தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | தேசிய பாதுகாப்பே முதன்மையானது |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் |
|
Academic affiliation | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
பணிப்பாளர் | பேராசிரியர். முனைவர். பிமல். என். படேல்[1] |
அமைவிடம் | , , , 382305 , 23°09′16″N 72°53′06″E / 23.1544554°N 72.884999°E |
வளாகம் | கிராமப்புறம் |
இணையதளம் | rru |
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (Rashtriya Raksha University), முன்னர் இதனை 2009-2020 வரை ரக்சா சக்தி பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் காந்திநகர மாவட்டத்தின் தலைமையிடமான் காந்திநகரின் கிராமப்புறத்தில் அமைந்துள்ளது.[2] இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்காக குஜராத் மாநில அரசால் 2009-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைழகத்தை அப்போதைய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி 22 சூலை 2010 அன்று திற்ந்து வைத்தார்.[3] 2020-ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தை இந்திய அரசின் கீழ் வந்ததது.[2]
இப்பல்கலைக்கழகம் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான படிப்புகளில் இளைநிலை மற்றும் முதுநில பட்டப் படிப்புகளும், முதுகலை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்குகிறது.[4]
2020-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் இப்பல்க்லைக்கழகம் தேசிய முக்கிய்த்துவம் வாய்ந்த நிறுவனமாக கருதப்படுகிறது.[5]
தேசிய பாதுகாப்புப் படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
[தொகு]பயங்கரவாத எதிர்ப்பு, மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் மற்றும் கடத்தல் தடுப்பு ஆகியவற்றுள் தேசிய பாதுகாப்புப் படையின் முக்கிய திறன்களை வலுப்படுத்தும் நோக்கில்ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய பாதுகாப்புப் படை இப்பல்கலைக்கழகத்துடன் 11 சூன் 2021 அன்று கையெழுத்திட்ட்டுள்ளது.[6]
பயிற்றுவிக்கும் துறைகள்
[தொகு]- உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல் நிர்வாகம் (School of Internal Security and Police Administration (SISPA)
- தகவல் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத்திறன் மற்றும் கனிணிப் பாதுகாப்பு (School of IT, Artificial Intelligence and Cyber Security (SITAICS)
- ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடல் பாதுகாப்பு படிப்புகள் (School of Integrated Coastal and Maritime Security Studies (SICMSS)
- உள்நாட்டு பாதுகாப்பு, இராணுவம் மற்றும் மூலோபாயப் படிப்புகள் ( School of Internal Security, Defence and Strategic Studies ( SISDSS)
- தடய அறிவியல், பேரிடர் மேலாண்மை & தேசியப் பாதுகாப்பு (School of Forensics, Risk Management & National Security(SFRMNS)
- பன்னாட்டுக் கூட்டுறவு, பாதுகாபு மற்றும் மூலோபாயப் மொழிகள் (School of International Cooperation, Security and Strategic Languages (SICSSL)
- குற்றவியல் மற்றும் நடத்தை அறிவியல் (School of Criminology and Behavioural Sciences (SCBS)
- பாதுகாப்பு, சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் நீதி (School of Security, Law Enforcement and Criminal Justice (SSLECJ)
- பயன்பாட்டு அறிவியல்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (School of Applied Sciences , Engineering and Technology (SASET)
- பாதுகாப்பு மற்றும் அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் (Security And Scientific Technical Research Association(SASTRA)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Professor Dr. Bimal N. Patel as a Director General of RSU". Archived from the original on 2020-11-24. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ 2.0 2.1 "Gujarat: RSU accorded national status, is now Rashtriya Raksha University". 22 September 2020.
- ↑ "Modi inaugurates police varsity as the news breaks". இந்தியன் எக்சுபிரசு. 23 July 2010. http://archive.indianexpress.com/news/modi-inaugurates-police-varsity-as-the-news-breaks/650640/.
- ↑ "Courses offered by Raksha Shakti University". Archived from the original on 2020-12-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ "The Rashtriya Raksha University Bill, 2020". 23 March 2020. https://www.aninews.in/news/national/general-news/rashtriya-raksha-university-bill-introduced-in-ls20200323191135//.
- ↑ NSG signs MoU with Rashtriya Raksha University