உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர்ச்சத்து கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நப்ஃதோகுயினோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வைட்டமின் கே1 (ஃபில்லோகுவினோன்). இரு வகை வைட்டமின்களும் ஒரு வினைசெயல் நாஃப்தோகுவினோன் வளைய தொகுதியையும் அலிஃபேட்டிக் பக்கச் சங்கிலியையும் கொண்டுள்ளன. ஃபில்லோகுவினோனில் ஃபிட்டில் பக்கச் சங்கிலி உள்ளது.
வைட்டமின் கே2 (மெனாகுவினோன்). மெனாகுவினோனில் பக்கச் சங்கிலியானது ஐசோப்ரினாய்டு எச்சங்களின் மாறும் எண்ணிக்கையாலானது.

உயிர்ச்சத்து கே (K என்ற எழுத்து ஜெர்மன் மற்றும் ஸ்காண்டினேவியன் மொழிகளிலிருந்து வந்த சொல்லான[1] "கொகுலேஷன்ஸ் (Koagulations)-வைட்டமின்" என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்) என்பது சில குறிப்பிட்ட புரதங்களின் மாற்றச் சுழற்சிக்குப் பிந்தைய மாற்றத்திற்கு அவசியமான லிப்போஃபிலிக், ஹைட்ரோஃபோபிக் வைட்டமின்கள் குழுவைக் குறிக்கிறது. இவை இரத்தம் உறைதலுக்கு மிகவும் அவசியமாகும். அவை வேதியியல் ரீதியாக 2-மெத்தில்-1,4-நாஃப்தோகுவினோன் (2-methyl-1,4-naphthoquinone) வழிப்பொருள்களாகும்.

வைட்டமின் கே1 ஃபில்லோகுவினோன் (phylloquinone) அல்லது ஃபித்தோமெனடியோன் (ஃபித்தோனடியோன் (phytomenadione) என்றும் அழைக்கப்படும்) என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் கே2 (மெனாகுவினோன் (menaquinone), மெனாடெட்ரனோன் (menatetrenone)) வழக்கமாக பெருங்குடலில்[2] உள்ள பேக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படுகிறது. உணவில் இதன் குறைபாடு ஏற்படுவது அரிதானதாகும். குடல் மிக மோசமாக சேதமடைந்திருந்து மூலக்கூறை உட்கிரகிக்க முடியாமல் போனாலோ அல்லது பரந்த அளவிலான நுண்ணுயிர் எதிர் மருந்து பயன்படுத்தும்பட்சத்தில் ஏற்படுவது போன்று மனித உடலில் நுண்ணுயிர்த் தொகுதிகளால் அவற்றின் உற்பத்தி இயக்கம் குறைந்தாலோ மட்டுமே அவ்வாறு ஏற்படும்[3].

வைட்டமின் கே-யில், மூன்று செயற்கைத் தொகுப்பு வகைகள் உள்ளன. அவை வைட்டமின்கள் K3, K4 மற்றும் K5 ஆகியவையாகும். அவை செல்லப் பிராணிகளுக்கான உணவு உற்பத்தி செய்யும் தொழிற்துறைகளிலும் (வைட்டமின் கே3) பூஞ்சை வளர்ச்சித் தடுப்பு முறைகளிலும் (வைட்டமின் கே5) [4] பயன்படுகின்றன.

வேதியியல் கட்டமைப்பு

[தொகு]

வைட்டமின் கே குழுவின் அனைத்து உறுப்பு வைட்டமின்களுக்கும் பொதுவாக பகிரப்பட்ட ஒரு மெத்திலேற்றப்பட்ட நாஃப்தோகுவினோன் வளையக் கட்டமைப்பு உள்ளது. மேலும் அவை 3 வது இடத்தில் (படம் 1 ஐக் காண்க) இணைந்துள்ள கொழுப்பார்ந்த (அலிஃபேட்டிக்) பக்கச் சங்கிலியில் வேறுபடுகின்றன. ஃபில்லோகுவினோன் (வைட்டமின் கே1 எனவும் அழைக்கப்படுவது) அதன் பக்கச் சங்கிலியில் மாறாமல் நான்கு ஐசோபெர்னாய்டு எச்சங்களைக் கொண்டுள்ளது, அதில் ஒன்று நிறைவுறாததாகும்.

மெனாகுவினோன்களின் பக்கச் சங்கிலிகள் மாறும் எண்ணிக்கையுள்ள நிறைவுறா ஐசோப்ரெனாய்டு எச்சங்களால் ஆனவை. பொதுவாக அவை MK-n எனக் குறிக்கப்படுகின்றன, இதில் n என்பது ஐசோப்ரெனாய்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

அனைத்து K-வைட்டமின்களின் செயலின் இயங்கு முறையும் ஒன்றே போல் உள்ளன என்பதாலேயே நாஃப்தோகுவினோனே வினைச்செயல் தொகுதி என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும் குடல் உட்கிரகித்தல், கொண்டுசெல்லல், திசு விநியோகம் மற்றும் உயிரியல் ரீதியான கிடைக்கும் தன்மைகள் ஆகியவற்றைப் பொறுத்து இதில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த வேறுபாடுகள் பல்வேறு பக்கச் சங்கிலிகளின் வேறுபடும் லிப்பிடு கவர்ச்சி கொண்ட பக்கச் சங்கிலிகளாலும் அவை ஏற்படும் வெவ்வேறு உணவு வகைகளாலும் ஏற்படுகின்றன.

உடலியக்கவியல்

[தொகு]

வைட்டமின் கே ஆனது புரதங்களிலுள்ள குறிப்பிட்ட குளுட்டாமேட் எச்சங்களின் கார்பாக்சிலேற்றத்துடனும் தொடர்புடையதாக உள்ளது, இதன் மூலம் காமா-கார்பாக்சிகுளுட்டாமேட் எச்சங்கள் (சுருக்கமாக க்ளா-எச்சங்கள் எனப்படுகின்றன) உருவாகின்றன. மாற்றம் செய்யப்பட்ட எச்சங்கள் பெரும்பாலும் (ஆனால் எப்போதுமல்ல) க்ளா டொமைன்கள் எனப்படும் குறிப்பிட்ட புரதக் களங்களிலேயே இடம்பெறுகின்றன. வழக்கமாக க்ளா-எச்சங்கள் கால்சியம் பிணைப்பாக்கங்களில் தொடர்புடையவை ஆகும். அறியப்பட்ட அனைத்து க்ளா-புரதங்களின் உயிரியல் செயல்பாட்டுக்கும் க்ளா-எச்சங்கள் இன்றியமையாதனவாகும்.[5]

இதுவரை க்ளா களங்கள் உள்ள 14 மனித புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மூன்று உடலியக்க செயல்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன:

  • இரத்தம் உறைதல்: (புரோத்ரோம்பின் (காரணி II), காரணிகள் VII, IX, X, புரதம் C, புரதம் S மற்றும் புரதம் Z).[6]
  • எலும்பு வளர்சிதைமாற்றம்: எலும்பு க்ளா-புரதம் (BGP) எனவும் அழைக்கப்படும் ஆஸ்டியோகால்சின் மற்றும் மேட்ரிக்ஸ் க்ளா புரதம் (MGP).[7]
  • இரத்தநாள உயிரியல்.[8]

பரிந்துரைக்கும் அளவுகள்

[தொகு]

25-வயதுள்ள ஒரு ஆணுக்கு போதிய வைட்டமின் கே உட்கொள்ளலுக்கான (AI) அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டு குறிப்பு உட்கொள்ளளவு (DRI) நாளொன்றுக்கு 120 மைக்ரோகிராம் ஆகும். வயது வந்த பெண்களுக்கான இந்த ஃபைட்டோநியூட்ரியண்ட்டின் போதிய உட்கொள்ளளவு (AI) நாளொன்றுக்கு 90 மைக்ரோகிராம் ஆகும். அதுவே சிறு குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 10–20 மைக்ரோகிராம் ஆகும். சிறுவர்கள் மற்றும் இளம் சிறாருக்கு நாளொன்றுக்கு 15–100 மைக்ரோகிராம் ஆகும். ஆஸ்டியோகால்சினின் அதிகபட்ச கார்பாக்சிலேற்றத்தைப் பெற, ஒருவர் 1000 μg வைட்டமின் கே1 எடுத்துக்கொள்ள வேண்டும் என 2002 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. பிற லிப்போசில் கரையக்கூடிய வைட்டமின்களைப் (A, D, E) போல வைட்டமின் கே, மனித உடலில் கொழுப்புத் திசுக்களில் சேமிக்கப்படுகிறது.

நச்சியல்

[தொகு]

இருப்பினும் கூடுதல் வழங்கலினால் ஒவ்வாமை எதிர்வினைக்கும் சாத்தியமுள்ளது, ஃபில்லோகுவினோன் (வைட்டமின் கே1) அல்லது மெனாகுவினோன் (வைட்டமின் கே2) வகை வைட்டமின் கேவின் அதிக அளவுகளுக்கும் நச்சுத்தன்மைக்கும் எதுவும் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்படவில்லை, ஆகவே ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர் உட்கொள்ளல் அளவு (UL) எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இருப்பினும், வைட்டமின் கேயின் செயற்கைத் தொகுப்பாக்க வகையான வைட்டமின் கே3 (மெனடியோன்), நச்சுத் தன்மை வாய்ந்தது என்பது விளக்கப்பட்ட உண்மையாகும். உண்மையில், இந்த வகை வைட்டமினை அதிக அளவு எடுத்துக்கொள்வதால் ஒவ்வாமை எதிர்வினைகள், சிவப்பு செல் இரத்த சோகை மற்றும் நுரையீரல் செல்களில் செல்லளவு நச்சுத்தன்மை போன்றவை ஏற்படக்கூடும் என்பதால் FDA அமைப்பு இவற்றை கடைகளில் விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளது.[9]

மருந்து இடைசெயல்கள்

[தொகு]

ஃபில்லோகுவினோன் (K1)[10][11] அல்லது மெனாகுவினோன் (K2) ஆகியவை வார்ஃபெரின் போன்ற இரத்த உறைதல் தடுப்பிகளின் இரத்தம் உறைதலைத் தடுக்கும் திறன் கொண்டவையாகும். அது வைட்டமின் கேவின் செயலில் குறுக்கிட்டு இரத்தம் உறைதலைத் தடுக்கிறது. இது இந்த மருந்துகளின் குணத்தை மாற்றி தமனியிலான நீண்ட காலத்திய கால்சியமேற்றத்தை உருவாக்குகிறது.

மூலங்கள்

[தொகு]

பசளிக்கீரை, தண்டு கீரை மற்றும் கடுகு (எ.கா. முட்டைக்கோசு, கோசுக் கீரை, காலிஃபிளவர், பூக்கோசு மற்றும் கிளைக் கோசுகள்) போன்ற பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் கே1 அதிகமாகக் காணப்படுகிறது; வெண்ணெய்ப்பழம் மற்றும் கிவிப்பழம் போன்ற சில பழங்களிலும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. குறிப்புக்கு உதவியாகக் கூறுவதானால், இரு தேக்கரண்டி வோக்கோசுவில் பரிந்துரைக்கப்படும் ஒரு நாளைக்கான வைட்டமின் கே அளவின் 153 சதம் உள்ளது.[12]. சோயாபீன் போன்ற சில தாவர எண்ணெய்களில் வைட்டமின் கே உள்ளது, ஆனால் USDA பரிந்துரைக்கும் அளவுகளை அடைவதற்கு ஒப்பீட்டில் அவற்றை அதிக கலோரிகளில் உட்கொள்ள வேண்டியிருக்கும்.[13]

பசுங்கணிகங்களிலுள்ள தைலக்காய்டு மென்சவ்வுகளுடனான ஃபில்லோகுவினோனின் இறுக்கமான பிணைப்பே வைட்டமின் கே உயிரியல் ரீதியாக பச்சைத் தாவரங்களில் கிடைப்பது குறைவாக இருப்பதற்குக் காரணம் என நம்பப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு சமைத்த பசளிக் கீரையில் ஃபில்லோகுவினோனின் உயிரியல் ரீதியான கிடைக்கும் தன்மையின் அளவில் 4 சதவீதம் உள்ளது. இருப்பினும் பசளிக் கீரையில் வெண்ணெய் சேர்க்கும்போது உயிரியல் ரீதியான கிடைக்கும் தன்மையின் அளவு 13 சதவீதம் அதிகரிக்கிறது. வைட்டமின் கே கொழுப்பில் கரையும் திறனின் அளவு அதிகரிப்பதே அதற்குக் காரணமாகும்.[14]

மெனாகுவினோன்-4 மற்றும் மெனாகுவினோன்-7 (வைட்டமின் கே2) இறைச்சி, முட்டை, பால்பொருள்கள் [15] மற்றும் நேட்டோ ஆகியவற்றில் காணப்படுகிறது [16]. MK-4 விலங்குத் திசுக்களிலிருந்து செயற்கை முறையில் தொகுப்பாக்கம் செய்யப்படுகிறது, மீத வகைகள் (பிரதானமாக MK-7) நொதித்தலின் போது பேக்டீரியா மூலம் தொகுப்பாக்கம் செய்யப்படுகின்றன. நேட்டோவில் MK-4 வைட்டமின் கே 0 சதவீதமும் பாலாடைக்கட்டியில் (சீஸ்) 2–7 சதவீதமும் உள்ளது.[17]

குடல்நாள பேக்டீரியா பயன்படக்கூடிய வைட்டமின் கே ஐ குறிப்பிடத்தக்க அளவு உற்பத்தி செய்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் குருதிப்போக்கு நோயில், குடல் நாளமானது பேக்டீரியாவுடன் சேராமல் உள்ளது. மேலும் அமெரிக்காவில் இந்நோயைத் தடுப்பதற்கு குழந்தைகளுக்கு வைட்டமின் கே ஊசிகள் போடப்படுகின்றன. இதேபோல் அதிக அளவு எதிர் உயிரி மருந்துகளை எடுத்துக்கொண்ட நபர்களுக்கு மனித உடல் நுண்ணுயிர்த் தொகுதிகளின் குறைவால் வைட்டமின் கே குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

குறைபாடு

[தொகு]

சராசரி உணவுகளில் வைட்டமின் கே குறைவாக இருப்பதில்லை, மேலும் பிரதானமான வைட்டமின் கே குறைபாடு உடல்நலமிக்க பெரியவர்களில் மிகவும் அரிதாகவே ஏற்படும். முன்னரே குறிப்பிட்டபடி, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு குறைபாடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும். மற்றபடி, நுரையீரல் சேதம் அல்லது நோய் உள்ளவர்கள் (எ.கா. குடிப்பழக்கம் உள்ளவர்கள்), நீர்மப்பை நார்ப்பெருக்கம், அழற்சி பெருங்குடல் நோய்கள் உள்ளவர்கள் அல்லது சமீபத்தில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் போன்றோருக்கு வைட்டமின் கே குறைபாடு அதிகமாக உள்ளது. கடும் உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து பெரும்பசி நோயுள்ளவர்கள் மற்றும் இரத்தம் உறைதல் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோரும் இரண்டாம் நிலை வைட்டமின் கே குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். சாலிசிலேட்டுகள், பார்பிட்டுரேட்டுகள் மற்றும் சிஃபாமெண்டோல் போன்ற பிற மருந்துகளும் வைட்டமின் கே குறைபாட்டுடன் தொடர்புடையவையாக உள்ளன, இருப்பினும் இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்னும் தெரியவில்லை. இதில் ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு இல்லை, இருபாலரும் சமமாகவே பாதிக்கப்படுகின்றனர். பெண்களில் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு, இரத்த சோகை, சிராய்ப்புண் மற்றும் ஈறுகளில் அல்லது மூக்கில் இரத்தம் வருதல் போன்றவை இந்த வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகளில் அடங்கும்.[17]

எலும்புப்புரை[18][19] மற்றும் இதயச் சுவர்ச்சிரை நோய்[20][21] ஆகியவற்றுக்கும் வைட்டமின் கே2 (மெனாகுவினோன்) அளவு குறைவுக்கும் அதிக தொடர்புள்ளது. K1 ஐப் போல, சாலிசிலேட்டுகள் மெனாகுவினோனை தடுப்பதில்லை, ஆகவே மெனாகுவினோன் கூடுதலாக வழங்குவதால் நீண்ட நாள் அஸ்பிரின் பயன்படுத்தியதால் உண்டான நாள்பட்ட வைட்டமின் கே குறைபாட்டைத் தீர்க்க முடியும்.[சான்று தேவை]

உயிர்வேதியியல்

[தொகு]

கண்டுபிடிப்பு

[தொகு]

1929 ஆம் ஆண்டில் டானிஷு அறிவியலாளர் ஹென்றிக் டேம் (Henrik Dam), கொழுப்பு கலந்த உணவை கோழிக்குஞ்சுகளுக்குக் கொடுத்து கொழுப்பின் பங்கைப் பற்றி ஆய்வு செய்தார்.[22] சில வாரங்களுக்குப் பிறகு அவற்றுக்கு இரத்தப்போக்கு நோய் உண்டாகி இரத்தம் கசியத் தொடங்கியது. உணவில் சுத்திகரிக்கப்பட்ட கொழுப்பைச் சேர்த்து வழங்கிய பின்னும் இந்தக் குறைபாடுகளைத் தீர்க்க முடியவில்லை. இதிலிருந்து, உணவிலிருந்து கொழுப்புடன் சேர்ந்து மற்றொரு சேர்மமும் உட்கிரகிக்கப்படுவது எனத் தெரிந்தது. இந்தச் சேர்மம் இரத்தம் உறைதல் வைட்டமின் என அழைக்கப்பட்டது. இந்தப் புதிய வைட்டமினின் கண்டுபிடிப்பு பற்றி முதலில் ஒரு ஜெர்மன் இதழில் வெளிவந்தது, அதில் அது பற்றிய கட்டுரையின் தலைப்பு காகுலேஷன்ஸ்வைட்டமின் (Koagulationsvitamin) என வழங்கப்பட்டிருந்ததாலேயே அதற்கு K என்னும் எழுத்து வழங்கப்பட்டது. செயிண்ட் லூயிஸ் யுனிவெர்சிட்டி (Saint Louis University) ஐச் சேர்ந்த எட்வர்ட் அடெல்பெர்ட் டாய்சி (Edward Adelbert Doisy) பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார், அவற்றின் விளைவாக வைட்டமின் கேவின் கட்டமைப்பும் வேதிப் பண்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன.[23] டேம் (Dam) மற்றும் டோசி (Doisy) ஆகிய இருவருக்கும் வைட்டமின் கே தொடர்பான அவர்களது பணிக்காக 1943 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டு அச்சேர்மத்தை பல ஆய்வகங்கள் செயற்கை முறையில் தயாரித்தன.[24]

வைட்டமின் கே-குறைபாடுள்ள மாதிரி கோழிக்குஞ்சைப் பல ஆண்டுகள் பயன்படுத்துவதே பல்வேறு உணவுப் பொருள்களிலுள்ள வைட்டமின் கே அளவைக் கண்டறிவதற்கான ஒரே முறையாகும்: இதில் கோழிக்குஞ்சுகளில் வைட்டமின் கே-குறைபாடு உருவாக்கப்படுகிறது, பின்னர் தெரிந்த அளவு வைட்டமின் கே-உள்ள உணவு வழங்கப்படுகிறது. உணவினால் இரத்தம் எந்த அளவுக்கு உறைதல் மீட்கப்படுகிறதோ அதுவே அந்த உணவிலுள்ள வைட்டமின் கே அளவாகக் கருதப்படுகிறது. மூன்று மருத்துவர்கள் குழுக்கள் தனிப்பட்ட முறையில் இதைக் கண்டுபிடித்தன, அவை: பயோகெமிக்கல் இன்ஸ்டிடியூட் (Biochemical Institute), யுனிவெர்சிட்டி ஆஃப் கௌப்பன்ஹேய்கன் (University of Copenhagen) (டேம் மற்றும் ஜோஹன்னாஸ் க்ளேவிண்ட் (Johannes Glavind)), யுனிவெர்சிட்டி ஆஃப் லோவா (University of Iowa) நோய்க்குறியியல் துறை (எமோரி வார்னர் (Emory Warner), கென்னித் ப்ரிங்க்ஹௌஸ் (Kenneth Brinkhous), மற்றும் ஹேரி ப்ராட் ஸ்மித் (Harry Pratt Smith)) மற்றும் மாயோ க்ளினிக் (Mayo Clinic) (ஹக் பட் (Hugh Butt), ஆல்பர்ட் ஸ்னெல் (Albert Snell) மற்றும் அர்னால்ட் ஆஸ்டர்பெர்க் (Arnold Osterberg)).[25] புரோத்ராம்பின் குறைபாடுள்ள மஞ்சள் காமாலை நோயாளிக்கு இருந்த, உயிருக்கு ஆபத்தான இரத்தப்போக்கு நோய்க்கு வைட்டமின் கே பயன்படுத்தி சிகிச்சை வழங்கியதில் வெற்றிபெற்றது பற்றி முதல் அறிக்கை 1938 ஆம் ஆண்டு ஸ்மித் (Smith), வார்னர் (Warner) மற்றும் ப்ரிங்க்ஹௌஸ் (Brinkhous) ஆகியோரால் வெளியிடப்பட்டது.[26]

செல்லில் இதன் செயல்பாடு

[தொகு]

1974 ஆம் ஆண்டில் (ஸ்டென்ஃப்ளோ (Stenflo) மற்றும் சிலர் [27], நெல்செஸ்டியுன் (Nelsestuen) மற்றும் சிலர் [28] மற்றும் மங்குஸான் (Magnusson) மற்றும் சிலர் [29]), அதிக அளவு வைட்டமின் கே எதிர்ப்பொருளான வார்ஃபரின் கொடுக்கப்பட்ட பசுக்களிலிருந்து வைட்டமின் கே ஐச் சார்ந்த இரத்தம் உறைதல் காரணியான புரோதிராம்பினைத் (காரணி II) தனிப்படுத்தும் வரை வைட்டமின் கேவின் துல்லியமான செயல்பாடு கண்டறியப்படவில்லை. வார்ப்ஃரின் வழங்கப்பட்ட பசுக்கள், இந்த புரதத்திற்கருகில் அமினோ முனைக்கு அருகில் 10 குளுக்காமேட் அமில எச்சங்களைக் கொண்ட ஒரு வகை புரோதிராம்பினைக் கொண்டிருந்த வேளையில் சாதாரண (வார்ஃபரின் வழங்கப்படாத) பசுக்கள் 10 வழக்கத்திற்கு மாறான எச்சங்களைக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவை வேதியியல் முறைப்படி காமா-கார்பாக்சிகுளூட்டாமேட் அல்லது க்ளா எனப்படுகின்றன. க்ளூ க்ளாவாக மாறும் கார்பாக்சிலேற்ற வினையில் வைட்டமின் கே முக்கியப்பங்கு வகிக்கிறது என்பதை க்ளாவில் உள்ள கூடுதல் கார்பாக்சில் தொகுதி காட்டுகிறது.

க்ளூவை க்ளாவாக மாற்றுவதற்கு வைட்டமின் கே எவ்வாறு பயன்படுகிறது என்பதன் உயிர்வேதியியல், உலகின் கல்விக்கூட ஆய்வகங்கள் அனைத்திலும் கடந்த முப்பதாண்டுகளாகவே தெளிவாக்கப்பட்டு வருகிறது. செல்லில், வைட்டமின் கே, வைட்டமின் கே எப்போக்சைட் ரிடக்ட்டேஸ் (அல்லது VKOR) என்னும் நொதியால் எலக்ட்ரான் குறைப்புக்குள்ளாகி வைட்டமின் கேவின் குறைக்கப்பட்ட வடிவத்திற்கு (வைட்டமின் கே ஹைட்ரோகுவினோன் எனப்படுகிறது) மாறுகிறது.[30] பின்னர் மற்றொரு நொதி வைட்டமின் கே ஹைட்ரோகுவினோனை ஆக்சிஜனேற்றம் செய்து க்ளூ கார்பாக்சிலேற்றமடைந்து க்ளாவாக மாற உதவுகிறது: இந்த நொதி காமா-க்ளூட்டமைல் கார்பாக்சிலேஸ்[31][32] அல்லது வைட்டமின் கே-சார்ந்த கார்பாக்சிலேஸ் என அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் கார்பாக்சிலேற்ற வினையானது கார்பாக்சிலேஸ் நொதி வைட்டமின் கே ஹைட்ரோகுவினோனை வைட்டமின் கே எப்பாக்சைடாக மாற்றும் திறன் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியம்; கார்பாக்சிலேற்றம் மற்றும் எப்பாக்சிஜனேற்றம் ஆகிய வினைகள் இரட்டை வினைகள் என அழைக்கப்படுகின்றன. வைட்டமின் கே எப்பாக்சைடு பின்னர் வைட்டமின் கே எப்பாக்சைடு ரிடக்ட்டேஸ் நொதியால் மீண்டும் வைட்டமின் கே-ஆக மாற்றப்படுகிறது. இந்த இரண்டு நொதிகளும் சேர்ந்தே வைட்டமின் கே சுழற்சியை உருவாக்குகின்றன.[33] மனிதர்களில் வைட்டமின் கே குறைபாடு ஏற்படுவதென்பது அரிதான நிகழ்வாக இருப்பதற்கான காரணங்களில் நமது செல்களில் வைட்டமின் கே தொடர்ந்து மறுசுழற்சி செய்யப்படுவதும் ஒன்றாகும்.

வார்ஃபரின் மற்றும் பிற கௌமரின் மருந்துகள் வைட்டமின் கே எப்பாக்சைடு ரிடக்ட்டேசின் செயலைத் தடுக்கின்றன.[34] இதன் விளைவாக திசுக்களில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் கே ஹைட்ரோகுவினோன் ஆகியவற்றின் அளவுகள் குறைகின்றன, இதனால் கார்பாக்சிஜனேற்ற வினைக்கு க்ளூட்டமைல் கார்பாக்சிலேஸ் வினையூக்கியாக இருப்பது செயல்திறனற்றதாகிறது. இதன் விளைவாக போதிய க்ளா இன்றி இரத்தம் உறைதல் காரணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தக் காரணிகளின் அமினோ முனைகளில் க்ளா இன்றி அவை இரத்த நாள எண்டோதிலியத்தில் தொடர்ந்து பிணைந்திருக்கமாட்டா. மேலும் திசு சேதமடையும் போது இரத்தம் உறையும் செயலிலும் அவை ஈடுபட முடியாது. விரும்பும் உறைதல் ஒடுக்க அளவுக்கு எந்த அளவு வார்ஃபரின் தேவைப்படும் என்பதை கணிப்பது முடியாது என்பதால், அதீத அளவு பாதிப்புகளைத் தவிர்க்கும்பொருட்டு வ்வார்ஃபரின் சிக்கிச்சையின்போது அதிக கண்காணிப்பு அவசியமாகும். (வார்ஃபரின் கட்டுரையைக் காண்க.)

மதிப்பீடு முறைகள்

[தொகு]

புரோத்ராம்பின் நேர சோதனை:

இரத்தம் உறைவதற்குத் தேவையான நேரத்தை அளவிடுகிறது
இரத்த மாதிரி சிட்ரிக் அமிலத்துடன் கலக்கப்பட்டு ஃபைப்ரோமீட்டரில் வைக்கப்படுகிறது.
மெதுவாக உறைதல் ஏற்பட்டால் குறைபாடு உள்ளது எனப் பொருள்.

துரதிருஷ்டவசமாக, இரத்திலுள்ள புரோத்ராம்பினின் செறிவு குறைந்தபட்சம் 50 சதவீதமாவது மாறாத வரை இது மாறுவதில்லை என்பதால் இது சிறிதளவான குறைபாட்டை உணராத் தன்மை கொண்ட முறையாக உள்ளது [35]

ப்ளாஸ்மா ஃபிலோகுவினோன்:

இது வயதான பிரித்தானிய பெண்களின் ஃபில்லோகுவினோனின் உட்கொள்ளல் அளவுடன் நேர்மறைத் தொடர்பு கொண்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் ஆண்களுக்கு இது பொருந்தவில்லை [36]

இருப்பினும், ஸ்கர்ஜஸ் (Schurges) மற்றும் சிலரது கட்டுரை ஒன்றில், FFQ மற்றும் பிளாஸ்மா ஃபில்லோகுவினோன் ஆகிய இரண்டிற்கும் எதுவும் தொடர்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது [37]

சிறுநீர் γ-கார்பாக்சிகுளூட்டாமேட்டிக் அமிலம்:

உணவின் மூலம் கிடைக்கப்பெறும் வைட்டமின் கே அளவுக்கு ஏற்ப சிறுநீர் க்ளா பதில்வினை புரிகிறது.
ஏதேனும் மாற்றத்தைக் கவனித்தறிய சில நாட்கள் தேவைப்படுகின்றன.

பூத் (Booth) மற்றும் சிலர் மேற்கொண்ட ஓர் ஆய்வில் ஃபில்லோகுவினோனின் உட்கொள்ளல் அளவு ஐந்து நாட்களில் 100 μg முதல் 377–417 μg என்ற அளவுக்கு அதிகரிப்பதால் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை இதற்கான பதில்வினைகள் வயதைச் சார்ந்தவையாக இருக்கலாம் [38]

க்ளா-புரதங்கள்

[தொகு]

தற்போது பின்வரும் மனித க்ளா புரதங்கள் அவற்றின் முதல் நிலை கட்டமைப்பு வரையிலான பண்புகள் கண்டறிந்து விளக்கப்பட்டுள்ளன: இரத்தம் உறைதல் காரணிகள் II (புரோத்ராம்பின்), VII, IX மற்றும் X, உறைதல் எதிர்ப்பு புரதங்கள் C மற்றும் S மற்றும் X காரணி-இலக்கு புரதம் Z. எலும்பு க்ளா-புரதம் ஆஸ்டியோகாலிசின், கால்சியமேற்றத் தடுப்பு மேட்ரிக்ஸ் க்ளா புரதம் (MGP), செல் வளர்ச்சி ஒழுங்குப்படுத்தல் கட்டுப்பாட்டுக்கான மரபணு 6 புரதம் (Gas6) மற்றும் மென்சவ்வுக்கப்பாற்பட்ட க்ளா புரதங்கள் (TMGPகள்) செயல்பாடு ஆகியவை. இதில் TMGPகளின் செயல்பாடு இன்னும் தெரியவில்லை. Gas6, ஒரு வளர்ச்சிக் காரணியாக செயல்படும். அது Axl ஏற்பியான டைரோசின் கைனேசை செயல்படுத்தி செல் வளர்ச்சியைத் தூண்டுகிறது அல்லது சில செல்களில் செல் இறப்பைத் தடுக்கிறது. அவற்றின் செயல்பாடு அறிந்ததாக உள்ள எல்லா நிகழ்வுகளிலும் இந்த புரதங்களில் க்ளா-எச்சங்கள் இருப்பது செயல்பாட்டுக்கு மிக இன்றியமையாததாக உள்ளது.

க்ளா-புரதங்கள் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன மற்றும் மீன்கள் உள்ளிட்ட பரந்துபட்ட பல்வேறு வகை முதுகெலும்பிகளிலும் உள்ளன. பல ஆஸ்திரேலிய பாம்புகளின் நஞ்சானது மனித இரத்தம் உறைதல் அமைப்பைப் பாதிப்பதன் மூலமாகவே செயல்படுகிறது. குறிப்பிடும்படியாக, சில நிகழ்வுகளில் இந்த செயல்பாடு மனித இரத்த நாளங்களின் எண்டோதிலியத்துடன் பிணைந்து இரத்த உறைதலுக்கு முந்தைய காரணிகளின் மாற்ற வினையை வேகப்படுத்துகிறது. இது பாம்பின் க்ளாவால் செய்யப்படுகிறது. அதில் சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்தும் சாத்தியமுள்ள தேவையற்ற உறைதலை ஏற்படுத்தக்கூடிய நொதிகள் உள்ளன.

முதுகெலும்பற்றவைகளின் க்ளா உள்ள புரதங்களைக் கொண்டுள்ள மற்றொரு சுவாரஸ்யமான வகை, மீன் வேட்டையாடும் நத்தையான கோனஸ் ஜியோக்ராஃபஸிலிருந்து செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது.[39] இந்த நத்தைகள் ஒரு நஞ்சை உற்பத்தி செய்கின்றன அதில் நூற்றுக் கணக்கான நரம்பு-செயலூக்க பெப்ட்டைடுகள் அல்லது ஒரு மனிதனைக் கொல்லப் போதுமான அளவு நச்சுத்தன்மை கொண்ட கொனொடாக்சின்கள் ஆகியவை உள்ளன. கொனொடாக்சின்கள் பல வகை 2–5 க்ளா எச்சங்களைக் கொண்டுள்ளன.[40]

பேக்டீரியாவில் இவற்றின் செயல்பாடு

[தொகு]

பெருங்குடலில் காணப்படும் எசோரியா கொலை போன்ற பல பேக்டீரியாக்களால் வைட்டமின் கே2 (மெனாகுவினோன்) ஐ உற்பத்தி செய்ய முடியும்,[41] ஆனால் அவற்றால் வைட்டமின் கே1 (ஃபில்லோகுவினோன்) ஐ உற்பத்தி செய்ய முடியாது. இந்த பேக்டீரியாக்களில், மெனாகுவினோன் இரு வெவ்வேறு சிறு மூலக்கூறுகளிடையே இரண்டு எலக்ட்ரான்களை பரிமாறிக்கொள்கிறது, அந்த செயல்பாடு காற்றில்லா சுவாசம் என அழைக்கப்படுகிறது.[42] எடுத்துக்காட்டுக்கு, லாக்டேட், ஃபார்மேட் போன்ற அதிக எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள ஒரு சிறிய மூலக்கூறு (எலக்ட்ரான் வழங்கி எனவும் அழைக்கப்படும்) அல்லது NADH ஆக்கியவை ஒரு நொதியைப் பயன்படுத்தி மெனாகுவினோனுக்கு இரு எலக்ட்ரான்களை வழங்குகிறது. மெனாகுவினோன் மற்றொரு நொதியின் உதவியுடன் மீண்டும் 2 எலக்ட்ரான்களை ஃபியூமரேட் அல்லது நைட்ரேட் போன்ற பொருத்தமான ஆக்சிஜனேற்றிக்கு வழங்குகிறது (இவை எலக்ட்ரான் ஏற்பிகள் எனவும் அழைக்கப்படுகின்றன). ஃபியூமரேட் அல்லது நைட்ரேட்டுக்கு இரு எலக்ட்ரான்களை வழங்குவதால் மூலக்கூறு முறையாக சக்சினேட் அல்லது நைட்ரைட் + நீர் என மாறுகிறது. இந்த வினைகளில் சில, ATP எனும் ஒரு செல் ஆற்றல் மூலத்தை உருவாக்குகின்றன. இது எகார்யோட்டிக் செல் காற்று சுவாசத்தைப் போன்றதேயாகும், ஆனால் இறுதி எலக்ட்ரான் ஏற்பி மூலக்கூறு ஆக்சிஜனாக இருப்பதில்லை என்பது மட்டுமே வேறுபாடாகும், ஆனால் ஃபியூமரேட் அல்லது நைட்ரேட் (காற்று சுவாசத்தில் இறுதி ஆக்சிஜனேற்றி மூலக்கூறு ஆக்சிஜன் (O2) ஆகும், அது NADH போன்ற எலக்ட்ரான் வழங்கிகளிடமிருந்து நான்கு எலக்ட்ரான்களைப் பெற்று நீரை உருவாக்குகின்றது.) எசோரியா கொலை காற்று சுவாசத்தையும் மெனாகுவினோன்-இடைசெயல் புரியும் காற்றில்லா சுவாசத்தையும் மேற்கொள்ளக்கூடியதாகும்.

பிறந்த குழந்தைகளுக்கு வைட்டமின் கே ஊசி

[தொகு]

பிறந்த குழந்தைகளின் இரத்தம் உறைதல் காரணிகள் பெரியவர்களுக்குள்ளதில் சுமார் 30 முதல் 60 சதவீதம் வரை இருக்கும். முன் வகை புரதங்களின் உற்பத்தி குறைவும் குடல் தூய்மையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மனித பாலில் 1 முதல் 4 மைக்ரோகிராம்/லிட்டர் வைட்டமின் கே1 உள்ளது, சூத்திரப்படி உருவாக்கப்பட்ட பாலில் 100 மைக்ரோகிராம்/லிட்டர் உள்ளது. மனித பாலில் வைட்டமின் கே2 செறிவுகள், வைட்டமின் கே1 செறிவுகளை விடக் குறைவாக உள்ளதாகத் தெரிகிறது. பிறக்கும் 1,00,000 குழந்தைகளில் 2-10 குழந்தைகள் என்ற கணக்கில், பிறந்து ஒரு வாரமான குழந்தைகளில் 0.25 முதல் 1.7 சதவீதம் வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் கே குறைபாட்டினால் ஏற்படும் இரத்தப்போக்கு ஏற்படுகிறது.[43] குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இன்னும் குறைந்த அளவைக் கொண்டிருப்பதால் இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அதிகம் உள்ளது.

அமெரி்க்கா

[தொகு]

வைட்டமின் கே குறைபாடு இரத்தப்போக்கு ஏற்படுவதன் விளைவாக, அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவர்களின் சங்கத்தின் உணவுப்பழக்க கமிட்டி, பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் உடனடியாக 0.5 முதல் 1.0 மி.கி. வரையிலான வைட்டமின் கே1 வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.[44]

இங்கிலாந்து

[தொகு]

இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாகவும் குழந்தையின் முதல் மாதத்திலும் ஒரே ஊசி மூலமாகவோ அல்லது மூன்று அளவுகளாக கொடுக்கப்படும் வாய்வழி செலுத்தும் மருந்தாகவோ வைட்டமின் கே வழங்கப்படுகிறது.

சர்ச்சை

[தொகு]

அல்லூண்வழி வைட்டமின் கே வழங்கலுக்கும் குழந்தைப்பருவத்தில் ஏற்படும் புற்றுநோய்க்கும் (14) உள்ள தொடர்பை இரு ஆய்வுகள் விளக்கிக்காட்டிய போது 1990களின் தொடக்கத்தில் இந்த மருத்துவ முறை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இருப்பினும், தரம் குறைந்த முறைகள் மற்றும் சிறு மாதிரி அளவுகள் ஆகியவற்றால் இந்த ஆய்வுகளின் நம்பகத்தன்மை குறைந்தது. மேலும் 2000 ஆம் ஆண்டில் ராஸ் (Ross) மற்றும் டேவிஸ் (Davies) ஆகியோர் வெளியிட்ட நிரூபணத்தின் மதிப்பீட்டில் இவையிரண்டுக்கும் தொடர்பு எதுவும் இல்லை எனக் காண்பிக்கப்பட்டது.[45]

வைட்டமின் கே மற்றும் எலும்பு உடல்நலம்

[தொகு]

சமீபத்தில் எலும்பின் நிறையை அதிகரிப்பதில் வைட்டமின் கே முக்கியப் பங்கு வகிப்பதாக போற்றப்படுகிறது. கூடுதலாக வழங்கப்படும் வைட்டமின் கே, கால்சியம் பிணைப்பாக்கத்தின் மூலம் ஆஸ்டியோட்ராபிக் செயல்களை ஊக்கப்படுத்தி ஆஸ்டியோக்ளாஸ்ட்டிக் செயல்களை மெதுவாக்குகிறது. ஜப்பானில், ஒரு வகை வைட்டமின் கே2 எலும்புப்புரைக்கான சிகிச்சையாகக் கருதப்படுகிறது.[46][47] இருப்பினும், நீண்ட காலத்திய விளைவுகளும் நன்மைகளும் தெரியவில்லை, அவை இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன.[சான்று தேவை] 1998 ஆம் ஆண்டின் நர்சஸ் ஹெல்த் ஸ்டடி ஆய்வின் தரவுகளிலிருந்து உணவில் எடுத்துக்கொள்ளப்படும் வைட்டமின் கே1 மற்றும் இடுப்பெலும்பு முறிவுக்கும் இடையே எதிர்மறைத் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தது. 110 மைக்ரோகிராம்/நாள் என்ற அளவில் வைட்டமின் கே கொடுக்கப்பட்ட பெண்களில் நாளொன்றுக்கு ஒன்று அல்லது அதிக முறை கீரை உட்கொண்டவர்களுக்கு, வாரத்திற்கு ஒன்று அல்லது சில முறை கீரை உட்கொண்ட பெண்களுக்கு இருந்ததை விட இடுப்பு எலும்பு முறிவுக்கான வாய்ப்பு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனுடன் கூடுதலாக வைட்டமின் D அதிகமாக உட்கொண்டு வைட்டமின் கே குறைவாக உட்கொண்டால் இடுப்பு எலும்பு முறிவு ஆபத்து அதிகரிப்பதிலிருந்து இவ்விரண்டு வைட்டமின்களுக்கும் இடையே உள்ள தொடர்பு புலப்படுகிறது.[47]

வைட்டமின் கே-எதிர்மருந்துகள் எலிகளிலும் பிற விலங்குகளிலும் நீள எலும்பு முனை மற்றும் நீள எலும்பு முனை சார்ந்த பகுதிகளிலான கால்சியமேற்றத்தைத் துரிதப்படுத்தி எலும்பு வளர்ச்சி தீவிரமாகக் குறைந்தது என பிற ஆய்வுகள் காண்பித்தன. ஆஸ்டியோகால்சின் மற்றும் மேட்ரிக்ஸ் க்ளா புரதம் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். எலும்பு மற்றும் எலும்பு சவ்வுகளின் அதீத கால்சியமேற்றத்தைத் தடுப்பதே அவற்றின் பிரதான செயல்பாடாகும். இந்த புரதங்களிலுள்ள குளூட்டமிக் அமிலத்தை (Glu) கார்பாக்சிலேற்றம் செய்து அவற்றின் செயல்பாட்டுக்கு அவசியமான காமா-கார்பாக்சிகுளூட்டாமிக் அமிலமாக (Gla) மாற்றும் செயல்பாட்டுக்கு வைட்டமின் கே முக்கியமானதாகும்.[48]

வைட்டமின் கே மற்றும் அல்சைமர் நோய்

[தொகு]

வைட்டமின் கேவின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகளைப் பற்றிய ஆராய்ச்சியிலிருந்து வைட்டமின் கேவின் செறிவானது APOE4 மரபணுவின் கேரியர்களின் சுற்றுகளில் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது, மேலும் சமீபத்திய ஆய்வுகள், இது ஆக்சிஜனேற்ற தகைவின் காரணமாக நரம்பு செல் இறப்பைத் தடுக்கும் திறன் கொண்டுள்ளது எனவும் கண்டறிந்துள்ளன. வைட்டமின் கே நரம்பு தொடர்பான சேதங்களைக் குறைக்கும் மற்றும் அல்சைமர் நோயின் சிகிச்சையில் இதன் கூடுதல் உட்கொள்ளல் சில நன்மைகளை வழங்கும் என்ற கருத்து உள்ளது, இருப்பினும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் அதிக அளவில் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.[49]

மேற்பூச்சாகப் பயன்படும் வைட்டமின் கே

[தொகு]

வைட்டமின் கே மேற்பூச்சாகவும் பயன்படும், வழக்கமாக 5% களிம்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இரத்த நுண் கிளைக்குழாய் உடைப்பு (ஸ்பைடர் வெயின்கள்) ஆகியவற்றின் காரணமாக அழகியல் அறுவை சிகிச்சை மற்றும் ஊசிகளினால் ஏற்படும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிராய்ப்புண்ணை மழுங்கடிக்கவும் ரொசாசியா நோய்க்கான சிகிச்சையிலும் அதீத நிறமியாக்கம் மற்றும் கண் கருவளையம் ஆகியவற்றுக்கான சிகிச்சையிலும் பயன்படுகிறது.

வைட்டமின் கே மற்றும் புற்று நோய்

[தொகு]

ஜப்பானிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், நுரையீரல் நோய் உள்ள பெண்களில் எலும்பு இழப்பைத் தடுப்பதில் வைட்டமின் கே2 இன் பங்கைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த போது இந்த ஃபைட்டோநியூண்ட்ரியண்ட்டின் சாத்தியக்கூறுள்ள மற்றொரு விளைவைக் கண்டறிந்தனர். இந்த இரண்டு ஆண்டு ஆய்வில் வைரஸ் கல்லீரல் இழைநார் வளர்ச்சி உள்ள 21 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதில் கூடுதலாக வழங்கப்பட்ட பெண்களின் குழுவிலிருந்தவர்களில் 90 சதவீதம் பேருக்கு கல்லீரல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.[50][51] ஒரு ஜெர்மனிய ஆய்வு சுக்கிலவகப் புற்று நோய் கொண்ட ஆண்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. அதில் வைட்டமின் கே2 உட்கொள்ளலுக்கும் வளர்ந்த சுக்கிலவகப் புற்று நோய்க்கும் இடையேயான எதிர்மறைத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.[52]

குமாரின்கள் நஞ்சுக்கான மாற்று மருந்தாக வைட்டமின் கே

[தொகு]

புரோமோடயலோன் போன்ற குமாரின்களினால் ஏற்பட்ட நஞ்சுக்கு வைட்டமின் கே ஒரு மெய்யான மாற்று மருந்தாக உள்ளது. அவை எலிக்கொல்லிகளில் காணப்படுபவையாகும். குமாரின்கள் இரத்த உறைதல் எதிர்ப்பு மற்றும் எலிக்கொல்லிப் பண்புகளைக் கொண்டுள்ளன. ஏனெனில் அவை கல்லீரலில் வைட்டமின் கே உற்பத்தியை முழுமையாக தடுக்கிறது, குறிப்பாக எலிகளில். வழக்கமாக அக இரத்தப்போக்கின் விளைவாக மரணம் ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சையில் வழக்கமாக நாளத்திற்குள் செலுத்தும் வைட்டமின் கே அளவுகளைக் கொண்ட ஊசிகள் மீண்டும் மீண்டும் போட்டு, அதைத் தொடர்ந்து மாத்திரை வடிவில் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு வழங்கி, முடிந்தால் அடுத்த இரண்டு மாதங்கள் வரையும் வழங்கப்படுகிறது. அதிக அளவு இருப்பதாகத் தெரியவந்தாலும் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால் முன்கணிப்பது நல்லது.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. Dam, Henrik (1935). "The antihaemorrhagic vitamin of the chick". The Biochemical journal 29 (6): 1273–85. பப்மெட்:16745789. பப்மெட் சென்ட்ரல்:1266625. http://www.biochemj.org/bj/029/1273/0291273.pdf. 
  2. Bowen, R. "Large Intestine". Colostate இம் மூலத்தில் இருந்து 2011-11-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111117014129/http://www.vivo.colostate.edu/hbooks/pathphys/misc_topics/vitamink.html. பார்த்த நாள்: 2009-06-01. [self-published source?]
  3. "Vitamin K". பார்க்கப்பட்ட நாள் 2009-05-26.
  4. McGee, W (2007-02-01). "Vitamin K". MedlinePlus. பார்க்கப்பட்ட நாள் 2009-04-02.
  5. Furie B, Bouchard BA, Furie BC (15 March 1999). "Vitamin K-dependent biosynthesis of gamma-carboxyglutamic acid". Blood 93 (6): 1798–808. பப்மெட்:10068650. http://bloodjournal.hematologylibrary.org/cgi/content/full/93/6/1798. 
  6. Mann KG (1999). "Biochemistry and physiology of blood coagulation". Thromb. Haemost. 82 (2): 165–74. பப்மெட்:10605701. http://www.schattauer.de/index.php?id=1268&pii=th99080165&no_cache=1. பார்த்த நாள்: 2010-05-12. 
  7. Price PA (1988). "Role of vitamin-K-dependent proteins in bone metabolism". Annu. Rev. Nutr. 8: 565–83. doi:10.1146/annurev.nu.08.070188.003025. பப்மெட்:3060178. https://archive.org/details/sim_annual-review-of-nutrition_1988_8/page/565. 
  8. Berkner KL, Runge KW (2004). "The physiology of vitamin K nutriture and vitamin K-dependent protein function in atherosclerosis". J. Thromb. Haemost. 2 (12): 2118–32. doi:10.1111/j.1538-7836.2004.00968.x. பப்மெட்:15613016. http://doi.org/10.1111/j.1538-7836.2004.00968.x. 
  9. Higdon (February 2008). "Vitamin K". Linus Pauling Institute, Oregon State University. பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
  10. Ansell J, Hirsh J, Poller L, Bussey H, Jacobson A, Hylek E (2004). "The pharmacology and management of the vitamin K antagonists: the Seventh ACCP Conference on Antithrombotic and Thrombolytic Therapy". Chest 126 (3 Suppl): 204S–233S. doi:10.1378/chest.126.3_suppl.204S. பப்மெட்:15383473. http://www.chestjournal.org/cgi/content/full/126/3_suppl/204S. பார்த்த நாள்: 2010-05-12.  (சுருக்கம் பரணிடப்பட்டது 2008-10-11 at the வந்தவழி இயந்திரம்)
  11. Crowther MA, Douketis JD, Schnurr T, et al. (2002). "Oral vitamin K lowers the international normalized ratio more rapidly than subcutaneous vitamin K in the treatment of warfarin-associated coagulopathy. A randomized, controlled trial" (PDF). Ann. Intern. Med. 137 (4): 251–4. பப்மெட்:12186515. http://www.annals.org/cgi/reprint/137/4/251. 
  12. பச்சை வோக்கோசுக்கான ஊட்டச்சத்து உண்மைகளும் தகவல்களும்
  13. ஊட்டச்சத்து உண்மைகள், உணவிலுள்ள கலோரிகள், லேபிள்கள், ஊட்டச்சத்து தகவல்கள் மற்றும் பகுப்பாய்வுகள் – NutritionData.com
  14. "NutritionData.com". Archived from the original on 2011-11-17. பார்க்கப்பட்ட நாள் 2010-05-12.
  15. Elder SJ, Haytowitz DB, Howe J, Peterson JW, Booth SL (January 2006). "Vitamin k contents of meat, dairy, and fast food in the u.s. Diet". J. Agric. Food Chem. 54 (2): 463–7. doi:10.1021/jf052400h. பப்மெட்:16417305. 
  16. Tsukamoto Y, Ichise H, Kakuda H, Yamaguchi M (2000). "Intake of fermented soybean (natto) increases circulating vitamin K2 (menaquinone-7) and gamma-carboxylated osteocalcin concentration in normal individuals". J. Bone Miner. Metab. 18 (4): 216–22. doi:10.1007/s007740070023. பப்மெட்:10874601. http://link.springer.de/link/service/journals/00774/bibs/0018004/00180216.htm. 
  17. 17.0 17.1 "On the Trail of the Elusive X-Factor: Vitamin K2 Revealed". Archived from the original on 2009-12-16.
  18. Ikeda; Iki, M; Morita, A; Kajita, E; Kagamimori, S; Kagawa, Y; Yoneshima, H (2006). "Intake of fermented soybeans, natto, is associated with reduced bone loss in postmenopausal women: Japanese Population-Based Osteoporosis (JPOS) Study.". The Journal of nutrition 136 (5): 1323–8. பப்மெட்:16614424. https://archive.org/details/sim_journal-of-nutrition_2006-05_136_5/page/1323. 
  19. Katsuyama; Ideguchi, S; Fukunaga, M; Saijoh, K; Sunami, S (2002). "Usual dietary intake of fermented soybeans (Natto) is associated with bone mineral density in premenopausal women.". Journal of nutritional science and vitaminology 48 (3): 207–15. பப்மெட்:12350079. 
  20. Sano; Fujita, H; Morita, I; Uematsu, H; Murota, S (1999). "Vitamin K2 (menatetrenone) induces iNOS in bovine vascular smooth muscle cells: no relationship between nitric oxide production and gamma-carboxylation.". Journal of nutritional science and vitaminology 45 (6): 711–23. பப்மெட்:10737225. 
  21. http://www.npicenter.com/anm/templates/newsATemp.aspx?articleid=23259
  22. Dam, H. (1935). "The Antihæmorrhagic Vitamin of the Chick.: Occurrence And Chemical Nature". Nature 135 (3417): 652–653. doi:10.1038/135652b0. 
  23. MacCorquodale, D. W.; Binkley, S. B.; Thayer, S. A.; Doisy, E. A. (1939). "On the constitution of Vitamin K1". Journal of the American Chemical Society 61: 1928–1929. doi:10.1021/ja01876a510. 
  24. Fieser, L. F. (1939). "Synthesis of Vitamin K1". Journal of the American Chemical Society 61: 3467–3475. doi:10.1021/ja01267a072. 
  25. டேம், ஹென்றிக் (டிசம்பர் 12, 1946) ஆகியவையாகும். வைட்டமின் கேவின் கண்டுபிடிப்பு, அதன் உயிரியல் ரீதியான செயல்பாடுகள் மற்றும் மருத்துவப் பயன். பரணிடப்பட்டது 2011-12-11 at the வந்தவழி இயந்திரம் நோபல் பரிசு உரை
  26. Warner, E. D.; Brinkhous, K. M.; Smith, H. P. (1938). Proceedings of the Society of Experimental Biology and Medicine 37: 628. 
  27. Stenflo J, Fernlund P, Egan W, Roepstorff P (July 1974). "Vitamin K dependent modifications of glutamic acid residues in prothrombin". Proc. Natl. Acad. Sci. U.S.A. 71 (7): 2730–3. doi:10.1073/pnas.71.7.2730. பப்மெட்:4528109. 
  28. Nelsestuen GL, Zytkovicz TH, Howard JB (October 1974). "The mode of action of vitamin K. Identification of gamma-carboxyglutamic acid as a component of prothrombin". J. Biol. Chem. 249 (19): 6347–50. பப்மெட்:4214105. http://www.jbc.org/cgi/pmidlookup?view=long&pmid=4214105. பார்த்த நாள்: 2010-05-12. 
  29. Magnusson S, Sottrup-Jensen L, Petersen TE, Morris HR, Dell A (August 1974). "Primary structure of the vitamin K-dependent part of prothrombin". FEBS Lett. 44 (2): 189–93. doi:10.1016/0014-5793(74)80723-4. பப்மெட்:4472513. 
  30. Oldenburg J, Bevans CG, Müller CR, Watzka M (2006). "Vitamin K epoxide reductase complex subunit 1 (VKORC1): the key protein of the vitamin K cycle". Antioxid. Redox Signal. 8 (3-4): 347–53. doi:10.1089/ars.2006.8.347. பப்மெட்:16677080. 
  31. Suttie JW (1985). "Vitamin K-dependent carboxylase". Annu. Rev. Biochem. 54: 459–77. doi:10.1146/annurev.bi.54.070185.002331. பப்மெட்:3896125. https://archive.org/details/sim_annual-review-of-biochemistry_1985_54_annual/page/459. 
  32. Presnell SR, Stafford DW (June 2002). "The vitamin K-dependent carboxylase". Thromb. Haemost. 87 (6): 937–46. பப்மெட்:12083499. 
  33. Stafford DW (August 2005). "The vitamin K cycle". J. Thromb. Haemost. 3 (8): 1873–8. doi:10.1111/j.1538-7836.2005.01419.x. பப்மெட்:16102054. 
  34. Whitlon DS, Sadowski JA, Suttie JW (April 1978). "Mechanism of coumarin action: significance of vitamin K epoxide reductase inhibition". Biochemistry 17 (8): 1371–7. doi:10.1021/bi00601a003. பப்மெட்:646989. 
  35. http://www.webmd.com/a-to-z-guides/prothrombin-time
  36. Thane CW, Bates CJ, Shearer MJ, et al (June 2002). "Plasma phylloquinone (vitamin K1) concentration and its relationship to intake in a national sample of British elderly people". Br. J. Nutr. 87 (6): 615–22. doi:10.1079/BJNBJN2002582. பப்மெட்:12067432. 
  37. McKeown NM, Jacques PF, Gundberg CM, et al (June 2002). "Dietary and nondietary determinants of vitamin K biochemical measures in men and women". J. Nutr. 132 (6): 1329–34. பப்மெட்:12042454. http://jn.nutrition.org/cgi/pmidlookup?view=long&pmid=12042454. 
  38. Yamano M, Yamanaka Y, Yasunaga K, Uchida K (September 1989). "Effect of vitamin K deficiency on urinary gamma-carboxyglutamic acid excretion in rats". Nippon Ketsueki Gakkai Zasshi 52 (6): 1078–86. பப்மெட்:2588957. 
  39. Terlau H, Olivera BM (January 2004). "Conus venoms: a rich source of novel ion channel-targeted peptides". Physiol. Rev. 84 (1): 41–68. doi:10.1152/physrev.00020.2003. பப்மெட்:14715910. https://archive.org/details/sim_physiological-reviews_2004-01_84_1/page/41. 
  40. Buczek O, Bulaj G, Olivera BM (December 2005). "Conotoxins and the posttranslational modification of secreted gene products". Cell. Mol. Life Sci. 62 (24): 3067–79. doi:10.1007/s00018-005-5283-0. பப்மெட்:16314929. https://archive.org/details/sim_cellular-and-molecular-life-sciences_2005-12_62_24/page/3067. 
  41. Bentley R, Meganathan R (September 1982). "Biosynthesis of vitamin K (menaquinone) in bacteria". Microbiol. Rev. 46 (3): 241–80. பப்மெட்:6127606. பப்மெட் சென்ட்ரல்:281544. http://mmbr.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=6127606. 
  42. Haddock BA, Jones CW (March 1977). "Bacterial respiration". Bacteriol Rev 41 (1): 47–99. பப்மெட்:140652. பப்மெட் சென்ட்ரல்:413996. http://mmbr.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=140652. 
  43. Shearer MJ (January 1995). "Vitamin K". Lancet 345 (8944): 229–34. doi:10.1016/S0140-6736(95)90227-9. பப்மெட்:7823718. 
  44. American Academy of Pediatrics Committee on Fetus and Newborn (July 2003). "Controversies concerning vitamin K and the newborn. American Academy of Pediatrics Committee on Fetus and Newborn". Pediatrics 112 (1 Pt 1): 191–2. பப்மெட்:12837888. http://pediatrics.aappublications.org/cgi/pmidlookup?view=long&pmid=12837888. 
  45. "ரொட்டின் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் விட்டமின் K டு நியூபார்ன்ஸ்", ஜர்னல் ஆஃப் பீடியேட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் (1997) 2(6):429–31
  46. Feskanich, Diane; Weber, P; Willett, W; Rockett, H; Booth, S; Colditz, G (1999). "Vitamin K intake and hip fractures in women: a prospective study". American Journal of Clinical Nutrition 69 (1): 74. பப்மெட்:9925126. http://www.ajcn.org/cgi/pmidlookup?view=long&pmid=9925126. 
  47. 47.0 47.1 Kanai, T (1997). "Serum vitamin K level and bone mineral density in post-menopausal women". International Journal of Gynecology & Obstetrics 56: 25. doi:10.1016/S0020-7292(96)02790-7. https://archive.org/details/sim_international-journal-of-gynecology-obstetrics_1997-01_56_1/page/25. 
  48. ட்ரெங்க்கன் டி (Drenckhahn, D) & கக்லர், பி (Kugler, P) (2003), "நோச்செங்வெப்". இன் பென்னிஹாஃப் & டி. ட்ரென்ஹான், அனாட்டமி பேண்ட் 1:147. முனிச், ஜெர்மனி: அர்பன் & ஃபிஷர்
  49. Allison (2001). "The possible role of vitamin K deficiency in the pathogenesis of Alzheimer's disease and in augmenting brain damage associated with cardiovascular disease.". Medical hypotheses 57 (2): 151–5. doi:10.1054/mehy.2001.1307. பப்மெட்:11461163. 
  50. "வைட்டமின் கே ஃபௌண்ட் டு ப்ரொட்டக்ட் அகெயின்ஸ்ட் லிவெர் கேன்சர்"
  51. Saxena SP, Israels ED, Israels LG (2001). "Novel vitamin K-dependent pathways regulating cell survival.". Apoptosis 6 (1-2): 57–68. doi:10.1023/A:1009624111275. பப்மெட்:11321042. 
  52. Nimptsch K, Rohrmann S, Linseisen J (April 2008). "Dietary intake of vitamin K and risk of prostate cancer in the Heidelberg cohort of the European Prospective Investigation into Cancer and Nutrition. (EPIC-Heidelberg)". Am. J. Clin. Nutr. 87 (4): 985–92. பப்மெட்:18400723. http://www.ajcn.org/cgi/pmidlookup?view=long&pmid=18400723. 

புற இணைப்புகள்

[தொகு]


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)


"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்ச்சத்து_கே&oldid=3924692" இலிருந்து மீள்விக்கப்பட்டது