தேவி காலோத்தரம்
தேவி காலோத்தரம் [1] [2] 14ஆம் நூற்றாண்டில் [3] காலோத்தர ஆசிரியரால் எழுதப்பட்ட இரண்டு நூல்களில் ஒன்று. வடமொழியில் உள்ள ‘தேவி காலோத்தர ஆகமம்’ 85 சுலோகங்களும், விருத்தியுரையும் கொண்டது. [4] தமிழ்நூல் தேவி காலோத்தரம் இதே பெயர் கொண்ட வடநூலின் மொழிபெயர்ப்பு. இதனைச் சிவாகமங்களின் சாரம் என்பர். சிவன் இதனைப் பார்வதிக்குச் சொன்னதாக நூல் வளர்கிறது. வடமொழி நூல் 85 சுலோகங்களும் விருத்தியுரையும் கொண்டது. [5] ஞானம், ஞானசாரம் என்னும் இரண்டு பகுதிகளைக் கொண்டது. வடமொழி நூல் 'தேவி காலோத்தரம்' 'சுருதி சூக்தி மாலை' என்னும் பெயருடன் தமிழில் எழுதப்பட்ட உரையுடன் வெளிவந்துள்ளது.
பதமுத்தி, பரமுத்தி எனச் சிவபதவியை இரண்டாகக் காண்பது வழக்கம். இவற்றில் பரமுத்தி என்பது மேலான முத்தி. இது மீண்டும் பிறக்காமல் இருக்கும் முத்தி.
இதனை அடைவதற்குரிய ஆன்மப் பயிற்சி இந்த நூலில் கூறப்படுகிறது. [6]
இந்த நூலுக்குப் சில உரைநூல்கள் வெளிவந்துள்ளன.
இதன் வடமொழி நூலின் ஞானசார விசாரப்படலம் 85 சுலோகங்களுக்கும் மொழிபெயர்ப்பாக 85 வெண்பாக்கள் இரமணரிசியால் தமிழில் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. [7]
காலோத்தர ஆசிரியர் காலத்துக்கு முன்பே மற்றொரு தமிழ் மொழிபெயர்ப்பு நூல் தமிழில் இருந்திருக்கிறது. இது 73 விருத்தப் பாடல்களால் ஆனது. <ref>1848-ல் இதன் பதிப்பு வெளிவந்துள்ளது.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 201.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 46.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ 1375-1400
- ↑ இந்த நூல் யாழ்ப்பாணத்தில் 1903-ல் ஆச்சிடப்பட்டது.
- ↑ யாழ்ப்பாணத்தில் 1903-ல் அச்சிடப்பட்டுள்ளது
- ↑
- எடுத்துக்காட்டு பாடல்
பிடுங்காது முதலெவையும் பிரசமலர் கொய்யாது
விடுங்காலால் ஊழ்த்து உதிர்ந்த விரைமலர்கள் அவை ஏந்திக்
கடுங்காலன் தளைப்பட்ட அம்புயங்கள் அருச்சிப்பாம். - ↑ 1913, 1924 பதிப்புகள்.