உள்ளடக்கத்துக்குச் செல்

தொன்மா வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொன்மாக்களின் வகைகள்

தொன்மாக்களின் வகைப்பாடு 1842 ஆம் ஆண்டு சர் ரிச்சர்டு ஓவன் என்பவர் டைனோசரியா என்னும் ஒரு தனிப்பட்ட தொன்மாவகையின் உள்வரிசையில் இகுவனோடன் (Iguanodon), மெகலோசரஸ் (Megalosaurus) மற்றும் ஹைலோசரஸ் (Hylaeosaurus) ஆகியவற்றை சேர்க்க பரிந்துரைத்தப்போது உருவானது ஆகும்.[1] 1887 மற்றும் 1888 இல் ஹரி சீலி என்பவர் தொன்மாக்களின் இடுப்பின் அமைப்பைக் கொண்டு தொன்மாக்களை இரண்டு உட்பிரிவாக பிரித்தார். அவை ஊரூடான் தொன்மா (ஊர் + ஊடு) அல்லது சௌரிஸியா (Saurischia) மற்றும் புள்ளூடான் தொன்மா (புள் + ஊடு) அல்லது ஆர்னிஸ்தியா (Ornithischia) ஆகும்.[2] இந்த இரண்டு வகைப்பாடும் தொன்மாக்களின் தொகுப்பியலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இன்னும் அவை நிலைத்திருக்கின்றன.

ஊரூடான் தொன்மா வரிசை

[தொகு]

ஊரூடான் தொன்மா வரிசை என்பது பல்லி, பாம்பு, முதலை போன்ற ஊர்வனவிற்கு உள்ள இடுப்பு அமைப்பைப் போன்று அமைந்துள்ள தொன்மாக்களை (பழங்கால விலங்குகளை) குறிக்கும்.

† புள்ளூடான் தொன்மா வரிசை

[தொகு]

புள்ளூடான் தொன்மா வரிசை என்பது பறவைகளைப் போன்ற இடுப்பு அமைப்பைக் கொண்டுள்ள பழங்கால விலங்குகளை குறிப்பனவாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Owens, 1842.
  2. Seeley, 1888. While the paper was published in 1888, it was first delivered in 1887.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்மா_வகைப்பாடு&oldid=2915264" இலிருந்து மீள்விக்கப்பட்டது