தேசிய பெண் வாக்குரிமை சங்கம்
சுருக்கம் | NWSA |
---|---|
பின்னோர் | தேசிய அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கம் (NAWSA) |
உருவாக்கம் | 1869 |
கலைக்கப்பட்டது | 1890 |
முக்கிய நபர்கள் | சூசன் பி. அந்தோனி, எலிசபெத் கேடி ஸ்டாண்டன் |
தேசிய பெண் வாக்குரிமை சங்கம் (National Woman Suffrage Association) சுருக்கமாக:NWSA) பெண்களின் வாக்குரிமைக்காக மே 15, 1869 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டது. அதன் முக்கிய தலைவர்கள் சூசன் பி. அந்தோனி மற்றும் எலிசபெத் கேடி ஸ்டாண்டன் ஆவார். ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட பதினைந்தாவது திருத்தத்தின் மீது பெண்கள் உரிமைகள் இயக்கம் பிளவுபட்ட பிறகு இது உருவாக்கப்பட்டது. இது கறுப்பின ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமைக்காகவும் போராடியது.
பெண்களின் வாக்களிக்கும் உரிமைக்கான பிரச்சாரத்தில் தேசிய பெண் வாக்குரிமை சங்கம், முதன்மையாக கூட்டாட்சி மட்டத்தில் வேலை செய்தது. 1870களின் முற்பகுதியில், அது பெண்களை வாக்களிக்க முயற்சிக்கும் மற்றும் தடுக்கப்பட்டால் வழக்குகளைத் தாக்கல் செய்ய ஊக்குவித்தது. ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சமமான பாதுகாப்பிற்கான உத்தரவாதங்கள் மூலம் பெண்களுக்கு மறைமுகமாக உரிமையளித்தது என்று வாதிட்டது. பல பெண்கள் வாக்களிக்க முயன்றனர். குறிப்பாக சூசன் பி. அந்தோனி, கைது செய்யப்பட்டு பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். அமெரிக்க அரசியலமைப்பு பெண்களுக்கு மறைமுகமாக உரிமையளிக்கவில்லை என்று ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, இச்சங்கம் வெளிப்படையாக அவ்வாறு செய்யும் ஒரு சட்டத் திருத்தத்திற்காக போராடியது.
தேசிய பெண் வாக்குரிமை சங்கம் மற்றும் அதன் தலைவர்கள் பன்னாட்டு பெண்கள் அமைப்புடன் பணிபுரிந்தனர். 1890ம் ஆண்டில் தேசிய பெண் வாக்குரிமை சங்கம் அதன் போட்டியாளரான அமெரிக்கப் பெண் வாக்குரிமை சங்கத்துடன் இணைந்தபோது, அந்தோனி மற்றும் ஸ்டாண்டனின் தலைமையில் அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கம்[1] நிறுவப்பட்டது. இச்சங்கம் 1890ல் கலைக்கப்பட்ட போதிலும், 5 சூன் 1920 அன்று ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் 19ம் திருத்தம்[2][3] மேற்கொள்ளப்பட்டு பெண்கள் வாக்குரிமை மற்றும் கருப்பு நிறத்தவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
பின்னணி
[தொகு]1800களின் நடுப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் படி பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோர, எலிசபெத் கேடி ஸ்டாண்டேன் தலைமையில் 1848ம் ஆண்டில் நடைபெற்ற முதல் பெண்கள் வாக்குரிமை மாநாடு ஒரு முக்கிய நிகழ்வாகும். மாநாட்டிற்குப் பிறகு, பெண்களுக்கான வாக்குரிமை என்பது இயக்கத்தின் மையக் கோட்பாடாக மாறியது.[4]
1851ம் ஆண்டில், ஸ்டாண்டன் மற்றும் சூசன் பி. அந்தோனி பல தசாப்த கால கூட்டாண்மையை உருவாக்கினர், இது பெண்கள் உரிமைகள் இயக்கத்திற்கும் எதிர்கால தேசிய பெண் வாக்குரிமை சங்கத்திற்கும் (NWSA) முக்கியமானதாக மாறியது. அடுத்த பல ஆண்டுகளாக, அவர்கள் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கும், பெண்களின் உரிமைகளுக்காகவும் ஒன்றாக உழைத்தனர்.
1866ம் ஆண்டில், அந்தோனி மற்றும் ஸ்டாண்டன் பதினொன்றாவது தேசிய பெண்கள் உரிமைகள் மாநாட்டை ஏற்பாடு செய்தனர். இம்மாநாடு அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக நடைபெற்றது.[5]இந்த மாநாடு தன்னை அமெரிக்க சம உரிமைகள் சங்கமாக (AERA)[6] மாற்றிக் கொள்ள வாக்களித்தது. இதன் நோக்கம் அனைத்து குடிமக்களின் சம உரிமைகளுக்காக, குறிப்பாக பெண்கள் மற்றும் கருப்பினத்தவர்களின் வாக்குரிமைக்காக பிரச்சாரம் செய்வதாகும்.[7]
பெண்களின் வாக்குரிமையை முதன்மையாகக் கொண்டிருந்த அமெரிக்க சம உரிமைகள் சங்க உறுப்பினர்கள் காலப்போக்கில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டனர். லூசி ஸ்டோன் என்ற முன்னணி நபரின் தலைமையில் இருந்த ஒரு பிரிவானது, கறுப்பின ஆண்களுக்கான வாக்குரிமையை முதலில் அடைவதற்குத் தயாராக இருந்தது. மேலும் குடியரசுக் கட்சியுடன் நெருங்கிய உறவைப் பேண விரும்பியது. ஸ்டாண்டன் மற்றும் அந்தோனி ஆகியோர் தலைமயிலான ஒரு குழுவினர் பெண்கள் மற்றும் கறுப்பின ஆண்களும் ஒரே நேரத்தில் வாக்குரிமை பெற போராடியது. மேலும் இக்குழுவினர் நிதி மற்றும் பிற ஆதாரங்களுக்காக ஒழிப்புவாதிகளைச் சார்ந்திருக்காத, அரசியல்ரீதியாக சுதந்திரமான பெண்கள் இயக்கத்தை நோக்கிப் பணியாற்றினார்.[8] 1868ம் ஆண்டில், அந்தோனியும் ஸ்டாண்டனும் நியூயார்க் நகரத்தில் வாராந்திர பெண்கள் உரிமைப் பத்திரிகையான தி ரெவல்யூஷன்[9] எனும் செய்திப் பத்திரிக்கையை வெளியிடத் தொடங்கினர். இது அவர்களின் இயக்கத்தின் பிரிவை ஆதரிப்பதற்கான முக்கிய கருவியாக மாறியது.
பெப்ரவரி 3, 1870 அன்று நிறைவேற்றப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பின் பதினைந்தாவது திருத்ததின்படி கருப்பின ஆண்களுக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஸ்டாண்டனும், அந்தோனியும் இந்த திருத்தத்தை எதிர்த்தனர். அனைத்து பெண்களும், அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஒரே நேரத்தில் வாக்கு உரிமை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஸ்டாண்டன் தி ரெவல்யூஷனின் பக்கங்களில் வாதிட்டார், அனைத்து பெண்களையும் தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுக்கும் உரிமை வழங்குவதன் மூலம், இந்த திருத்தமானது ஆண்களை பெண்களை விட உயர்ந்தவர்கள் என்ற கருத்துக்கு அரசியலமைப்பு அதிகாரத்தை வழங்கும் இது "பாலியல் பிரபுத்துவத்தை" உருவாக்குகிறது என்றார்.[10]
தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தின் உருவாக்கம்
[தொகு]1869ல் அமெரிக்க சமத்துவ உரிமை சங்கம் ஒரு மாநாட்டிற்குப் பிறகு சரிந்தது. மேலும் இரண்டு போட்டி பெண்கள் வாக்குரிமை அமைப்புகள் அதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டன. தேசிய பெண் வாக்குரிமை சங்கம் (NWSA) மே 15, 1869ல் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மைத் தலைவர்களாக அந்தோனி மற்றும் ஸ்டாண்டன் இருந்தனர்.[10] அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கம் (AWSA) நவம்பர் 1869ல் உருவாக்கப்பட்டது. அதன் முதன்மைத் தலைவராக லூசி ஸ்டோன் இருந்தார். ஸ்டாண்டனும், அந்தோனியும் பெண்களின் வாக்குரிமை இயக்கத்தின் தலைவர்களாக பரவலாக அறியப்பட்டனர் மற்றும் அதன் திசையை அமைப்பதில் அதிக செல்வாக்கு பெற்றனர்.[11]
தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தின் தலைவர்கள் ஆன்டனி மற்றும் ஸ்டாண்டன் உருவாக்கிய பெண்களின் விசுவாசமான தேசிய லீக் ஆகும். அதன் 5000 உறுப்பினர்கள் 1864ம் ஆண்டில் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான திருத்தத்திற்கு ஆதரவாக, நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய இயக்கத்தை நிறைவு செய்தனர்.[13][14] ஆன்டனி மற்றும் ஸ்டாண்டன் மாத ஊதியம் பெறும் உழைக்கும் பெண்கள் சங்கம் நிறுவினர்.
புதிய புறப்பாடு
[தொகு]1869ல், தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தின் உறுப்பினரான வர்ஜீனியா மைனர், மற்றும் அவரது கணவர் பிரான்சிஸ் ஆகியோர் பெண்களின் வாக்குரிமையை அடைவதற்கு பதினாறாவது திருத்தம் தேவையில்லை என்ற கருத்தை உருவாக்கினர். அவர்களின் அணுகுமுறை, புதிய புறப்பாடு என்று அறியப்பட்டது. இது பெண்கள் ஏற்கனவே அமெரிக்க அரசியலமைப்பின் மூலம் மறைமுகமாக உரிமை பெற்றுள்ளனர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது.[29] அவர்களின் மூலோபாயம் பதினான்காவது திருத்தத்தை பெரிதும் நம்பியுள்ளது. அதில் கூறப்படுவதாவது: "அமெரிக்காவின் குடிமக்களின் சலுகைகள் அல்லது விலக்குகளை குறைக்கும் எந்தவொரு சட்டத்தையும் எந்த மாநிலமும் உருவாக்கவோ அல்லது செயல்படுத்தவோ கூடாது ... அல்லது அதன் அதிகார வரம்பிற்குள் உள்ள எந்தவொரு நபருக்கும் சட்டங்களின் சமமான பாதுகாப்பை மறுக்க முடியாது. "
ஜனவரி 1871ல் அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கத்தின் வருடாந்திர மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இம்மாநாட்டில் அரசியலமைப்பு பெண்களுக்கு மறைமுகமாக உரிமை அளித்துள்ளது என்று தீர்ப்பளிக்க நீதிமன்றங்களைக் கேட்பதற்குப் பதிலாக, அதே இலக்கை அடைய ஒரு அறிவிப்புச் சட்டத்தை நிறைவேற்றுமாறு காங்கிரஸைக் கேட்டுக் கொண்டது.
வாக்குரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடுதல்
[தொகு]1872ம் ஆண்டில், சூசன் பி. அந்தோனி அதிபர் தேர்தலில் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கும்படி கோரினார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
சங்கத்தின் புகழ் பெற்ற உறுப்பினர்கள்
[தொகு]சூசன் பி. அந்தோனி மற்றும் எலிசெபத் கேடி ஸ்டேன்டோன் தவிர்த்த பிற புகழ் பெற்ற உறுப்பினர்கள்
-
வெர்ஜினியா மைனர்
-
எர்னஸ்டன் ரோஸ் [12]
-
மட்டில்டா ஜோஸ்லின் காஜ், தலைவர், தேசிய பெண் வாக்குரிமை சங்கம், ஆண்டு 1875–86,[13]
-
ஒலிம்பியா பிரவுன்
-
பவுலினா கெல்லாக் ரைட் டேவிஸ்[14]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ American Woman Suffrage Association
- ↑ Nineteenth Amendment to the United States Constitution
- ↑ 19th Amendment to the U.S. Constitution: Women's Right to Vote (1920)
- ↑ Buhle (1978), p. 90
- ↑ Stanton, Anthony, Gage (1887), Vol. 2, pp. 152–53
- ↑ American Equal Rights Association
- ↑ Stanton, Anthony, Gage (1887), Vol. 2 pp. 171–72
- ↑ DuBois (1978), pp. 80–81
- ↑ The Revolution (newspaper)
- ↑ Stanton, Anthony, Gage (1887), Vol. 2, p. 384.
- ↑ Dudden (2011), p. 12.
- ↑ Stanton, Anthony, Gage (1887), Vol. 2, p. 401.
- ↑ Stanton, Anthony, Gage (1887), Vol. 2, p. 585
- ↑ McMIllen, p. 106
ஊசாத்துணை
[தொகு]- Anthony, Susan B.; Harper, Ida Husted (1902), History of Woman Suffrage, Vol. 4, Rollenbeck Press, Indianapolis, Indiana.
- Barry, Kathleen (1988). Susan B. Anthony: A Biography of a Singular Feminist. New York: Ballantine Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-345-36549-6.
- Buhle, Mari Jo; Buhle, Paul editors (1978). The Concise History of Woman Suffrage. University of Illinois. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-252-00669-0.
- DuBois, Ellen Carol (1978). Feminism and Suffrage: The Emergence of an Independent Women's Movement in America, 1848–1869. Ithaca, NY: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-8641-6.
- DuBois, Ellen Carol (1998). Woman Suffrage and Women's Rights. New York: New York University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8147-1901-5.
- Dudden, Faye E., (2011). Fighting Chance: The Struggle over Woman Suffrage and Black Suffrage in Reconstruction America. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-977263-6.
- Flexner, Eleanor (1959). Century of Struggle. Cambridge, MA: Belknap Press of Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0674106536.
- Gordon, Ann D., ed. (2000). The Selected Papers of Elizabeth Cady Stanton and Susan B. Anthony: Against an aristocracy of sex, 1866 to 1873. Vol. 2 of 6. New Brunswick, NJ: Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-2318-4.
- Gordon, Ann D., ed. (2003). The Selected Papers of Elizabeth Cady Stanton and Susan B. Anthony: National protection for national citizens, 1873 to 1880. Vol. 3 of 6. New Brunswick, NJ: Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-2319-2.
- Gordon, Ann D. (2005). "The Trial of Susan B. Anthony" (PDF). Federal Judicial Center. பார்க்கப்பட்ட நாள் January 23, 2018.
- Griffith, Elisabeth (1985). In Her Own Right: The Life of Elizabeth Cady Stanton. Oxford University Press; New York, NY. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-503729-4
- McMillen, Sally Gregory (2008). Seneca Falls and the origins of the women's rights movement. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-518265-0
- Rakow, Lana F. and Kramarae, Cheris, editors (2001). The Revolution in Words: Righting Women 1868–1871, New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-25689-6.
- Scott, Anne Firor; Scott, Andrew MacKay (1982). One Half the People: The Fight for Woman Suffrage. Chicago: University of Illinois Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-252-01005-1.
- Sherr, Lynn (1995). Failure Is Impossible: Susan B. Anthony in Her Own Words. New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8129-2430-4
- Stanton, Elizabeth Cady; Anthony, Susan B.; Gage, Matilda Joslyn (1887), History of Woman Suffrage, Volume 2, Rochester, NY: Susan B. Anthony (Charles Mann printer).
- Tetrault, Lisa (2014). The Myth of Seneca Falls: Memory and the Women's Suffrage Movement, 1848-1898. University of North Carolina Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4696-1427-4.
- Venet, Wendy Hamand (1991). Neither Ballots nor Bullets: Women Abolitionists and the Civil War. Charlottesville, VA: University Press of Virginia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0813913421.
- Ward, Geoffrey C., with essays by Martha Saxton, Ann D. Gordon and Ellen Carol DuBois (1999). Not for Ourselves Alone: The Story of Elizabeth Cady Stanton and Susan B. Anthony. New York: Alfred Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-40560-7
வெளி இணைப்புகள்
[தொகு]- The Constitution of the National Woman Suffrage Association at the Library of Congress
- The Declaration of Rights of the Women of the United States - July 4, 1876, presented at the official celebration of the 100th anniversary of the Declaration of Independence, from the Carrie Chapman Catt Center for Women and Politics at Iowa State University