உள்ளது, இதனால் தோல் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கான பண்புகள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குகைக் கோயிலுக்கு எதிரே சற்று தாழ்வான இடத்தில் ஒரு சிறிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்துக்கு குகையில் இருந்து வெளியேறும் ஊற்று நீர் வந்து சேருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் மிகுதியாக வருகின்றனர். இந்த கோவிலிலுக்கு செல்லும், ஒட்டுமொத்த அனுபவமும் சுவாரசியமாக இருக்கும்.

தொன்மவியல்

[தொகு]

விஷ்ணுவின் நான்காவது அவதாரமும் இரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மர், சிவனின் ஒரு பக்தரான ஜரசாசூரன் (ஜலசூரன்) என்ற பெயரைக் கொண்ட மற்றொரு அசுரனைக் கொன்றதாக சொல்லப்படுகிறது. ஜரசாசூரன் தனது உயிர் பிரியும் நேரத்தில் விஷ்ணுவிடம் (நரசிம்மரிடம்) தான் வசித்து வந்த குகைக்குள் வந்து, பக்தர்களுக்கு வரங்களை அளிக்க வேண்டினான். அவனது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற நரசிம்மர் குகைக்குள் வந்தார்.[4] குகையின் கல் சுவரில் நரசிம்மரின் புடைப்புத் தோற்றம் உள்ளது. கொல்லப்பட்ட அசுரன் பின்னர், தண்ணீராக மாறி நரசிம்மரின் பாதங்களில் ஓட்ட ஆரம்பித்தான் என்று நம்புகின்றனர். அதன் பின்னர் குகையில் ஊற்றாக உள்ள நீர் ஓட்டம் தொடர்ந்தது. கோடைக் காலத்திலும் வறண்டு போகவில்லை.

நிலவியல்

[தொகு]

நரசிம்ம ஜரனியானது ஒரு சுனையாகும். பிதார் உயரமான பகுதியில் இருந்தாலும், கோயிலானது தாழ்வான இடத்தில் உள்ளது. மலைப்பாங்கான நிலப்பகுதியின் சரிவுகளுக்கு நடுவே இப்பகுதி அமைந்துள்ளது. பீடபூமியின் கீழே செந்நிறக் களிமண் பாறை உள்ளது இது மேற்பரப்பில் உள்ள நீரை கீழே வெளியேற்றுகிறது. பீடபூமியில் அமைந்துள்ள சிந்நிறக் களிமண் பாறை மேலோடு, 30.5 மீட்டர் முதல் 152.4 மீட்டர் வரை தீவிரமான மாறுபாடு உடையதாக உள்ளது. இந்த பாறை அமைப்பு மற்றும் குகையின் பின்புற கற்களுக்கு இடையே உள்ள பிளவுகளானது நீரூற்றுகளை உருவாக்குகிறது.[5] இதேபோன்ற நீரூற்றுகள் பீதரின் குரு நானக் ஜிரா சாஹிப் குருத்வாரா, பாப்பனாச சிவன் கோவில் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.

முக்கியத்துவம்

[தொகு]

நரசிம்மர் ஜர்னி குகைக் கோவிலில் உள்ள இறைவனின் உருவம் சுயம்பு என பக்தர்கள் கருதி பெருமளவில் வருகின்றனர். வேறுவிதமாகக் கூறினால், இந்த தெய்வத்தை மிகவும் சக்தி வாய்ந்தது என்ற நம்பிக்கை உள்ளது.

வளர்ச்சிப் பணிகள்

[தொகு]

பக்தர்களின் வசதிக்காக, குகைக்கோயிலுக்குள் வளிப் பதன வசதி மற்றும் மின் விளக்கு தேவைகளுக்காக மின்சாரமயமாக்கப்பட்டுள்ளது. காலை 8 முதல் மாலை 6 மணி வரை இந்த கோவில் திறக்கப்பட்டுகிறது. மேலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் கோயில் வளாகத்தில் மேலும் வசதிகள் செய்ய முறையாக திட்டமிடப்பட்டுள்ளது. குகைக்குள் இருந்து வரும் தண்ணீரை முறையாக வெளியேற்றுதல், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம், பல்நோக்கு மண்டபம், தங்கும் அறைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை உருவாக்குதல் போன்ற மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Bidar: Tourist Attractions". NIC, INDIA. Archived from the original on 9 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 6 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Narasimha Jhira Cave Temple". பார்க்கப்பட்ட நாள் 6 March 2015.
  3. "Narasimha Cave Temple in Bidar". பார்க்கப்பட்ட நாள் 6 March 2015.
  4. "Jharani Narasimha Cave Temple". Archived from the original on 10 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Shivasharanappa; Padaki Srinivas. "STUDIES ON SEASONAL VARIATION OF GROUND WATER QUALI TY USING MULTIVARIATE ANALYSIS FOR BIDAR URBAN & ITS INDUSTRIAL AREA (KARNATAKA-STATE, INDIA)". International Journal of Research in Engineering and Technology (IC-RICE Conference Issue): 252. http://esatjournals.org/Volumes/IJRET/2013V02/I13/IJRET20130213045.pdf. பார்த்த நாள்: 6 March 2015. 
  6. "Narasimha Swami Zarni temple getting a facelift". The Hindu. 30 April 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/narasimha-swami-zarni-temple-getting-a-facelift/article319629.ece. பார்த்த நாள்: 6 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிம்ம_ஜரனி&oldid=4136680" இலிருந்து மீள்விக்கப்பட்டது