தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, அயனாவரம்
அமைவிடம் | அயனாவரம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
---|---|
ஆள்கூறுகள் | 13°05′42″N 80°14′21″E / 13.0949°N 80.2391°E |
மருத்துவப்பணி | பொது மருத்துவம்[1] |
வகை | முழு சேவை மருத்துவ மையம் |
பட்டியல்கள் |
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை என்பது தமிழ்நாடு மாநிலத்தில்[2] சென்னை[3] மாவட்டத்தின் அயனாவரம் புறநகர்ப் பகுதியில்[4] அமையப் பெற்றுள்ள ஓர் அரசு பல்நோக்கு மருத்துவமனை ஆகும்.
மாத ஊதியம் ரூ.15,000க்கும் குறைவாகப் பெறும் நிறுவன ஊழியர்கள் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறத் தகுதியுடையவர்கள்.[5] சென்னையிலுள்ள இரண்டு அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் ஒன்று அயனாவரம் பகுதியில் இயங்குகிறது. மற்றொன்று கே. கே. நகர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[6][7]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 31.8 மீட்டர்கள் (104 அடி) உயரத்தில், (13°05′42″N 80°14′21″E / 13.0949°N 80.2391°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அயனாவரம் பகுதியில் மேடவாக்கம் குளச் சாலையில்[8] இம்மருத்துவமனை அமைந்துள்ளது.
விபரங்கள்
[தொகு]இருதய சிகிச்சை, நரம்பியல், மகப்பேறு மருத்துவம், எலும்பியல், காது மூக்கு தொண்டை நிபுணத்துவம், கண் மருத்துவம், உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை இம்மருத்துவமனையின் சிறப்பு அம்சங்களாகும். இரத்த வங்கி சேவைகளும் இங்கு உண்டு. இம்மருத்துவமனையின் கீழ் தளத்தில் மருந்துகள் வழங்கும் பகுதி உள்ளது. குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் வெளி நோயாளிகள் பிரிவும் இங்கு இயங்குகிறது.
பல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவத் துறையும் இங்கு உள்ளது.[9]
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "E.S.I. Hospital, Ayanavaram, Chennai : Golden Chennai". yellowpages.goldenchennai.com. Retrieved 2023-12-17.
- ↑ "ESI Hospital in Chennai - ESICBIHAR" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-20. Retrieved 2023-12-17.
- ↑ "ESI Hospital in Ayanavaram, Chennai-600023". www.sulekha.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2023-12-17.
- ↑ "Uncleared garbage inside ESI hospital Ayanavaram". The Times of India. 2020-09-29. Retrieved 2023-12-17.
- ↑ "ESIC services remain under-utilised" (in en-IN). The Hindu. 2013-03-16. https://www.thehindu.com/news/cities/chennai/esic-services-remain-underutilised/article4516725.ece.
- ↑ The Hindu Bureau (2023-03-09). "L-G recalls association with ESIC hospital in K.K. Nagar" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/l-g-recalls-association-with-esic-hospital-in-kk-nagar/article66600969.ece.
- ↑ "ESI Hospital KK Nagar - ESICBIHAR" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-26. Retrieved 2023-12-17.
- ↑ "E. s. i. hospital - Ayanavaram, Hospital Services, Chennai". www.medindia.net. Retrieved 2023-12-17.
- ↑ "AYANAVARAM ESI HOSPITAL". edantseva.gov.in. Retrieved 2023-12-17.