தோமாகி திருவிழா
தோமாகி (Domahi) அல்லது தோமாசி எனவும் தாமி எனவும் அழைக்கப்படும் இது காமரூப் மற்றும் மேற்கு அசாமின் கிழக்கு கோல்பாரா பகுதிகளின் பிரபலமான ஒரு அறுவடைத் திருவிழாவாகும். [1] [2] திருவிழாக்கள் அறுவடை பருவத்தின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கிறது. மேலும் காமரூபி மற்றும் கோல்பாரியா ஆகிய புதிய ஆண்டுகளின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]இந்த சொல் "தோ" என்றால் இரண்டு எனப்படும். "மாகி" அல்லது "மாசி" என்பது மாதத்தின் பொருள். 'தோமாகி' என்ற சொல்லுக்கு இரண்டு மாத சந்திப்பு என்று பொருள்படும். [3]
திருவிழா "மகர் தோமாகி" (சனவரி நடுப்பகுதியில்), "பைகாகர் அல்லது வைசாக்கி தோமாகி" (ஏப்ரல் நடுப்பகுதி) மற்றும் "கதிர் அல்லது கார்த்திகை தோமாகி" (அக்டோபர் நடுப்பகுதி) என பிரிக்கப்பட்டுள்ளது. வானியல் ரீதியாக பைகாகர் தோமாகி உத்தராயணத்துடனும்,கேட்டி தோமாகி இலையுதிர்கால உத்தராயணத்துடனும், மகர் தோமாகி குளிர்கால சங்கராந்தியுடனும் தொடர்புடையது . வசந்த காலப் பண்டிகையை விட குளிர்கால பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இலையுதிர்காலத்தில் நடைபெறும் மூன்றாவது திருவிழா எப்போதும் மற்றொரு தோமாகியாக கருதப்படுவதில்லை.
மகர் தோமாகி
[தொகு]மகர் தோமாகி அல்லது தோமாசி என்பது அறுவடை காலம் மற்றும் ஆண்டு முடிந்தபின் விருந்து வழங்கும் பண்டிகையாகும். இது சனவரியின் நடுப்பகுதியில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன்னதாக "லாக் பாத்" என்று அழைக்கப்படும் ஒரு பொதுமக்களுக்கான விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
பைகாகர் தோமாகி
[தொகு]பைகாகர் அல்லது வைசாக்கி தோமாகி சிறப்பு வசந்த கால விழாவாகும். வழக்கமாக இது ஏப்ரல் முதல் வாரத்தில் அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் ஒரு கண்காட்சியாகும். இது வடக்கு காம்ரூப்பில் "பத்தேலி" எனவும், தெற்கு காமரூப்பில் "சோரி" அல்லது "சுவான்ரி" என்று அழைக்கப்படுகிறது. திருவிழா சோரி என்று அழைக்கப்படும் காமரூப்பின் தெற்குப் பகுதியில், உயரமான மூங்கில் நடவு செய்யப்படுவதில்லை. ஆனால் ஒரு கற்றைப் புற்களுடன் மூங்கிள் குச்சிகள் அலங்கரிக்கப்பட்டு திருவிழாவில் இடம்பெறுகிறது. வடக்கு காம்ரூப்பில் உள்ள மூங்கிலை மக்கள் பயபக்தியுடன் தொட்டு வணங்குகிறார்கள்.
பத்தேலி
[தொகு]வடக்கு காமரூப்பில் (நல்பரி, ரங்கியா போன்ற பகுதியில்) இது பத்தேலி என அழைக்கப்படுகிறது. இது வைகாசி மாதத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு பகுதியும் கொடி மற்றும் ஒரு வண்ணத் துணிகளுடன் நீண்ட மூங்கில் அலங்கரிக்கப்படுகிறது. கூட்டத்தில் ஒருவர் மணமகன் என்று அழைக்கப்படுகிறார். மணப்பெண் என்று அழைக்கப்படும் மற்றவர்கள், அதைச் சுற்றி வட்டத்தில் சுற்றி அமர்ந்து கொள்வர். அப்போது ஒரு போலி திருமண விழா நடத்தப்படுகிறது. [4] இரண்டு பச்சை மூங்கில்களை நடவு செய்வது முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். நிர்ணயிக்கப்பட்ட தேதியில் காலையில் இளைஞர்கள் இரண்டு மூங்கில்களை வெட்டி வண்ணத் துணி மற்றும் சௌரிகளால் அலங்கரிப்பர். அதைத் தொடர்ந்து இசைக்கருவிகளுடன் கொண்டாட்டங்கள் நடைபெறும். வெவ்வேறு பொருட்களின் வர்த்தகத்துடன் ஒரு பெரிய அளவிலான கண்காட்சியும் நடைபெறும்.
தெற்கு காமரூப்பில் இது "சோரி" அல்லது "சுவான்ரி" என்று அழைக்கப்படுகிறது. அதே மாதிரியை சிறிய மாறுபாடுகளுடன் பின்பற்றுகிறது. வடக்கு காமரூப் பஜாலி பகுதியில், கிருஷ்ணரின் பெயரான "மதன் மோகன் கோசைன்" என்று அழைக்கப்படும் ஆலமரத்திற்கு எதிராக மூங்கில் வைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
பானிகாந்தா ககாதி என்பது பத்தேலி மற்றும் பண்டைய இந்திரத்வாஜா பண்டிகைக்கு இடையிலான ஒற்றுமையை நோக்கி கவனத்தை ஈர்க்கிறது. [5] இந்திரத்வாஜா திருவிழா காளிகா புராணத்தில் "சக்ரோதானா" என்று விவரிக்கப்படுகிறது. மேலும் இது ஒரு கம்பத்தை சுற்றி கொடிகளுடன் நடந்தது. காளிகா புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி திருவிழாவிற்கான நடைமுறைகள் தற்போதைய நாட்களின் பத்தேலியின் கொண்டாட்டங்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை தோராயமாக மதிப்பிடுகின்றன. இரண்டு திருவிழாக்கள் சில சிறிய விவரங்களைத் தவிர்த்து ஒன்றாகத் தோன்றுகின்றன. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bīrendranātha Datta, Nabīnacandra Śarmā, Prabin Chandra Das (1994), A Handbook of Folklore Material of North-East India, P 158
- ↑ Śarmā Nabīnacandra (1988), Essays on the Folklore of North-eastern India, P 64
- ↑ Datta, Birendrnath (1995), Folk Culture of the Goalpara Region, p.98
- ↑ B.C. Allen (1905), Kamrup District Gazetteer,p.111
- ↑ Banikanta Kakati, Visnuite Myths and Legends, pp.64-65
- ↑ D. Sarma (1968), Religious Fairs and Festivals of Assam, Journal of Assam research Society, Vol XVIII