நயாரி வெல்லி
நயாரி வேலி | |
---|---|
உறுப்பினர் அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை-செப்பா தொகுதி | |
பதவியில் 1980–1988 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பியாங் கிராமம், செப்பா துணைப்பிரிவு | 2 அக்டோபர் 1945
இறப்பு | 21 அக்டோபர் 1988 | (அகவை 43)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி, இந்திய தேசிய காங்கிரசு |
நயாரி வெல்லி (Nyari Welly-2 அக்டோபர் 1945 – 21 அக்டோபர் 1988 [1] [2] ) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் அருணாச்சலப் பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அருணாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவர் ஆவார்.
சமூக ஆர்வலர்
[தொகு]வெல்லி, கமெங் மாவட்டத்தில், செப்பா துணைப்பிரிவின் பியாங் கிராமத்தில் பிறந்தார். முறையான கல்வி பயிலாத இவர்,[3] அரசியலுக்கு வருவதற்கு முன்பு சமூக ஆர்வலராக இருந்தார்.[4] வெல்லி 1970 மற்றும் 1974க்கு இடையில் பெண்கள் நல மையத்தின் சேப்பா கிளையின் தலைவராகப் பணியாற்றினார். 1976ஆம் ஆண்டு காங்கிரசு சேவா தளத்தின் சேப்பா கிளையின் பெண் அமைப்பாளராகப் பணியாற்றினார்.[2]
1978 தேர்தல்
[தொகு]1978 அருணாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் (மொத்தம் 86 வேட்பாளர்களில்) போட்டியிட்ட இரண்டு பெண் வேட்பாளர்களில் வெல்லியும் ஒருவர். இவர் செப்பா தொகுதியில் அருணாச்சல மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் 1,649 வாக்குகளுடன் (தொகுதியில் 25.44% வாக்குகள்) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[5]
1980 தேர்தல்
[தொகு]1980 அருணாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் செப்பா தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட இவர் பிபிஏ கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இம்முறை இவர் 2,817 வாக்குகள் (43.28%) பெற்று, இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று, மாநிலத்தின் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் சட்டமன்ற உறுப்பினரானார்.[6][1][7] இருப்பினும், சிபோ காய் 1978ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக இருந்ததால் இவர் சட்டமன்றத்தில் அமர்ந்த இரண்டாவது பெண்.[8] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மோடி செங்கியையும், இந்திய தேசிய காங்கிரசு (அ) கட்சியின் கவும்செங் ரினோவையும் வெல்லி தோற்கடித்தார்.[6] வெல்லியின் தேர்தல் வெற்றிக்கு இப்பகுதியில் சக்திவாய்ந்த மனிதராக இருந்த இவரது கணவரின் செல்வாக்கு காரணமாக அமைந்தது.[4]
சட்டசபையில் குழந்தை திருமணம், பலதார மணம், வரதட்சிணை போன்ற பிரச்சினைகளை வெல்லி எதிர்கொண்டார். இந்த நடைமுறைகளைச் சட்டத்திற்குப் புறம்பாகச் செய்யும் மசோதாவைக் கொண்டு வந்தபோது, பேரவையின் ஆண் உறுப்பினர்கள் உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.[4]
1984 தேர்தல்
[தொகு]1984 அருணாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் வெல்லி செப்பா தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த முறை இவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் 3,419 வாக்குகள் (35.35%) பெற்றார். சுயேச்சை வேட்பாளர் மேப் தாதாவை 43 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1984 தேர்தலில், இரண்டாவது பெண், நோடிகிங் நம்போங் தொகுதியிலிருந்து, கமோலி மோசாங், சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]வெல்லி நிஷி மக்கள் பிரிவினைச் சார்ந்தவர்.[7] 2013ஆம் ஆண்டு வரை அருணாச்சல பிரதேச மாநில அரசாங்கத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப அமைச்சராகப் பணியாற்றிய ஆட்டம் வெல்லியின் தாயார் ஆவார்.[1] இவருடைய முக்கிய பொழுதுபோக்கு தோட்டக்கலை மற்றும் கைப்பின்னல் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Echo of Arunachal. First elected woman MLA remembered
- ↑ 2.0 2.1 2.2 Arunachal News, Vol. 9, Eds. 1–4. 1980. pp. 27-28
- ↑ Mandal, Ramkrishna, and Minto Ete. Women in North East India: Role and Status of Arunachal Women. New Delhi: Mittal Publications, 2010. p. 58
- ↑ 4.0 4.1 4.2 Johsi, H. G. Arunachal Pradesh: Past and Present. New Delhi, India: Mittal Publications, 2005. pp. 122-123
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1978 TO THE LEGISLATIVE ASSEMBLY OF ARUNACHAL PRADESH பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 6.0 6.1 Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1980 TO THE LEGISLATIVE ASSEMBLY OF ARUNACHAL PRADESH பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 7.0 7.1 National Seminar on "Ethnic Groups of North East India: Problems Prospects", Indira Barua, Sarthak Sengupta, and Deepanjana Dutta Das. Ethnic Groups, Cultural Continuities, and Social Change in North East India. New Delhi: Mittal Publications, 1999. p. 259
- ↑ Arunachal Front. Arunachal to ink political history
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1984 TO THE LEGISLATIVE ASSEMBLY OF ARUNACHAL PRADESH பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்