தெரசா இலாகோ
தெரசா இலாகோ Teresa Lago | |
---|---|
இயற்பெயர் | தெரசா இலாகோ |
பிறப்பு | மரியா தெரசா வாழ்சு தொறாவோ இலாகோ 1947 இலிசுபோவா |
தேசியம் | போர்த்துகீசியர் |
துறை | வானியற்பியல், வானியல் |
பணியிடங்கள் | போர்த்தோ பல்கலைக்கழகம்]], பன்னாட்டு வானியல் ஒன்றியம் |
தெரசா இலாகோ (Teresa Lago) (பிறப்பு: 1947) போர்த்துகீசிய வானியலாளர் ஆவார். போர்த்தோ பல்கலைக்கழகத்தில் இவர் வானியற்பியல் மையத்தை நிறுவினார். இவர் போர்த்துகல் நகரில் முதல் வானியல் இளவல் பட்டத்தையும் தொடங்கினார்l. இவர் இப்போது பன்னாட்டு வானியல் ஒன்றியப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.[1] இவரது ஆய்வு இளம் விண்மீன்களின் படிமலர்ச்சியிலும் மக்களிடம் வானியல், அறிவியல் பண்பாட்டை வென்றெடுப்பதிலும் கவனத்தைக் குவிக்கிறது.
வாழ்க்கைப்பணி
[தொகு]மரியா தெரசா வாழ்சு தொறாவோ இலாகோ போர்த்தோ பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டமும் 1979 இல் சுசெக்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வான , டி டவுரி விண்மீன்களின் நோக்கீட்டு, கோட்பாட்டியல் ஆய்வு இலியோன் மாசுதெல்லின் வழிகாட்டலின் கீழ் செய்யப்பட்ட்து.[2] இவர் 1983 இல் போத்துகல், போர்த்தோ பல்கலைக்கழகத்தில் முதல் வானியல் பட்டப் படிப்பைத் தொடங்க வைத்தார். இங்கே இவர் பேராசிரியராகத் தொடர்கிறார். இவர் 1988 இல் அப்பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் மையத்தை உருவாக்கி அதில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.[3] இவர் போர்த்துகல் நாடு ஐரோப்பியத் தெற்கு நோக்கீட்டகத்தோடு ஒருங்கிணைந்து செயல்படும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பெரிதும் பாடுபட்டுள்ளார்.[4]
ஐரோப்பிய விண்வெளி முகமையின்விண்வெளி அறிவியல் அறிவுரைக்குழு, டபுளின் உயராய்வு நிறுவன அண்ட இயற்பியல் பள்ளி வாரியம் உள்ளடங்கிய பல அயல்நாட்டு ஆராய்ச்சி, அறிவுரை அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.[5] இவர் ஐரோப்பிய ஆராய்ச்சி மன்றத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார்.[6]இவர் ஐரோப்பிய ஆராய்ச்சி மன்ற பாலினச் சமமைக் குழுவின் தலைவராகவும் விளங்கியுள்ளார்.[7]
இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியச் செயற்குழு உதவிப் பொதுச் செயலாளர்,, சிறப்பு ஆளெடுப்புக் குழு அறிவுரைஞர் போன்ற பதவிவிகளில் இருந்துள்ளார்.[8] இவர் 2018 இல் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக விளங்கினார்.[9]
இவர் பிரித்தானியாவின் அரசு வானியல் கழகத்திலும் ஐரோப்பியா கல்விக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார்.[5]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]அமெரிக்க வானியல் கழகம் 1985 இல் இவருக்கு என்றி கிரேழ்சியன் நிதிநல்கையை வழங்கியது.[10] அறிவியல் பண்பாட்டை வளர்த்தெடுத்தமைக்காக இவருக்கு சியேன்சியா விவா மாந்தெப்பியோ விருது 2018 இல் தரப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Astronomer Teresa Lago is the winner of the 2018 Ciência Viva Montepio Grand Prize". International Astronomical Union. 12 November 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ "(Maria) Teresa Lago". The Mathematics Genealogy Project. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ "Staff: Maria Teresa V. T. Lago". Centro de Astrofísica da Universidade do Porto. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ "Teresa Lago amongst friends". Instituto de Astrofísica e Ciências do Espaço. 9 October 2017. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ 5.0 5.1 "Biographies of Members of the Scientific Council". Commission Européenne. 18 July 2005. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ "Dedicated to excellence: the ERC's Scientific Council". European Commission. 2007. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ "GS1 Speakers: Prof Teresa Lago (GS1Eu)". Gender Summit Europe 2011.
- ↑ "Maria Teresa V. T. Lago". International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ "IAU XXX General Assembly Draws to a Close". International Astronomical Union. 31 August 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
- ↑ "Chrétien International Research Grants". American Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.