உள்ளடக்கத்துக்குச் செல்

நகர வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகாகோவில் நகர வேளாண்மை மேற்கொள்ளப்படும் காட்சி
ஆம்ஸ்டர்டாம் நகரில் சிறிதளவு நகர வேளாண்மை மேற்கொள்ளப்படும் காட்சி

நகரத்து எல்லைக்குள்ளோ அதன் எல்லையை சூழவுள்ள பகுதிகளிலோ வேளாண்மை செய்வதை நகர வேளாண்மை (Urban Agriculture) எனலாம்.[1] இச்செயல்பாடு உணவு உற்பத்தியை பெருக்கவும் தரமான உணவை நகர மக்கள் பெறவும், உணவுத் தன்னிறைவை காணவும் உதவுகின்றது.[2]கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண்காடு வளர்ப்பு, நகர தேனீ வளர்ப்பு (Urban beekeeping), தோட்டக்கலை (horticulture) போன்றவையும் நகர வேளாண்மையுள் அடங்குகின்றன. இதே செயற்பாடுகள் நகரத்தை ஒட்டியுள்ள இடங்களிலும் இடம்பெறுகின்றன. நகர வேளாண்மை பொருளாதார, சமூக வளர்ச்சியில் பல மட்டங்களைக் கொண்டுள்ளது.

நகர வேளாண்மை பல மட்டப் பொருளியல், சமூக வளர்ச்சிகளை உருவக்கலாம். இது பேண்தகு குமுகாயங்களுக்கான சமூக இயக்கமாக அமையலாம். இங்கு இயற்கையும் சமூகமும் இணைந்த முழுமைப் பகிர்வுக்கான சமூக வலைகளை இயற்கை உணவு விளைவிப்போரும் உணவுக் கூடங்களும் களப்பணியாளரும் அமைக்கலாம். இவை நல்ல நிறுவன ஆதரவு இருந்தால், ஒருங்கிணைந்த நக்ரத் திட்டமிடலில் பங்கேற்று நகர வளர்ச்சி இயக்கமாகலாம். மற்றவர்களுக்கு இது உணவுக் காப்புறுதியும் நல்லஊட்ட உணவும் நல்குவதோடு, வருவாய் உருவாக்க வாய்ப்பாகவும் அமைகிறது. எப்படியாயினும் நகர வேளாண்மை விளைவிப்பொர், நுகர்வோர் ஆகிய இருதரப்பும், கூடுதல் காய்கறி, பழங்கள், இறைச்சி ஆகியவற்றைப் பெற நேரடி வாய்ப்பை நல்கி, அவர்களுக்கு உணவுக் காப்புறுதியையும் நல்ல உணவையும் தருகின்றது.

வரலாறு

[தொகு]

பாரசீகத்தின் பகுதி வறட்சி நகரங்களுக்குப் பாலைவனச் சோலைகளில் இருந்து நீர்க்குழாய்கள் வழியாக மலைச்சுனை நீர் செறிந்த உணவு விளைச்சலுக்காக கொணரப்படுகிறது. இதற்குசமூக உரமாகின்றன.[3] மாச்சு பிச்சுவில், நீர் சிக்கனம் பிடித்து பேணப்ப்பட்டு நகரத்தின் படியமைவு பண்ணைக் கட்டமைப்புக்கு மீளப் பயன்படுத்தப்படுகிறது. காய்கறிப் படுகைகள் சூரிய ஒளிபடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.[3]

நியூயாக் நகரத் தோட்டச் செயல்விளக்கம், 1922

ஊரகப் பண்ணை நடவடிக்கைக்கு மாற்றாக நகரப் பண்ணையாக்கமும் அயல்நாட்டு ஏற்றுமதியும் புதியனவல்ல. இம்முறை போர்க்காலத்திலும் பொருளியல் வீழ்ச்சியின் போதும் ஏன் வளமான விளைச்சல் காணும்]] போதும் கூட, உணவுத் தட்டுப்பாடு உள்ளநிலைகளில் கடைபிடிப்பவையே. செருமனியில் 19 ஆம் நூற்றாண்டளவில் ஏழ்மையும் உணவு கிடைப்பும் அருகியபோது நகர ஒதுக்கீட்டுத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.[4]

பொருளியல் வீழ்ச்சியின்போது 1893 இல் டெட்ராயிட்டு மக்கள் நகரத்தின் காலியிட மனைகளில் காய்கறிகலைப் பயிரிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இவ்விடங்கள் பிங்ரியின் உருளைக்கிழங்கு தோட்டங்கள் என அப்போதைய மேயரின் பெயரால் வழங்கப்பட்டன. ஏனெனில், காசன் எசு. பிங்ரி தான் இந்த எண்ணத்தை முதலில் விதைத்தவர் ஆவார். அவர் இந்தத் தோட்டங்கள் உணவை வழங்கி, வருவாய்க்கு வழிவகுத்துப் பொருலியல் இடரின்போது தற்சார்பையும் அளிக்க வேண்டுமென விரும்பினார்.[5] இதே போன்ற வெற்றித் தோட்டங்கள் முதல், இரண்டாம் உலகப் போர்களின்பொது ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் பெரும்பிரித்தானியாவிலும் தோன்றின. இவை காய்கறிகளையும் கீரைவகைகளையும் விளைவித்தன. இம்முயற்சி போரின் விளைவால் ஏற்பட்ட உணவுத் தட்டுபாட்டின் தாக்கத்தைக் குறைக்க மக்களால் மேற்கொள்ளப்பட்டன.

குடியரசு தலைவர் உட்ரோ வில்சன் அன்றிருந்த பொருளியல் மந்தநிலையில் கிடைக்கும் திறந்தவெளி நிலங்களை உணவு விளைச்சலுக்குப் பயன்படுத்தும்படி அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஐரோப்பாவின் பெரும்பாலான உணவு விளைச்சல் பொருக்கு வழங்கவே பயன்பட்டதால், அவர்களால் ஐக்கிய அமெரிக்காவுக்கு உணவு ஏற்றுமதி செய்யமுடியவில்லை. எனவே அமெரிக்காவுக்கு உணவு அனுப்பவும் கூடுத விளைபொருளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் புதிய திட்டமொன்று வகுக்கப்பட்ட, . எனவே, 1919 ஆம் ஆண்டளவில் 5 மில்லியன் மனைகள் உணவு விளச்சலுக்குப் பயன்படுத்தி 500 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேல் உணவு அறுவடை கானப்பட்டது.

பீச் பழத் தோட்டங்கள், மான்டிரியூல், செய்ன்-செயின்ட்-தெனிசு, பிரான்சு

அமெரிக்கப் பெரும்பொருளியல் வீழ்ச்சி நேர்ந்த நெருக்கடிக் காலத்தில் இதே போன்ற நகர வேளாண்மை முயற்சி தன் குறிக்கோளில் வெற்றிகண்டு வேலயையும் உணவையும் வழங்கியது. இம்முயற்சி சமூக உந்துத்லை அளித்ததோடு பொருளியல் ஏற்றத்துக்கும் வழிவகுத்தது. அப்போது 2.8 மில்லியன் டாலருக்கும் மேலாக உணவு அறுவடை வாழ்தகு வேளாண்மை தோட்டங்கள் வழியாகக் காணப்பட்டது. மேலும் இரண்டாம் உலகப்போரின்போது போருணவு அமைப்பு தேசிய வெற்றித் தோட்டங்கள் திட்டத்துக்கு வித்திட்டது. இதனால் நகர வேளாண்மை பரவலாகியது. இந்தப் புதிய திட்டத்தில் 5.5 மில்லியன் அமெரிக்கர் வெற்றித் தோட்ட இயக்கத்தில் பங்கேற்று பழங்களும் காய்கறிகளும் விளைவித்தனர். இது அமெரிக்க நாட்டு விளைச்சலில் 44% ஆக அமைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hampwaye, G.; Nel, E. and Ingombe, L. "The role of urban agriculture in addressing household poverty and food security: the case of Zambia". Gdnet.org. Archived from the original on 2012-02-23. Retrieved 2013-04-01.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Bailkey, M., and J. Nasr. 2000. From Brownfields to Greenfields: Producing Food in North American Cities. Community Food Security News. Fall 1999/Winter 2000:6
  3. 3.0 3.1 André., Viljoen (2005). Continuous productive urban landscapes : designing urban agriculture for sustainable cities. Bohn, Katrin., Howe, J. (Joe). Oxford: Architectural Press. ISBN 9780750655439. OCLC 60533269.
  4. "untitles" (PDF). Archived from the original (PDF) on 19 சூலை 2011. Retrieved 13 மார்ச்சு 2009.
  5. "Hazen S. Pingree Monument". historicdetroit.org/. DAN AUSTIN.

குறிப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Urban agriculture
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர_வேளாண்மை&oldid=3480022" இலிருந்து மீள்விக்கப்பட்டது