உள்ளடக்கத்துக்குச் செல்

தேடல் (தமிழக சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேடல் என்பது 1970களின் இறுதியிலும், 1980களின் துவக்கத்திலும் வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். விமர்சன உணர்வை வலியுறுத்தும் நோக்குடன் இந்த இதழ் துவக்கப்பட்டது. இந்த இதழானது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த இலக்கிய இதழ் ஆகும். இதன் ஆசிரியராக ஜோதி விநாயகம் இருந்தார்.

தேடல் இதழானது ஓரளவு விமர்சனக் கட்டுரைகளை கொண்டதாகவும், சுய படைப்புகளை மிகுதியாக கொண்டதாகவும் வெளியானது. தேடலில் கலாப்ரியா, கல்யாண்ஜி, உமாபதி, விக்ரமாதித்யன் மற்றும் சிலரது கவிதைகளும், பூமணி, வண்ணதாசன், ஜோதிவிநாயகம் போன்றோரது கதைகளும், சுந்தர ராமசாமி, நகுலன் போன்றோரின் கட்டுரைகளும் வெளியாயின. வண்ணநிலவனின் நாடகம் ஒன்றையும், கலாப்ரியா கவிதைகள் பற்றி விமர்சனமும் எழுதியுள்ளார். கூத்தாட்டத்தில் 'பொண் வேஷம்’ என்பது குறித்த ஒரு கட்டுரையை கி. ராஜநாராயணன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

தேடல் இதழ் 1978இல் இரண்டு இதழ்களும் 1983இல் இரண்டு இதழ்களும் வந்தன.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 205–207. Retrieved 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடல்_(தமிழக_சிற்றிதழ்)&oldid=3446272" இலிருந்து மீள்விக்கப்பட்டது