உள்ளடக்கத்துக்குச் செல்

தேடுபொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேடுபொறி அல்லது தேடற்பொறி என்பது ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில் குவிந்து கிடக்கும் தகவல்களில் இருந்தோ கணினியில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்குத் தேவையான தகவலைப் பெற உதவுகின்றது. பொதுவாகப் பாவனையாளர்கள் ஒரு விடயம் சம்பந்தமாகத் தேடுதலை ஒரு சொல்லை வைத்து தேடுவார்கள். தேடுபொறிகள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். தேடுபொறிகள் என்பது பொதுவாக இணையத் தேடுபொறிகளை அல்லது இணையத் தேடற்பொறிகளையே குறிக்கும். வேறுசில தேடுபொறிகள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். இணைய தேடு பொறிகள் பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத் தேவையான மிகப் பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும்.[1][2][3]

வேறுசில தேடற்பொறிகள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள் போன்ற இணையத் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இணையத்தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது தேடு பொறிகள் அல்காரிதங்களைப் பாவித்துத் தேடல்களை மேற்கொள்ளும். வேறு சில தேடற்பொறிகளோ தமது இடைமுகத்தை வழங்கினாலும் உண்மையில் வேறுசில தேடுபொறிகளே தேடலை மேற்கொள்ளும்.

ஆரம்பகாலத்தில் ASCII முறை வரியுருக்களை கொண்டே தேடு சொற்களை உள்ளிட முடிந்தது. தற்போது ஒருங்குறி எழுத்துக்குறிமுறையை பல தேடுபொறிகளும் ஆதரிப்பதால் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் அந்த மொழியிலான பக்கங்களை தேடிப்பெறக்கூடியதாகவுள்ளது.

எவ்வாறு தேடு பொறிகள் வேலை செய்கின்றன

[தொகு]
  1. இணையத்தில் தவழ்தல்
  2. சுட்டியிடுதல்
  3. தேடுதல்

தேடு பொறிகள் வையக வலையில் அல்லது உலகளாவிய வலைப் பக்கங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்களைச் சேமித்தே தேடல்களை மேற்கொள்ளுகின்றன. இவை இணையப் பக்கங்களை தவழ்வதால் (சில சமயங்களில் சிலந்திகள் என்று அழைக்கப் படுகின்றன) குறிப்பிடப் பட்ட பக்கங்களின் ஒவ்வோர் இணைப்பிற்கும் இவை செல்லும். சில சமயங்களில் சில பக்கங்களைத் தவிர்ப்பதற்கு ரோபோக்கள் முடிவு செய்யும். அவை இணையப் பக்கங்களை அலசி ஆராய்ந்து அவை எவ்வாறு சுட்டியிடப் படும் எனத் தீர்மானிக்கப்படும். கூகிள் போன்ற சில தேடுபொறிகள் முழுப்பக்கத்தையோ அல்லது பகுதியையோ சேமித்துக் கொள்ளும்.

தேடல்களை மேற்கொள்ளல்

[தொகு]

தேடுபொறிகளில் தேடும்பொழுது ஒருங்குறியில் உள்ள சொற்களை இட்டுத் தேடலாம். யாஹூ! தேடல்களில் தேடல்களைத் தட்டச்சுச் செய்யும் பொழுதே நீங்கள் என்ன விடயத்தைத் தேட முற்படுகின்றீர்கள் என்று ஊகித்து ஆலோசனைகளை வழங்கும் இதே வசதி கூகிளிலும் பரீட்சாத்தகரமாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Voorhees, E.M. Natural Language Processing and Information Retrieval[தொடர்பிழந்த இணைப்பு]. National Institute of Standards and Technology. March 2000.
  2. "Internet Basics: Using Search Engines". GCFGlobal.org (in ஆங்கிலம்). Retrieved 2022-07-11.
  3. Stross, Randall (22 September 2009). Planet Google: One Company's Audacious Plan to Organize Everything We Know. Simon and Schuster. ISBN 978-1-4165-4696-2. Retrieved 9 December 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடுபொறி&oldid=4099722" இலிருந்து மீள்விக்கப்பட்டது