நமீப் பாலைவனம்
Appearance

நமீப் பாலைவனம் (Namib desert) தென் மேற்கு ஆப்பிரிக்காவில், நமீபியா நாட்டில் உள்ள ஒரு பாலைவனம் ஆகும்.[1] நமீப் என்ற நாமா மொழிச் சொல்லுக்கு பரந்த மிகப்பெரிய இடம் என்று பொருளாகும். இந்த பாலைவனம் நமீபியாவில் பெரும் அளவிலும் மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு அங்கோலாவில் சிறிதளவு மட்டும் அமைந்துள்ளது.
இதன் மொத்த பரப்பளவு 3,077,700 ஹெக்டேர். பாதுகாக்கப்பட்ட பரப்பளவு 899,500 ஹெக்டேர் ஆகும். இப்பாலைவனமும், அட்லாண்டிக் பெருங்கடலும் சேரும் இடங்களில் பெரிய அளவில் மணல் திட்டுகள் கொண்டுள்ளது. இதனை சசூஸ்வெலெய் (Sossusvlei)[2] என்று அழைக்கிறார்கள். இந்த மணல் திட்டுப் பகுதியில் கடல் சிங்கங்கள் இளைப்பாற வருகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இவிடம் கவர்ந்துள்ளது.
24°45′07″S 15°16′35″E / 24.75194°S 15.27639°E
மேற்கோள்கள்
[தொகு]