தைனோ சடங்கு இருக்கை
Appearance
செய்பொருள் | மரமும் பொன்னும் |
---|---|
அளவு | 44சமீ நீளம், 22சமீ உயரம், 13சமீ அகலம் |
உருவாக்கம் | கிபி 1200–1500 |
கண்டுபிடிப்பு | சாந்தா டொமிங்கோ, கரிபியன் |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
தைனோ சடங்கு இருக்கை என்பது, ஒரு மனிதன் நான்கு கால்களில் நிற்பது போன்ற வடிவில் அமைந்து ஒரு கொலம்பசுக்கு முற்பட்டகால, மரத்தாலான இருக்கை ஆகும். தைனோ மக்களால் உருவாக்கப்பட்ட இது, டொமினிக்கன் குடியரசின் சாந்தோ டொமிங்கோ நகருக்கு அண்மையில் உள்ள குகை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.[1] இவ்விருக்கை கிறித்தோபர் கொலம்பசு கரிபியக் கரையில் இறங்குவதற்கு முன் செய்யப்பட்டது என்பதுடன், ஐரோப்பியரின் வருகைக்கு முந்தியகால தைனோ பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் முக்கியமான எச்சங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taino ritual seat பரணிடப்பட்டது 2010-07-06 at the வந்தவழி இயந்திரம், British Museum, accessed 6 October 2010