தேவாங்கர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
கருநாடகம், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மகாராட்டிரம், ஒடிசா, தில்லி[1][2] | |
மொழி(கள்) | |
கன்னடம், தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பத்மசாலியர் |
தேவாங்கர் (Devangar) (பரவலாக அறியப்படுவது தேவாங்க செட்டியார்)[3][4][4] எனப்படுவோர் தமிழ்நாட்டில், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டு வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சேடர் , சேணியர், தேவரா, தேவ்ரா, மானூர்குல தேவாங்கர் எனும் பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் இந்த சமுதாயத்தினர் தேனி, விருதுநகர், திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம், குமாரபாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
தேவாங்கர்- விளக்கம்
[தொகு]சிலப்பதிகாரத்தில் (14:108) இடம்பெற்றுள்ள, வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட அகிலும் துகிலும் என்ற வரியிலுள்ள "துகில் என்பதன் வகைகளுள் ‘தேவாங்கம்' என்ற வகையினை உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். (பக்கம். 378, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் - உ.வே.சா. நூலகப் பதிப்பு, 1976.) இது வேலைப்பாடமைந்த துகில்வகை எனப் பிங்கல நிகண்டால் அறியலாம். அங்கப் போர்க் காட்சிகள் வரையப்பட்ட பட்டுத் துணியே தேவாங்கம் எனப்பட்டது என்றும், இத்தகைய நெசவு வேலை செய்தோர் தேவாங்கர் என அழைக்கப்படுகின்றனர்.[5]
திருமண உறவுகள்
[தொகு]இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்த தேவாங்கர் சமூகத்தினர் தொழில் நிமித்தமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நெசவுத் தொழிலை தங்களது குலத்தொழிலாகக் கொண்ட இவர்கள் தாங்கள் சென்று குடியேறிய இடங்களில் குழுக்களாக வசித்து வந்தனர். தமிழ்நாட்டில் குடியேறிய இந்தக் குழுக்கள் 213 வம்சங்களாக பிரிக்கப்பட்டு இந்த வம்சத்தின் அடிப்படையில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
செளடேஸ்வரி அம்மன் கோவில்
[தொகு]இந்து சமயத்தின் சைவம், வைணவம் என்கிற இரு பிரிவுகளில் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலும் அனைவருக்கும் பொதுவாக ஸ்ரீஇராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.[1][6][7]
இடம் பெயர்ந்தது ஏன்?
[தொகு]கருநாடகா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் தமிழ்நாட்டுக்கு ஏன் இடம் பெயர்ந்து வந்தார்கள் என்பது குறித்து இவர்களது கோயில் விழாக்களில் பெரியவர்கள் பாடும் பாடல்களில் விளக்கம் காணப்படுகிறது. இந்தப் பாடல்களில் இவர்கள் கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து விட்டதாகவும் பாடல் உள்ளது. இதில் அவர்களது முன்னோர் பாதிக்கப்பட்ட கதையும் விளக்கப்படுகிறது.
சுங்குடிச் சேலைகள்
[தொகு]நெசவுத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்ட இச்சமூகத்தினர் சுங்கடி சேலைகள், பட்டுச் சேலைகள் நெசவு செய்வதில் அதிகத் திறனுடையவர்கள். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியிலுள்ள இந்த சமுதாயத்தினர் நெய்த சுங்குடி சேலைகள், சின்னாளப்பட்டிப் பட்டுச் சேலைகள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றவை. இன்று எந்திர நெசவுகள் வந்துவிட்ட பின்பு சின்னாளப்பட்டியில் நெசவுத் தொழில் வீழ்ச்சியடைந்து போய்விட்டது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழறிஞர் கோவைக்கிழார் எனும் இராமச்சந்திரன் செட்டியார்
- பிரபல தமிழ் கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ் குமார்.
- சர். பிட்டி தியாகராயர், சென்னையின் முதல் மேயர் - திராவிட கட்சிகளின் ஆரம்பமான நீதிக்கட்சியின் தலைவர்.
அரசியல் பங்களிப்புகள்
[தொகு]- எம். டி. இராமசாமி செட்டியார் (ஃபார்வர்ட் ப்ளாக்) - முன்னாள் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர்.
- சௌடி சுந்தர பாரதி (ஃபார்வர்ட் ப்ளாக்) - முன்னாள் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.
- எஸ். லட்சுமணன் (தி.மு.க)- போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர்.
- ராமதாஸ் (அ.தி.மு.க)- போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர்.
- சிவப்பிரகாசம் ( தி.மு.க)- அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர்.
- விஜயகுமார் (அ.தி.மு.க)- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர்.
- அனகாபுத்தூர் இராமலிங்கம் - முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்,அதிமுக நிறுவனர்
- சவுண்டப்பன் (அ.தி.மு.க)- சேலம் மேயர்.
கல்வி நிறுவனங்கள்
[தொகு]தேவாங்கர் சமுதாய அமைப்புகள் மற்றும் தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்களின் நிர்வாகத்தின் கீழுள்ள சில கல்வி நிறுவனங்கள்
- பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி, தேனி
- சௌடாம்பிகா தொழில்நுட்பக் கல்லூரி, அருப்புக்கோட்டை
- சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை
- தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி (அருப்புக்கோட்டை)
- தேவாங்கர் பல்தொழில்நுட்பக் கல்லூரி, தேவதானப்பட்டி
- தேவாங்கர் மேனிலைப்பள்ளி (நீராவி)
- எஸ். வி. வி. கெ. வீரப்பா வித்யாலயா மேனிலைப்பள்ளி (குல்லூர்சந்தை - விருதுநகர் மாவட்டம்)
- தேவாங்கர் மேனிலைப் பள்ளி,(சின்னாளப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்)
- தேவாங்கர் மகளிர் உயர்நிலைப் பள்ளி,(சின்னாளப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்)
- சேலம் சௌடேஸ்வரி கல்லூரி, சேலம்
- தேவாங்கர் மகளிர் மேனிலைப்பள்ளி (அருப்புக்கோட்டை)
- தேவாங்கர் நகர நடு நிலைப்பள்ளி (அருப்புக்கோட்டை)
- தேவாங்கர் நடு நிலைப்பள்ளி (அருப்புக்கோட்டை)
- தேவாங்கர் கலை கல்லூரி (அருப்புக்கோட்டை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 George, Anubha. "For 500 years, a Kannadiga community of weavers has produced Kerala’s iconic white and gold saree" (in en-US). Scroll.in. https://scroll.in/magazine/881619/for-500-years-a-kannadiga-community-of-weavers-has-produced-keralas-iconic-white-and-gold-saree.
- ↑ Acharya, Prasant Kumar. Sacred Complex of Budhi Santani: Anthropological Approach to Study Hindu Civilization (2003 ed.). New Delhi: Concept Publishing Company. pp. 240–246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-18069-049-5.
- ↑ "MGR magic still spins votes from Coimbatore weavers - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/MGR-magic-still-spins-votes-from-Coimbatore-weavers/articleshow/52049522.cms.
- ↑ 4.0 4.1 Nainar, Nahla (2014-03-21). "Silence of the looms" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/silence-of-the-looms/article5814798.ece.
- ↑ எஸ். இராமச்சந்திரன் எழுதிய வரலாற்று நோக்கில் வர்மக்கலை கட்டுரையின் அடிக்குறிப்புகள்-4
- ↑ "A ritual of pain to connect with the past - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/A-ritual-of-pain-to-connect-with-the-past/articleshow/16945540.cms.
- ↑ "Erikarai Sri Ramalinga Sowdeswari Amman Jalakandapuram". sites.google.com.