நபருண் பட்டாச்சார்யா
நபருண் பட்டாச்சார்யா | |
---|---|
பிறப்பு | பெர்காம்பூர், West Bengal, India | 23 சூன் 1948
இறப்பு | 31 சூலை 2014 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 66)
தொழில் | எழுத்தாளர் |
மொழி | வங்காளம் |
கல்வி நிலையம் | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (1993) |
பெற்றோர் | |
குடும்பத்தினர் |
|
நபருண் பட்டாச்சார்யா (Nabarun Bhattacharya) (23 ஜூன் 1948-31 ஜூலை 2014) வங்காள மொழியில் எழுதிய ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். 1993இல் இவருக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர் மேற்கு வங்காளத்தின் பெர்காம்பூரில் நடிகரும் மற்றும் நாடக ஆசிரியருமான பிஜோன் பட்டாச்சார்யா மற்றும் எழுத்தாளரும் மற்றும் ஆர்வலருமான மகாசுவேதா தேவி ஆகியோரின் ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாய்வழி தாத்தா மணீஷ் கட்டக் எழுத்தாளர் ஆவார். இந்தியத் திரைப்பட இயக்குநர் இரித்விக் கட்டக் இவரது பெரிய மாமா ஆவார். பட்டாச்சார்யா கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதலில் புவியியலும், பின்னர் ஆங்கிலமும், படித்தார். நபருண் அரசியல் அறிவியல் பேராசிரியராக இருந்த பிரணதி பட்டாச்சார்யா என்பவரை மணந்தார்.[1]
விருது
[தொகு]இவரது புதினமான ஹெர்பர்ட் (1993) இவருக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுத் தந்தது. 2005 ஆம் ஆண்டில் சுமன் முகோபாத்யாய் என்ற இயக்குநர் அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்.[2] பட்டாச்சார்யா தொடர்ந்து பாஷாபந்தன் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலையின் கலாச்சார அமைப்பான கணசன்கிருதி பரிசத்தின் செயலாளராகவும் இருந்தார்.
இறப்பு
[தொகு]பட்டாச்சார்யா பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோயால் 31 ஜூலை 2014 அன்று கொல்கத்தாவின் தாகூர்புகூர் புற்றுநோய் மருத்துவமனையில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "End of journey for the eternal rebel: Nabarun Bhattacharya passes away". timesofindia.com. Times of India. 1 August 2014. பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
- ↑ "Storm Advisory: Cyclone of a Life on the Horizon". https://movies.nytimes.com/2008/12/11/movies/11herb.html.
- ↑ "Radical Bengali writer Nabarun Bhattacharya dies at 66 – IBNLive". Ibnlive.in.com. Archived from the original on 10 August 2014. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆக்கங்கள் நபருண் பட்டாச்சார்யா இணைய ஆவணகத்தில்
- "An Indian Writer in Japan : Textualities". Archived from the original on 9 June 2011. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
- American Petromax (Hindi) – Nabarun Bhattacharya