தையல் வகைகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/67/Fig._3._Position_of_the_hands_without_cushion.jpg/250px-Fig._3._Position_of_the_hands_without_cushion.jpg)
ஆடை தயாரிப்புக் கலையில் ஒரு தையல் கட்டு எனப்படுவது ஒருதடவை நூல் துணியில் அல்லது ஆதாரத்தில் முடிச்சு அல்லது வளையம் இடுவதாகும். இயந்திரத் தையல் ஆயினும் கைத் தையல் ஆயினும் தயல் கட்டு என்பது தையலின் அடிப்படை ஆகும்..[1] சிறப்புடைய பல்வேறுபட்ட தையல் முறைகள் வேறுபட்ட நோக்கங்களுக்ககப் பயன்படுத்தப்படுகின்றன.
தையலின் வகைகள்[தொகு]
தையல் ஊசி மூலம் இடப்படக் கூடிய இந்த தையல் வகைகள் அவை இடப்படும் ஊசிக் கண் அமைப்பில் மாறுபடும்:[1] அடிப்படையில் தையல் இரு வகைப்படும்.
- அடிப்படைத்தையல்: இது சோம் தையல்,விசுபம் தையல், சிறுநூலோடி, பெருநூலோடி, துன்னாத்தையல் முதலியவற்றை அடக்கும்.
- அலங்காரத்தையல்: இது சங்கிலித்தையல், நரம்புத்தையல், நிரப்புத் தையல், மீன் முள்ளுத் தையல், கம்பளித்தையல் ஆகியவற்றை அடக்கும்.
சோம் தையல்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fe/Fig._8._Hemming-stitch.jpg/220px-Fig._8._Hemming-stitch.jpg)
பொருத்துக்களை இணைப்பதற்கான அடிப்படைத் தையலாக சோம் தையல் பயன்படும். லேசு வகைகளைப் பொருத்தவும், அலங்கார வேலைகளுக்கும் இது பயன்படும். ஆடைகளில் உள்ள பொத்தலை மறைஇஅவும் இது பயனுடையது.
சிறு நூலோடி[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Running_stitch.gif/220px-Running_stitch.gif)
இது சிறு நூலோடி, பெரு நூலோடி என இரு வகைப்படும். இவை தற்காலிக தையல் தேவைகளுக்கான முறைகளாகும். சிமோக்கிங் தையலுக்கு சுருக்கி எடுக்கவும் பெரு நூலோடி மடிப்புக் குலையாமல் இருத்தல் முதலான தையல்களுக்கும் பெரிதும் பயன்படும்.