தெரசி தெறி குசேரா
தெரெசி தெறி குசேரா (Therese Terry Kucera) ஓர் அமெரிக்க வாணியலாளர் ஆவார், இவர் நாசாவின் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தின் சுரிய இயற்பியல் ஆய்வகத்தில் பணிபுரிகிறார். இவரது ஆய்வு சூரிய வளிமண்டலம் பற்றியும் சூரியத் தழல், தழல் குழிகளிலும் கவனம் குவிக்கிறது. இவர் இப்போது நாசாவின் STEREO திட்டத்தின் அறிவியலாளராக உள்ளார்.[1]
இவர் பவுல்டரில் உள்ள கொலராடு பல்கலைக்கழகத்தில் சூரியத் தழல்களின் கதிர்வீச்சு உமிழ்வு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதும் 1993 இல் நாசாவில் சேர்ந்தார் . இவர் தன் தன் முதுமுனைவர் பட்ட ஆய்வாக சூரியதழல் புதிர்க்கதிர் ஆய்வைத் தொடர்ந்தார். இவர் 1995 இல் சூரிய, எல்லியக்கோள நோக்கீட்டகத்துக்கான CDS, SUMER EUV கதிர்நிரல் கருவிகள் குழுவில் சேர்ந்தார். இவர் அமெரிக்க இணைதிட்ட அறிவியலாளராகப் பணிபுரிந்தூள்ளார். இவர் நாசா தலைமையகச் சூரியப் புல அறிவியலாளராகவும் உள்ளார். இவர் நாசா அறிவியல் திட்ட இயக்குநரகத்தில் கல்வியாளராகவும் மக்கள் அறிவியல் பரப்புரை மேலாளராகவும் உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bio - Therese Ann Kucera". science.gsfc.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-22.