உள்ளடக்கத்துக்குச் செல்

தைட்டனைல் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டனைல் சல்பேட்டு
இனங்காட்டிகள்
13825-74-6
ChemSpider 9041905
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 71312680 ஒற்றை நிரேற்று
  • [O-]S(=O)(=O)[O-].O=[Ti+2]
பண்புகள்
O5STi
வாய்ப்பாட்டு எடை 159.92 g·mol−1
அடர்த்தி 1.3984 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தைட்டனைல் சல்பேட்டு (Titanyl sulphate) என்பது TiOSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. தைட்டானியம் டையாக்சைடுடன் புகையும் கந்தக அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதால் தைட்டனைல் சல்பேட்டு உருவாகிறது. நீரேறிய தைட்டானியம் டையாக்சைடு கூழ்மமாக இது நீராற்பகுப்பு அடைகிறது.[1] நான்முக கந்தகமும் எண்முக தைட்டானியம் மையங்களும் சேர்ந்த அடர் பலபடி வலையமைப்பை இச்சேர்மம் பெற்றுள்ளது.

தைட்டானியத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆறு ஈந்தணைவிகளும் நான்கு வேறுபட்ட சல்பேட்டு பகுதிக்கூறுகள் மற்றும் ஒரு ஆக்சைடு பாலத்திலிருந்து பெறப்பட்டவையாகும். இச்சேர்மத்தின் ஓர் ஒற்றை நீரேற்றும் அறியப்படுகிறது. இதுவும் நீரற்ற பொருள் போலவே தயார் செய்யப்படுகிறது. நீரேற்றில் ஒரு Ti-OS பிணைப்பு Ti-OH2 பிணைப்பால் மாற்றீடு செய்யப்படுகிறது [2]

தைட்டனைல் சல்பேட்டு கட்டமைப்பின் பகுதிகள்
TiOSO4, சல்பேட்டு மற்றும் தைட்டானியம் மையங்களின் இணைப்பின் விவரிப்பு.
TiOSO4(H2O), நீரின் இருப்பைக் காட்டுகிறது.
Ti = நீலம், O = சிவப்பு, மற்றும் S = மஞ்சள்

.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Heinz Sibum; Volker Günther; Oskar Roidl; Fathi Habashi; Hans Uwe Wolf (2005), "Titanium, Titanium Alloys, and Titanium Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a27_095
  2. Gatehouse, B. M.; Platts, S. N.; Williams, T. B. (1993). "Structure of Anhydrous Titanyl Sulfate, Titanyl Sulfate Monohydrate and Prediction of a New Structure". Acta Crystallographica Section B 49: 428–435. doi:10.1107/S010876819201320X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டனைல்_சல்பேட்டு&oldid=4175930" இலிருந்து மீள்விக்கப்பட்டது