உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய பால் வள வாரியம், ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரோடு தேசிய பால் வள வாரியம் (Erode National Dairy Development Board) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சூரியம்பாளையத்தில் அமைந்துள்ளது. தென் மண்டல செயல் விளக்கம் மற்றும் பயிற்சி மையம் இங்கு செயல்பட்டு வருகிறது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் இந்திய நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்நிறுவனம் இயங்குகிறது.[1] இந்நிறுவனம் ஒவ்வொரு மாநிலத்திலும், சிறந்த பால் உற்பத்தியாளர்களை தேர்வு செய்து, குசராத்தில் களப் பயிற்சி அளிக்கிறது.

வரலாறு[தொகு]

தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் 1965 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. டாக்டர் வர்கீசு குரியனால் இந்நிறுவனம் நிறுவப்பட்டது.[2] [3]லால் பகதூர் சாசுத்திரியின் கனவான கைரா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் மூலம் நிறைவானது. ஒன்றிய அரசின், 'ஆத்மா' எனும், விவசாய தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில், தமிழத்தில் இருந்து, 320 பால் உற்பத்தியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஈரோடு மாவட்டம் பூந்துறை, முத்தூர், சிவகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த, எட்டு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்றனர்.

பால் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி[தொகு]

சிறந்த பால் உற்பத்தியாளர்கள் குறிப்பாக, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு, ஒன்றிய அரசு தேசிய பால்வள வாரியத்தின் மூலம், பால் மேலாண்மை பயிற்சி அளிக்கிறது. தேசிய பால்வள வாரிய அலுவலகத்தில், பால்பண்ணை கூட்டுறவு அமைப்பு சட்டங்கள், கால்நடைகள் பாதுகாப்பு, நோய் தடுப்பு முறைகள், தீவன தயாரிப்பு, கூட்டுறவு பால் உற்பத்தியில் பெண்களின் பங்கு , கூட்டுறவு சங்க பால் விற்பனை மையத்தில் நேரடி கள ஆய்வு, மாட்டுப் பண்ணைகளில் கள ஆய்வு, கழிவு நீரிலிருந்து பசுந்தீவனம் உற்பத்தி குறித்த பயனுள்ள பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dilip Rath appointed as NDDB chairman", The Times of India, 2016-12-02, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-8257, பார்க்கப்பட்ட நாள் 2024-06-21
  2. "தேசிய பால்வள தினம்: குரியனுக்கு மரியாதை". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2015/Nov/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95-1229922.html. பார்த்த நாள்: 21 June 2024. 
  3. "தேசிய பால் தினம்: வர்கீஸ் குரியனுக்கு ஆவின் மரியாதை.. யார் இந்த குரியன்..?". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/delhi/avin-milk-packets-for-sale-with-varghese-kurien-photo-on-national-milk-day-440391.html. பார்த்த நாள்: 21 June 2024.