உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னீரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃகாவியா ஏரி, நியூசிலாந்து

நன்னீரியல் (Limnology) என்பது உள்நாட்டில் காணப்படும் நீர் சுற்றுச் சூழலைப்பற்றிய படிப்பாகும்.[1] நன்னீரியல் படிப்பில் உள்நாட்டு நீரின் உயிரியல், வேதியியல், இயற்பியல் மற்றும் புவியியல் பண்புகள் மற்றும் செயல்பாடுகளின் அம்சங்கள் ஆகியவை (ஓடுகின்ற மற்றும் நிலையாக இருக்கும் நீர், நன்னீர் மற்றும் உப்பு நீர், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்)அடங்கும். ஏரிகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகள், நீரூற்றுகள், நீரோடைகள், ஈரநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பற்றியவையும் இப்படிப்பில் அடங்கும்.[2]

நன்னீரியலின் உப துறைகளான நிலத்தோற்ற நன்னீரியல் படிப்பில், நீர்வாழ் சுற்றுச்சூழல்கள் மற்றும் அதன் நீர்நிலைகளுக்கு இடையிலான தொடர்புகளை வெளிப்படையாக ஆராய்வதன் மூலம், இயற்கைக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் சூழலியலில், ஆய்வுகள்,நீரினை நிர்வகித்தல் மற்றும் நிலப்பரப்பு முன்னோக்கைப் பயன்படுத்தி இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க முயல்கிறது. சமீபத்தில், பூமி அமைப்பின் ஒரு பகுதியாக உலகளாவிய உள்நாட்டு நீரைப் புரிந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியதுஅவசியம் ஆகிறது. உலகளாவிய நன்னீரியல் என்ற உப துறையை உருவாக்கியது.[3] இந்த அணுகுமுறை உலகளாவிய உயிர் வேதியியல் சுழற்சிகளில் உள்நாட்டு நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பங்கு போன்ற உலகளாவிய அளவில் உள்நாட்டு நீரில் உள்ள செயல்முறைகளை நடைமுறைபடுத்துகிறது.[4][5][6][7][8] நன்னீரியலில், நீர்வாழ் சூழலியல் மற்றும் உயிர்நீாியலுடன் நெருக்கமாக தொடர்புடையது, அவை நீர்வாழ் உயிரினங்களையும், உயிரற்ற சூழலுடனான தொடர்புகளையும் ஆய்வு செய்கின்றன. நன்னீர்-மையப்படுத்தப்பட்ட துறைகளுடன் (எ.கா., நன்னீர் உயிரியல்) நன்னீரியல் கணிசமான மேற்பொருந்துதல் இருந்தாலும், உள்நாட்டு உப்பு ஏரிகளைப் பற்றிய படிப்பும் இதில் அடங்கும்.

வரலாறு

[தொகு]

ஜெனோவா ஏரி பற்றிய தனது ஆய்வுகளுடன் இந்தத் துறையை நிறுவிய, பிரான்சுவா-அல்போன்ஸ் ஃபோரல் (1841-1912) என்பவரால் நன்னீரியல் என்ற சொல் உருவாக்கப்பட்டது. இத்துறையில் ஏற்பட்ட ஆர்வம் விரைவாக விரிவடைந்தது. இதனால் 1922, ஆகஸ்டில் தீன்மேன் ( ஜெர்மன் விலங்கியல் நிபுணர்) மற்றும் ஐனார் நாமன் (சுவீடன் நாட்டு தாவரவியலாளர்) பன்னாட்டு சமூக நன்னீரியலகத்தோடு இணைந்து நிறுவியது. ஃபோரலின் நன்னீரியலின் அசல் வரையறை, "ஏரிகளின் கடல்சார்வியல்", அனைத்து உள்நாட்டு நீர்நிலைகளையும் ஆய்வு செய்வதற்காக விரிவுபடுத்தப்பட்டது. [2] மேலும் பைக்கால் ஏரி குறித்த பெனடிக்ட் டைபோவ்ஸ்கியின் ஆய்வு செல்வாக்கைப் பெற்றது.

ஆரம்பகாலத்தில், அமெரிக்கவில் அமெரிக்க அறிவியலாளர்கள் சி. ஈவ்லின் கட்சின்சன் மற்றும் எட் டீவி [9]ஆகியோர் நன்னீராய்வாளர்களாவர். விச்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில், எட்வர்ட் ஏ. பிர்ச், சான்சி சூடே மற்றும் ஆர்தர் டி. கச்லர் ஆகியோர் நன்னீரியல் மையத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தனர்.[10][11]

நன்னீரியலின் பொதுப் பண்புகள்

[தொகு]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் இயற்பியல் பண்புகள் வெப்பம், நீரோட்டங்கள், அலைகள் மற்றும் சுற்றுச் சுழலில் நிலவும் பிற பருவகால தட்ப வெப்ப பரவலால் தீர்மானிக்கப்படுகின்றன.[12] ஒரு நீரின் உருவகமானது எவ்வகையில் அமைந்துள்ளது என்றும் (ஏரி, நதி, நீரோடை, ஈரநிலம், கரையோரம் போன்றவை) மற்றும் நீரைச் சுழ்ந்துள்ள பூமியின் அமைப்பையும் பொறுத்தது. உதாரணமாக, ஏரிகள் அவற்றின் உருவாக்கத்தால் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் ஏரிகளின் மண்டலங்கள் நீரின் ஆழத்தைப் பொருத்து வரையறுக்கப்படுகின்றது.[13]ஆறு, நீரோடை அமைப்பானது, இப்பகுதியின் அடிப்படை புவியியல் மற்றும் நீரின் பொதுவான வேகம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.[12] நன்னீரியலின் ஆய்வுக்குள் வரும் மற்றொரு வகை நீர்வாழ் அமைப்பு கழிமுகங்களாகும்.

ஒளி இடைவினைகள்

[தொகு]

ஒளி மண்டலப்படுத்தல் என்பது சூரிய ஒளியானது நீரில் ஊடுருவி ஒரு நீரின் கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறிப்பதாகும்.[12] இந்த மண்டலங்கள் ஒரு ஏரி போன்ற நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் பல்வேறு நிலைகளில் உற்பத்தித்திறனை கொண்டது என வரையறுக்கின்றன. உதாரணமாக, சூரிய ஒளி எவ்வளவு ஆழம் வரை நீரில் ஊடுருவக்கூடியது என்பதைப் பொருத்து தான் அந்நீரில் தாவர வாழ்க்கை அமைகிறது. இதையே ஒளி மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. மீதமுள்ள சூரிய ஒளி புகாத ஆழமான மற்றும் தாவர வளர்ச்சி இல்லாத நீர்ப் பரப்பினை ஒளியற்ற மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.[12]

வெப்ப அடுக்கு

[தொகு]

ஒளி மண்டலத்தைப் போலவே, வெப்ப அடுக்கு அல்லது வெப்ப மண்டலமாக்கல் என்பது ஏரியின் பல்வேறு அடுக்குகளின் வெப்பநிலையின் அடிப்படையில் நீர்வாழ் அமைப்பினுள் நீரினை பல்வேறு தொகுப்புகளாக பிரிக்கும் ஒரு வழியாகும். குறைந்த அலைகளை கொண்ட நீர், அதிகளவில் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியது. இதனால் வெப்பமானது தண்ணீரில் ஆழம் வரை செல்கிறது. நீர் அடுக்கில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் அதிவேகமாக குறைகிறது. எனவே நீர் மேற்பரப்புக்கு அருகில் வெப்பமாக இருக்கும். ஆனால் கீழ்நோக்கி நகரும்போது படிப்படியாக குளிராக இருக்கும்.[14] ஒரு ஏரியில் வெப்ப அடுக்கை மூன்று முக்கிய பிரிவுகளாக வரையறுக்கப்படுகிறது. இளம்சூட்டு நீரகம் நீரின் மேற்பரப்புக்கு மிக அருகில் உள்ளது மற்றும் நீரின் மேற்பரப்பை சூடேற்ற நீண்ட மற்றும் குறுகிய அலை கதிர்வீச்சை உறிஞ்சுகிறது. குளிரான மாதங்களில், காற்றின் வெட்டு நீர் மேற்பரப்பை குளிர்விக்க பங்களிக்கும். வெப்பநிலைச் சரிவு என்பது நீர் நெடுவரிசையில் உள்ள ஒரு பகுதி. அங்கு நீர் வெப்பநிலை விரைவாக குறைகிறது. கீழ் அடுக்கு குறைவெப்ப அடிநிலை நீர் ஆகும். இது குளிர்ந்த நீரைக் கொண்டிருக்கிறது. ஏனெனில், அதன் ஆழம் சூரிய ஒளி உள் ஊடுருவதைத் தடுக்கிறது.[14]

வேதியியல் பண்புகள்

[தொகு]

நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில் நீரின் வேதியியல் கலவை இயற்கை பண்புகள் மற்றும் செயல்முறைகளின் கீழ்க்கண்டவற்றைக் கொண்டு கட்டுப்படுத்தப்படுகிறது. அவை மழைப்பொழிவு, அடியில் தங்கியுள்ள உள்ள மண் மற்றும் அடிவாரத்தில் உள்ள நீர்நிலைகள், அரிப்பு, ஆவியாதல் மற்றும் வண்டல் போன்றவையாகும்.[12] அனைத்து நீர் நிலைகளும் கரிம மற்றும் கனிம கூறுகள் மற்றும் சேர்மங்களின் ஒரு குறிப்பிட்ட கலவையைக் கொண்டுள்ளன. உயிரியல் வினைகள் நீரின் வேதியியல் பண்புகளைப் பாதிக்கின்றன. இயற்கை செயல்முறைகளுக்கு மிக அதிகமாகவே, மனித நடவடிக்கைகள் நீர்வாழ் அமைப்புகளின் வேதியியல் கலவை மற்றும் அவற்றின் நீர் தரத்தை கடுமையாகப் பாதிக்கின்றன[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, Arvind (2005). Fundamentals of Limnology. APH Publishing. ISBN 9788176489195.
  2. 2.0 2.1 Wetzel, R.G. 2001. Limnology: Lake and River Ecosystems, 3rd ed. Academic Press (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-744760-1)
  3. Global limnology: up-scaling aquatic services and processes to planet Earth: https://www.tandfonline.com/doi/pdf/10.1080/03680770.2009.11923903?needAccess=true[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Cole, J. J.; Prairie, Y. T.; Caraco, N. F.; McDowell, W. H.; Tranvik, L. J.; Striegl, R. G.; Duarte, C. M.; Kortelainen, P. et al. (2007-02-13). "Plumbing the Global Carbon Cycle: Integrating Inland Waters into the Terrestrial Carbon Budget". Ecosystems 10 (1): 172–185. doi:10.1007/s10021-006-9013-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:1432-9840. 
  5. Tranvik, Lars J.; Downing, John A.; Cotner, James B.; Loiselle, Steven A.; Striegl, Robert G.; Ballatore, Thomas J.; Dillon, Peter; Finlay, Kerri et al. (November 2009). "Lakes and reservoirs as regulators of carbon cycling and climate". Limnology and Oceanography 54 (6part2): 2298–2314. doi:10.4319/lo.2009.54.6_part_2.2298. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-3590. Bibcode: 2009LimOc..54.2298T. https://www.duo.uio.no/bitstream/10852/11601/3/dravh-publ-Larsen_NY.pdf. 
  6. Raymond, Peter A.; Hartmann, Jens; Lauerwald, Ronny; Sobek, Sebastian; McDonald, Cory; Hoover, Mark; Butman, David; Striegl, Robert et al. (November 2013). "Global carbon dioxide emissions from inland waters". Nature 503 (7476): 355–359. doi:10.1038/nature12760. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:24256802. Bibcode: 2013Natur.503..355R. http://urn.kb.se/resolve?urn=urn:nbn:se:uu:diva-213816. 
  7. Engel, Fabian; Farrell, Kaitlin J.; McCullough, Ian M.; Scordo, Facundo; Denfeld, Blaize A.; Dugan, Hilary A.; de Eyto, Elvira; Hanson, Paul C. et al. (2018-03-26). "A lake classification concept for a more accurate global estimate of the dissolved inorganic carbon export from terrestrial ecosystems to inland waters". The Science of Nature 105 (3–4): 25. doi:10.1007/s00114-018-1547-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-1042. பப்மெட்:29582138. Bibcode: 2018SciNa.105...25E. 
  8. O'Reilly, Catherine M.; Sharma, Sapna; Gray, Derek K.; Hampton, Stephanie E.; Read, Jordan S.; Rowley, Rex J.; Schneider, Philipp; Lenters, John D. et al. (2015-12-16). "Rapid and highly variable warming of lake surface waters around the globe". Geophysical Research Letters 42 (24): 10,773–10,781. doi:10.1002/2015gl066235. பன்னாட்டுத் தர தொடர் எண்:0094-8276. Bibcode: 2015GeoRL..4210773O. http://nbn-resolving.de/urn:nbn:de:bsz:352-0-322742. 
  9. Frey, D.G. (ed.), 1963. Limnology in North America. University of Wisconsin Press, Madison
  10. "History of Limnology – UW Digital Collections" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-05-02.
  11. Beckel, Annamarie L. (in en-US). Breaking new waters : a century of limnology at the University of Wisconsin. Special issue. http://digicoll.library.wisc.edu/cgi-bin/WI/WI-idx?id=WI.WTBreakWaters. 
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 Horne, Alexander J; Goldman, Charles R (1994). Limnology (Second ed.). United States of America: McGraw-Hill. ISBN 978-0-07-023673-8.
  13. Welch, P.S. (1935). Limnology (Zoological Science Publications). United States of America: McGraw-Hill. ISBN 978-0-07-069179-7.
  14. 14.0 14.1 14.2 Boyd, Claude E. (2015). Water Quality: An Introduction (Second ed.). Switzerland: Springer. ISBN 978-3-319-17445-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னீரியல்&oldid=3581312" இலிருந்து மீள்விக்கப்பட்டது