உள்ளடக்கத்துக்குச் செல்

நபம் துக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபம் துகி
Nabam Tuki
அருணாசலப் பிரதேசத்தின் 8வது முதலமைச்சர்
பதவியில்
1 நவம்பர் 2011 – ஜனவரி 26, 2016
முன்னையவர்ஜார்பம் காம்லின்
பின்னவர்கலிகோ புல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1964-07-07)7 சூலை 1964
ஓம்புலி கிராமம், சகலி, பபும் பரே மாவட்டம், அருணாசலப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
பிள்ளைகள்5
வாழிடம்இட்டாநகர்
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்www.nabamtuki.org

நபம் துக்கி (பி. ஜூலை 7, 1964) அருணாசலப் பிரதேசத்தின் 8ஆம் முதலமைச்சர் ஆவார். நிஷி மக்களை சேர்ந்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 26, 2016 வரை பதவி வகித்தவர்.[2]

ஜனவரி 2016 இல் இவரது அமைச்சரவையில் பதவிவகித்த கலிகோ புல், காங்கிரஸ் கட்சியின் 21 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இவருக்கு எதிரானார். இதனால் அருணாச்சலப் பிரதேச அரசியலில் சிக்கல் ஏற்பட்டது. இவரது ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது.[3][4]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

அருணாசலப் பிரதேசம், பபும் பரே மாவட்டம், சகலி உட்கோட்டத்தைச் சேர்ந்த ஓம்புலி கிராமத்தில் ஜூலை 7, 1964 இல் நபம் துக்கி பிறந்தார். இவருக்கு ஐந்து மகள்களும் இரு மகன்களும் உண்டு.[5]

1995 இல் சகலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேகோங் அபாங்கின் அமைச்சரவையில் துணை வேளாண் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[5] 1998 இல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.[5] 1999 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முகுத் மித்தி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆய அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2004, 2009 ஆண்டுகளில் நடந்த அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேகோங் அபாங்க் மற்றும் தோர்ச்யீ காண்டு அமைச்சரவைகளில் அமைச்சராக பதவிவகித்தார்.[5] ஜார்பம் காம்லினுக்கு அடுத்தபடியாக, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 2016 வரை பதவியிலிருந்தார்..[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
முன்னர் அருணாச்சலப் பிரதேச முதல்வர்கள் பட்டியல்
நவம்பர் 1, 2011 – ஜனவரி 26, 2016
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபம்_துக்கி&oldid=4125754" இலிருந்து மீள்விக்கப்பட்டது