உள்ளடக்கத்துக்குச் செல்

தைமூரியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைமூரியப் பேரரசு
گورکانیان
ஈரான்-உ-துரான்
1370–1507
மூன்று வளையச் சின்னம்
தைமூரின் "மூன்று வளைய" முத்திரை.[1][2][3]
குறிக்கோள்: 
பாரசீக மொழி:راستى رستى
ரஸ்டி ருஸ்டி
"பாவ விமோசனம் என்பது நன்னடத்தையில் உள்ளது"
தைமூருக்குக் கீழ் இதன் உச்சபட்ச பரப்பளவில் தைமூரியப் பேரரசின் வரைபடம்
தைமூருக்குக் கீழ் இதன் உச்சபட்ச பரப்பளவில் தைமூரியப் பேரரசின் வரைபடம்
நிலைஅமீரகம்
தலைநகரம்
பேசப்படும் மொழிகள்
சமயம்
State religion
பிற சமயங்கள்
அரசாங்கம்முற்றிலுமான முடியரசு
அமீர் 
• 1370–1405
தைமூர் (முதல்)
• 1506–1507
பாதியல் சமான் (கடைசி)
வரலாற்று சகாப்தம்பிந்தைய நடுக்காலங்கள்
• தைமூர் தன் படையெடுப்புகளைத் தொடங்குகிறார்
1363
• தைமூரியப் பேரரசு நிறுவப்படுதல்
1370
• மேற்கு நோக்கிய விரிவாக்கம் தொடங்குகிறது
1380
• அங்காரா யுத்தம்
20 சூலை 1402
• சமர்கந்தின் வீழ்ச்சி
1505
• ஹெறாத்தின் வீழ்ச்சி
1507
• முகலாயப் பேரரசு நிறுவப்படுதல்
1526
பரப்பு
1405 மதிப்பீடு.[7][8]4,400,000 km2 (1,700,000 sq mi)
நாணயம்தன்கா
முந்தையது
பின்னையது
சகதாயி கானரசு
சூபி அரசமரபு
சலயிர் சுல்தானகம்
குர்த் அரசமரபு
முசாபரியர்கள்
சர்பதர்கள்
மரசிக்கள்
அப்ரசியப் அரசமரபு
காரா கோயுன்லு
சார்சியா இராச்சியம்
புகாரா கானரசு
சாபாவிய ஈரான்
கிவா கானரசு
காரா கோயுன்லு
அக் கோயுன்லு
முகலாயப் பேரரசு
சார்சியா இராச்சியம்
தற்போதைய பகுதிகள்

தைமூரியப் பேரரசு என்பது, துருக்க-மங்கோலிய மூலத்தைக் கொண்டவர்களும் பின்னர் பாரசீகராக மாறியவர்களுமான மத்திய ஆசிய சுன்னி முசுலிம் வம்சத்தினரால் நிறுவப்பட்ட பேரரசு ஆகும். இவர்களது பேரரசு மத்திய ஆசியா, ஈரான், இன்றைய ஆப்கானிசுத்தான் மற்றும் பாகிசுத்தான், இந்தியா, மெசொப்பொத்தேமியா, காக்கேசியா ஆகியவற்றில் பெரும்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிப் பரந்து விரிந்திருந்தது. இது புகழ் பெற்ற நாடுபிடிப்பாளரான தைமூரினால் (தாமர்லான்) 14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.

16 ஆம் நூற்றாண்டில், தைமூரிய இளவரசரும் பர்கனாவின் ஆட்சியாளருமாக இருந்த பாபர் இந்தியாமீது படையெடுத்து முகலாயப் பேரரசை உருவாக்கினார். இது, 18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பேரரசர் ஔரங்கசீப்புக்குப் பின்னர் மங்கத் தொடங்குவதற்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தது. பின்னர் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் பிரித்தானிய அரசால் முறையாகக் கலைக்கப்பட்டது. இத்துடன் தைமூரிய வம்சத்தினரின் கடைசி அரசும் இல்லாதொழிந்தது.

தோற்றப் பின்னணி

[தொகு]

தைமூரிய வம்சத்தினரின் தோற்றம் பர்லாசு (Barlas) என அழைக்கப்படும் மங்கோலிய நாடோடிக் கூட்டமைப்புடன் தொடங்குகிறது. பர்லாசுகள் செங்கிசுக் கானின் படையினரில் எஞ்சிய குழுக்களாவர். மங்கோலியர் மத்திய ஆசியாவைக் கைப்பற்றிய பின்னர் பர்லாசுகள் துருக்கத்தானத்தில் குடியேறினர். இதனால் இது மகுலித்தானம் (மங்கோலியர் நாடு) எனவும் எனவும் அழைக்கப்பட்டது. உள்ளூர்த் துருக்கருடனும், பிற துருக்க மொழி பேசுவோருடனும் குறிப்பிடத்தக்க அளவு கலந்து பழகியதால், தைமூரின் காலத்தில் பர்லாசுகள் மொழியாலும், பழக்க வழக்கங்களாலும் துருக்கராகவே மாறிவிட்டனர். மேலும், இசுலாத்தைக் கைக்கொள்ளத் தொடங்கிய பின்னர், இசுலாமியச் செல்வாக்கு உருவான காலத்தின் தொடக்கத்திலிருந்து முன்னிலை வகித்த பாரசீகக் கல்வி, உயர் பண்பாடு ஆகியவற்றையும் மத்திய ஆசியத் துருக்கரும், மங்கோலியரும் ஏற்றுக்கொண்டனர். தைமூரிய உயர் குடியினர், பாரசீக-இசுலாமிய அரசவைப் பண்பாட்டுடன் ஒன்றுகலப்பதற்கு பாரசீக இலக்கியம் முக்கிய பங்காற்றியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Coinage of Timur with "Three annulets" symbol (1393-1405):
  2. Bloom, Jonathan; Blair, Sheila S. (14 May 2009). Grove Encyclopedia of Islamic Art & Architecture: Three-Volume Set (in ஆங்கிலம்). OUP USA. p. 426. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-530991-1. Coinage issued by the Timurid dynasty (r. 1370-1506) comprised various silver coins and several coppers, most often anonymous, although some coppers struck in the name of Timur 1370–1405; here called amīr) have a tamghā of three annulets prominently on the reverse.
  3. Kadoi, Yuka (2010). "On the Timurid flag". Beiträge zur islamischen Kunst und Archäologie 2: 144, 149, 159 Fig.5. https://www.academia.edu/17410816. 
    • Manz, Beatrice Forbes (1999). The Rise and Rule of Tamerlane. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், p.109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-63384-2. Limited preview கூகுள் புத்தகங்களில். p.109. "In almost all the territories which Temür incorporated into his realm Persian was the primary language of administration and literary culture. Thus the language of the settled 'divan' was Persian."
    • B.F. Manz, W.M. Thackston, D.J. Roxburgh, L. Golombek, L. Komaroff, R.E. Darley-Doran. "Timurids" Encyclopaedia of Islam Brill Publishers 2007; "During the Timurid period, three languages, Persian, Turkish, and Arabic were in use. The major language of the period was Persian, the native language of the Tajik (Persian) component of society and the language of learning acquired by all literate and/or urban Turks. Persian served as the language of administration, history, belles lettres, and poetry."
    • Bertold Spuler. "CENTRAL ASIA v. In the Mongol and Timurid Periodse". Encyclopaedia Iranica. பார்க்கப்பட்ட நாள் 2017-09-14. "Like his father, Olōğ Beg was entirely integrated into the Persian Islamic cultural circles, and during his reign Persian predominated as the language of high culture, a status that it retained in the region of Samarqand until the Russian revolution 1917 ... Ḥoseyn Bāyqarā encouraged the development of Persian literature and literary talent in every way possible ...
    • Robert Devereux (ed.) "Muhakamat Al-Lughatain (Judgment of Two Languages)" Mir 'Ali Shir Nawāi; Leiden, E.J. Brill 1966: "Nawa'i also employs the curious argument that most Turks also spoke Persian but only a few Persians ever achieved fluency in Turkic. It is difficult to understand why he was impressed by this phenomenon, since the most obvious explanation is that Turks found it necessary, or at least advisable, to learn Persian – it was, after all, the official state language – while Persians saw no reason to bother learning which was, in their eyes, merely the uncivilized tongue of uncivilized nomadic tribesmen.
    • David J. Roxburgh. The Persian Album, 1400–1600: From Dispersal to Collection. Yale University Press, 2005. pg 130: "Persian literature, especially poetry, occupied a central in the process of assimilation of Timurid elite to the Perso-Islamicate courtly culture, and so it is not surprising to find Baysanghur commissioned a new edition of Firdawsi's Shanama."
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; homelanguage என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; EI - Manz2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 2016-09-14. 
  7. Rein Taagepera (September 1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): p. 500. doi:10.1111/0020-8833.00053. http://www.escholarship.org/uc/item/3cn68807. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைமூரியப்_பேரரசு&oldid=3790608" இலிருந்து மீள்விக்கப்பட்டது