உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
கொடி of தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகளின்
கொடி
சின்னம் of தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகளின்
சின்னம்
குறிக்கோள்: "Leo Terram Propriam Protegat"  (இலத்தீன்)
"Let the Lion protect his own land"
or "May the Lion protect his own land"
நாட்டுப்பண்: "கோட் சேவ் த குயிண்"
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகளின்அமைவிடம்
தலைநகரம்Grytviken (King Edward Point)
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
அரசாங்கம்பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதி
• அரச தலைவர்
இரண்டாம் எலிசபெத்
• அதிகாரி
நைஜல் ஹேவுட்
பரப்பு
• மொத்தம்
3,903 km2 (1,507 sq mi)
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
~20 (n/a)
• அடர்த்தி
0.005/km2 (0.0/sq mi) (n/a)
நாணயம்ஸ்டேலிங் பவுண்ட் (GBP)
நேர வலயம்ஒ.அ.நே-2
இணையக் குறி.gs

தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிள் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியாகும்.இந்த தீவானது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாலுமி ஜேம்ஸ் குக் என்பவரால் 1770 ல் கண்டறியப்பட்டது. இது தெற்கு யோர்சியா என்ப்படும் சுமார் 106.25 மைல் (170 கி.மீ.) நீளமும், 18 மைல் (29 கி.மீ.) அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவையும் தெற்கு சண்ட்விச் தீவுகள் எனப்படும் அளவில் சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டது. இவ்வாட்சிப் பகுதியில் பாரம்பரியக் குடிகள் யாரும் கிடையாது, பிரித்தானிய அரச அலுவலர், பதில் தாபல் அதிகாரி, வேதியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அண்டார்டிக்கா ஆய்வு நிறுவனத்தின் துணை சேவையாளர்கள் மாத்திரமே இங்கு வசிக்கின்றனர்.[1][2][3]

ஐக்கிய இராச்சியம் தெற்கு யோர்சியாவுக்கு 1775 முதல் முடியுரிமையக் கொண்டுள்ளதோடு, தெற்கு சண்ட்விச் தீவுகள் 1985 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டதாகும். 1985 இற்கு முன்னர் தெற்கு சண்ட்விச் தீவுகள் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான போக்லாந்து தீவுகளின் சார்புப் பகுதியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆர்ஜென்டீனா 1927 ஆம் ஆண்டு தெற்கு யோர்சியாவுக்கும் 1938 ஆம் ஆண்டு தெற்கு சண்ட்விச் தீவுகளுக்கும் உரிமை கோரியது. 1976 முதல் 1982 இல் பிரித்தானிய கடற்படையால் மூடப்படும் வரை ஆர்ஜென்டீனா தெற்கு சண்ட்விச் தீவுகளில் ஒரு கடற்படைத்தளத்தையும் பேணி வந்த்தது. ஆர்ஜென்டீனாவின் தெற்கு யோர்சியா மீதான உரிமைக் கோரல் 1982 ஆம் ஆண்டு போக்லாந்துப் போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. South Georgia and the South Sandwich Islands, CIA World Factbook, 2002.
  2. "South Georgia & the South Sandwich Islands – Current Status". Government of South Georgia and the South Sandwich Islands (GSGSSI). பார்க்கப்பட்ட நாள் 31 May 2016. There are no permanent residents in the Territory but the British Antarctic Survey (BAS) operates two bases on South Georgia. The base at King Edward Point (KEP) is operated under contract to GSGSSI and the FCO and is staffed by eight BAS personnel, plus two GSGSSI officers and their spouses. Bird Island has a year round complement of four BAS personnel who undertake long-term monitoring of seabirds and marine mammals. The South Sandwich Islands are uninhabited, though an originally undetected, and subsequently allowed, manned Argentinean research station was located on Thule from 1976 to 1982.
  3. "The South Georgia and South Sandwich Islands Order 1985".