தோரத்தி வவுகான்
தோரத்தி வவுகான் Dorothy Vaughan | |
---|---|
தோரத்தி வவுகான் | |
பிறப்பு | தோரத்தி ஜான்சன் செப்டம்பர் 20, 1910 கன்சாசு நகர், முசிசோரி, அமெரிக்கா |
இறப்பு | நவம்பர் 10, 2008 ஆம்ப்டன், வர்ஜீனியா அமெரிக்கா | (அகவை 98)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கணிதவியல் |
பணியிடங்கள் | நாசா, இலாங்கிளே ஆராய்ச்சி மையம் |
கல்வி கற்ற இடங்கள் | வில்பர்போர்சு பல்கலைக்கழகம், 1929 |
துணைவர் | ஓவார்டு வவுகான் |
பிள்ளைகள் | 6 |
தோரத்தி ஜான்சன் வவுகான் (Dorothy Johnson Vaughan) (செப்டம்பர் 20, 1910 – நவம்பர் 10, 2008) ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கக் கணிதவியலாளரும் மாந்தக் கணிப்பாளரும் ஆவார். இவர் வர்ஜீனியாவில் உள்ள ஆம்ப்டனில் அமைந்த நாசாவின் இளாங்கிளே ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தார். இவர் 1949 இல் மேற்குப் புலக் கணிப்பாளரின் பொறுப்புநிலை மேற்பார்வையாளர் ஆனார். இவர்தான் இம்மையத்தில் பணியாளருக்கான மேற்பார்வைப் பணியில் ஈடுபட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியாவார்.
பின்னர் இவர் அப்பதவியில் அலுவல் முறையாகப் பணி உயர்வு பெற்று அமர்ந்தார். இவர் அங்கு 29 ஆண்டுகள் பணி செய்தபோது 1960 களில் போர்ட்டிராம் நிரலாக்க மொழியைதான் கற்றதோடு தன் பணியாளருக்கும் கற்பித்து எந்திரவகைக் கணினிகளை அறிமுகப்படுத்தினார். இவர் பின்னர் இளாங்கிளே ஆராய்ச்சி மையப் பகுப்பாய்வு, கணிப்புத் துறையின் நிரலாக்கப் பிரிவுக்குத் தலைமையும் ஏற்றார்.
மறைநிலை ஆளுமைகள்: அமெரிக்கக் கனவும் விண்வெளிப் போட்டியில் உதவிய கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் (2016), நாசாவில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தாக்கம் விளைவித்த ஆப்பிரிக்க அமெரிக்கக் கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் பொறியாளர்களும் பற்றிய வரலாறு, எனும் மார்கோட் இலீ செட்டெர்லி எழுதிய நூலில் விவரித்த ஆராய்ச்சியாளர்களில் தோரத்தி வவுகானும் ஒருவர் ஆவார்.
இளமை
[தொகு]வாழ்க்கைப்பணி
[தொகு]பிந்தைய வாழ்நாள்
[தொகு]மக்கள் பண்பாட்டில்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Beverly Golemba, Human Computers: The Women in Aeronautical Research, unpublished manuscript 1994, NASA Langley Archives
வெளி இணைப்புகள்
[தொகு]- Melfi, Theodore (2016-12-25), Hidden Figures, பார்க்கப்பட்ட நாள் November 22, 2016
- 1910 பிறப்புகள்
- 2008 இறப்புகள்
- அமெரிக்கப் பெண் கணிதவியலாளர்கள்
- ஆப்பிரிக்கப் பெண் கணிதவியலாளர்கள்
- ஆப்பிரிக்கப் பெண் அறிவியலாளர்கள்
- அமெரிக்கப் பெண் அறிவியலாளர்கள்
- ஆப்பிரிக்க அமெரிக்கக் கணிதவியலாளர்கள்
- அமெரிக்கக் கணிதவியலாளர்கள்
- ஆப்பிரிக்கக் கணிதவியலாளர்கள்
- மேற்குப் புலக் கணிப்பாளர்கள்
- மாந்தக் கணிப்பாளர்கள்
- பெண் கணிதவியலாளர்கள்
- பெண் கணினி நிரலாளர்கள்
- மென்பொருள் பொறியியலாளர்கள்