உள்ளடக்கத்துக்குச் செல்

தோரணம் (பண்பாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்களத் தோரணம்

தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும்.[1][2][3]

தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.

  • மங்கள தோரணம்.
  • அமங்கள தோரணம்.

மங்களத் தோரணம்

[தொகு]
மாவிலை தோரணம்

சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.

அமங்களத் தோரணம்

[தொகு]
அமங்களத் தோரணம்

மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்களத் தோரணம் எனப்படும். இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கவேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Decoration in Jaffna Buildings - Conceptual and Symbolic Aspects of Decoration in Jaffna".
  2. "Flickrhivemind.net".
  3. "திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரணம்_(பண்பாடு)&oldid=4099777" இலிருந்து மீள்விக்கப்பட்டது