நந்திதா ராய்
நந்திதா ராய் | |
---|---|
பிறப்பு | 3 ஏப்ரல் 1955 மும்பை, இந்தியா |
பணி | இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
வலைத்தளம் | |
www |
நந்திதா ராய் (Nandita Roy, பிறப்பு: 3, ஏப்ரல், 1955) என்பவர் ஒரு இந்திய திரைப்படப் படைப்பாளியும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தன் இணை இயக்குநரான ஷிபோப்ரோசாத் முகர்ஜியுடன் இணைந்து இச்சே (2011) படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இருவரும் ஆக்சிடண்ட், முக்தோதர, அலிக் சுக், ராம்தானு, பேலா சேஷே, ஹாமி, பிரக்தான், போஸ்டோ, கொந்தோ ஆகிய படங்களை இயக்கியுள்ளனர்.[1][2] இவர் பல படங்களிலும், பல புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார்.
துவக்ககால வாழ்க்கை
[தொகு]நந்திதா ராய் 3, ஏப்ரல், 1955 அன்று மும்பையில் பிறந்தார்.[3] இவர் பம்பாயின் வில்லே பார்லேயின் புறநகரில் உள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மேலும் பார்லே கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் செயின்ட் ஜோசப் கான்வென்ட்டில் துவக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் மும்பை பல்கலைக்கழகம், கலினாவில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் 1977 இல் நிதிஷ் ராயை மணந்தார். இவர் தற்போது இந்தியாவின் கொல்கத்தாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தொழில்
[தொகு]நந்திதா ராய் தனது தொழில் வாழ்க்கையை 1978 இல் கையுறை-கைப்பாவை ஆட்டக்காரராகவும், குழந்தைகளுக்கான குறும்பட பொம்மைப் படமான அகடூம்-பகடூம் படத்தின் இணை இயக்குனராகவும் பணியாற்றினார். 1980 கள் மற்றும் 1990 களில், ராய் பல்வேறு திரைப்படங்களில் உதவி படத் தொகுப்பாளர், உதவி இயக்குநர், செட் டிரஸ்ஸர், ஆராய்ச்சி உதவியாளர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணிபுரிந்தார். வணிகத்தின் பலவேறு பகுதிகளைக் கற்றுக்கொண்டார்.
நந்திரா ராய் ஒரு காலகட்டத்தில் தொலைக்காட்சித் துறைக்கு நகர்ந்தார். மேலும் ஈ. டி.வி நெட்வர்க்கின் முதல் அபுனைவு மற்றும் புனைவு தயாரிப்பு நிறுவனத்துக்குப் பொறுப்பு ஏற்றார். மேலும் அவர்களின் வங்க மொழி தொலைக்காட்சி அலைவரிசையின் படைப்பு மற்றும் நிர்வாக மேலாளராக இருந்தார். முதல் வங்க மொழி பெண்கள் பத்திரிகை நிகழ்ச்சியான ஸ்ரீமோதி உட்பட 19 அசல் அபுனைவு நிக்ச்சிகளை உருவாக்கினார். மேலும் நந்திதா ராய் நன்கு அறியப்பட்ட இயக்குநர்களின் ஒரு மணி நேர தொலைக்காட்சி படங்களைக் கொண்ட தொடரையும் துவக்கினார்.
நந்திதா ராய் சிபோப்ரோசாத் முகர்ஜியுடன் இணைந்து விண்டோஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் ஒன்றாக இணைந்து பல தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் தயாரித்தனர்.
பிரக்தான் 2016 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த வங்க மொழிப் படமாக பகழ்பெற்றது. மேலும் மேற்கு வங்க மொழித் திரைப்பட பத்திரிகையாளர் விருதைப் பெற்றது.[4] பேலா சேஷே மற்றும் இச்சே ஆகிய படங்கள் முறையே 250 மற்றும் 125 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடின. இவரது பல படங்கள் விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றன. இச்சே படம் இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, ஆக்சிடண்ட் படம் கேரள சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அலிக் சுக் படம் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் கலாச்சார மற்றும் கல்வி நோக்கங்களுக்காக தங்களின் சேகரிப்பின் ஒரு பகுதியாக இச்சே படத்தை ஏற்றுக் கொண்டது. இச்சே, முக்தோதர, ராம்தானு ஆகியவை விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பி. இடி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இச்சே மற்றும் முக்தோதர போன்றவை இக்கட்டான நிலையில் உள்ள பெண்களுக்கான சட்ட மற்றும் உளவியல் ஆலோசனைக்கான சான்றிதழ் பாடத்தில் பயன்படுத்தப்பட்டுளன.
விருதுகள்
[தொகு]- முக்தோதர ஆனந்தலோக் விருது 2012 - சிறந்த படம் [5]
- அலிக் சுக் பிலிம்பேர் விருது (கிழக்கு) 2014 - சிறந்த இயக்கம் [6]
- பிரக்தான் இந்தியன் பிசினஸ் பிலிம் அவார்ட்ஸ் 2016 [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Swati Sengupta (1 March 2014). "Director duo Nandita Roy and Shiboprosad Mukherjee: Rooted in reality". Khaleej Times. Archived from the original on 9 September 2014. பார்க்கப்பட்ட நாள் 10 July 2014.
- ↑ "Tollywood". The Telegraph. 30 May 2014. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 10 July 2014.
- ↑ "Nandita Roy". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
- ↑ Kumar, S. "WBFJA 2016 Award Winner Names | List of All WBFJA 2016 Award Winners of Bengali Film Industry". www.kolkatabengalinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
- ↑ Kumar, S. "Anandalok Award Winners 2012 – Who wins Anandalok Puraskar of Bengali TV & Films". www.kolkatabengalinfo.com.
- ↑ Filmfare Awards East
- ↑ "Praktan gets Highest Grossing Movie award - Times of India". http://timesofindia.indiatimes.com/entertainment/bengali/movies/news/Praktan-gets-Highest-Grossing-Movie-award/articleshow/54602987.cms.