தேஜேந்திர மசூம்தார்
தேஜேந்திர மசூம்தார் | |
---|---|
![]() தேஜேந்திர மசூம்தார், 2014 | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | தேஜேந்திர நாராயண் மசூம்தார் |
பிறப்பு | 17 மே 1961 இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
இசைக்கருவி(கள்) | சரோத் |
இணைந்த செயற்பாடுகள் | பகதூர் கான்], அலி அக்பர் கான் |
பண்டிட் தேஜேந்திர நாராயண் மசூம்தார் (ejendra Narayan Majumdar ) (பிறப்பு 17 மே 1961) ஒரு இந்தியாவைச் சேர்ந்த சரோத் கலைஞராவார். இவர் பகதூர் கானின் மாணவர்.
பயிற்சி
[தொகு]இவர் தனது தாத்தா பிபூதி ரஞ்சன் மசூம்தரின் கீழ் மாண்டலின் மூலம் தனது இசை பயிற்சியைத் தொடங்கினார். அமரேசு சௌத்ரி மற்றும் அனில் பாலித் ஆகியோரின் கீழ் குரல் மற்றும் கைம்முரசு இணை பயிற்சியையும் பெற்றார். [1] பின்னர் பகதூர் கானின் கீழ் 18 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர் அஜய் சின்கா ராய் மற்றும் அலி அக்பர் கான் ஆகியோரின் கீழ் தொடர்ந்து பயிற்சி பெற்றார்.

இணை
[தொகு]இவர் சுஜாத் கானுடன் இணைந்து பாடியுள்ளார். குறிப்பாக சாருகேசி இராகத்தை பாடுவது குறிப்பிடத்தக்கது. [2]
இசை இயக்கம்
[தொகு]அர்ச்சுன் சக்ரவர்த்தி இயக்கிய டோலிலைட்ஸ் என்ற பெங்காலி திரைப்படத்திற்கு,[3] 2010 ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு வங்காள திரைப்படமான ஹனங்கால் படத்திற்கும் இசையமைத்துள்ளார். [4]
விருதுகள்
[தொகு]1981 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலி நடத்திய இசை போட்டியில் முதலிடம் பிடித்த இவருக்கு குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கமும் பண்டிட் த. வி. பலூசுகர் விருதும் வழங்கப்பட்டது.[5]
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர் மானசி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இந்திரயுத் என்ற ஒரு மகன் இருக்கிறான். [6]
குறிப்புகள்
[தொகு]- ↑ "ITC Sangeet Sammelan — Hyderabad, 2006". ITC Sangeet Research Academy. Retrieved 2009-09-02.
- ↑ Raja, Deepak (18 September 2002). "Shujaat Khan – "Most duets are a farce"". Deepak Raja's world of Hindustani Music (Blog). Retrieved 2009-09-04.
- ↑ Das, Mohua (3 March 2008). "Filmi froth". Calcutta, India. Retrieved 2009-06-16.
- ↑ Chatterji, Shoma A. "Hanankaal 2010 Bengali Film by Saibal Mitra First Look". Calcutta Tube (Blog). Retrieved 2010-02-02.
- ↑ "ITC Sangeet Sammelan — Hyderabad, 2006". ITC Sangeet Research Academy. Archived from the original on 2006-02-25. Retrieved 2009-09-02.
- ↑ "Rashid's latest crush". The Times of India. 21 March 2003. http://timesofindia.indiatimes.com/calcutta-times/rashids-latest-crush/articleshow/40912606.cms. பார்த்த நாள்: 2009-06-22.